படர்க்கை என்றால் என்ன

padarkkai in tamil

படர்க்கை என்றால் என்ன

மூவிடப் பெயர்களை தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இவற்றுள் படர்க்கையும் ஒன்றாகவே திகழ்கின்றது. படர்க்கையானது அடுத்தவரை சுட்டுவதாக காணப்படுகின்றது எனலாம். படர்க்கையானது எங்கோ இருக்கும் ஒருவரை சுட்டக்கூடியதாக அமைகின்றது.

படர்க்கை என்றால் என்ன

படர்க்கை என்பது எங்கோ இருப்பவரைப் பற்றி கூறுவது படர்க்கை என குறிப்பிடலாம். அதாவது தன்னையும் குறிக்காமல், தன் முன் இருப்பவரையும் குறிக்காமல் அடுத்தவரைக் கூறுவதே படர்க்கை இடமாகும்.

உதாரணமாக : அவன், அவர்கள், அது, அவள்

 • அவன் வேகமாக விளையாடினான்
 • இது அவருடைய பெட்டி
 • அவள் பாடினாள்
 • அவர்கள் அங்கு சென்றார்கள்.

படர்க்கையின் இயல்புகள்

படர்க்கையானது பால் வேறுபாட்டினை காட்டக் கூடியது.

 • அவன் வந்தான் – ஆண்பால்
 • அவள் வந்தாள் – பெண்பால்
 • அவர்கள் வந்தார்கள் – பலர்பால்
 • அது பறந்தது – ஒன்றன் பால்

ஒருமை மற்றும் பன்மையிலும் வரக்கூடியவை ஆகும்.

படர்க்கை ஒருமை சொற்கள் – அவன், அவள், அது என்பவற்றை சுட்டி நிற்கின்றது.

 • உதாரணம் – அவன் பாடினான், அவள் ஆடினாள், அது ஓடியது

படர்க்கை பன்மை சொற்கள் – அவை, அவர்கள் போன்றனவாகும்.

 • உதாரணம் – அவை பறந்தன, அவர்கள் விளையாடினார்கள்

உயர்தினை, பலர் பாலிலும் படர்க்கை இடமானது இடம் பெறும்.

 • உதாரணம் – அவர்கள் – மாணவர்கள் படித்தார்கள்

அஃறினை, ஒன்றன் பாலிலும் படர்க்கை இடமானது இடம் பெறும்.

 • உதாரணம் – மான் ஓடியது, நாய் குறைத்தது, கிளி பறந்தது.

அஃறினை, பலவின் பாலிலும் படர்க்கை இடமானது இடம்பெறும்.

 • உதாரணம் – மான்கள் ஓடின, பறவைகள் பறந்தன.

படர்க்கை பெயராகவும், வினையாகவும் இடம் பெறும்.

படர்க்கை பெயர்

 • உதாரணம் – அவன், அவள், அவர், அது, அவை
 • அவன் விளையாடினான், அவள் பாடினாள், அவை ஓடின, அவர் வந்தார்

படர்க்கை வினை

 • உதாரணம் – வந்தான், சென்றான், பறந்தது, பறந்தமை, பேசினார்கள், படித்தனர்
 • அவன் வந்தான், கிளி பறந்தது, அவர்கள் பேசினார்கள்

படர்க்கை சொற்களானது வேற்றுமை உருபை ஏற்று வரக்கூடியதாகும்.

 • உதாரணம் – அவனை, ஆல், கு, இன், அது போன்ற வேற்றுமை உருபுகளை ஏற்று வரும்.

படர்க்கை சொற்களானது மூன்று காலங்களிலும் மாற்றமடைந்து வரக்கூடியதாகும்.

 • உதாரணம் – செய்தான், செய்கிறான், செய்வான்
 • அவன் நாளைக்கு செய்வான், அவர்கள் எழுதுகின்றார்கள், அவள் பாடம் படித்தாள்

படர்க்கை இடத்தின் முக்கியத்துவம்

மூன்றாம் நபருடைய பார்வை நடுநிலைத் தன்மையுடன் கூடிய தொனியை உருவாக்க கூடியதாக காணப்படல்.

சொல்பவருக்கும் கதை நிகழ்வுக்கும் இடையேயுள்ள தூர உணர்வை வழங்குகின்றது.

படர்க்கை இடமானது மூன்று காலங்களிலும் இடம்பெறுவதால் முக்காலங்கள் பற்றிய சரியான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள கூடியதாக காணப்படுகின்றது. மேலும் படர்க்கையானது உயர்தினை மற்றும் அஃறினை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தினை ஏற்படுத்தி தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

படர்க்கை இடத்திற்கு ஏற்றாற் போல் வினைச்சொற்களானது மாறுபடும். உதாரணமாக படித்தனர், பாராட்டினாள் போன்றவற்றை குறிப்பிடலாம். பிரதிப் பெயர்ச்சொற்களை தகுந்த முறையில் பயன்படுத்த மூவிடங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமானதாகும்.

படர்க்கையானது சிறந்த முறையில் ஒரு விடயத்தை சுட்ட பயன்படும். இந்த படர்க்கையானது வேறு எங்கேயோ உள்ள ஒருவரை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

You May Also Like:

தம்மனை என்றால் என்ன

இயல் என்றால் என்ன