பண்பாடு என்றால் என்ன

panpadu enral enna in tamil

ஒவ்வொரு மனிதனும் பண்பாட்டுடன் வாழ்வது அத்தியவசியமான ஒன்றாகும். அதாவது ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித் தன்மையான பண்பாடானது காணப்படுகின்றது. அதாவது இப்பண்பாடானது ஒவ்வொரு சமூகத்தினருடைய தனித் தன்மைகளை எடுத்துக் கூறுவதாக காணப்படும்.

மனிதனானவன் சமூகத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறான். அந்த அடிப்படையில் அவன் எண்ணங்கள், வாழ்க்கைமுறை, மொழி போன்ற விடயங்களானது அவருடைய பண்பாட்டினை வெளிப்படுத்தக் கூடியதாக அமைகிறது.

பண்பாடு என்றால் என்ன

ஒரு சமூகத்தினுடைய சமயம், பாரம்பரியம், பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடியதே பண்பாடாகும்.

பண்பாட்டினை நாகரீகத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் குறிப்பிடுவோமயானால் பண்பாடு என்பது உலக நடப்பிற்கு ஏற்றாற் போல் ஒத்துப்போவதனையே பண்பாடு என குறிப்பிடலாம்.

பண்பாட்டின் அவசியம்

பண்பாடானது ஒரு சமூகத்தினை அவர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அறிவதற்கு பண்பாடானது அவசியமாகின்றது. அதாவது ஒருவருடைய நடைமுறைச் செயற்பாட்டினை நோக்குவதன் மூலமாக இதனை அறிந்து கொள்ளலாம்.

ஒரு சமூகத்தினருடைய தனித்தன்மையினை வெளிப்படுத்துவதற்கு பண்பாடு அவசியமாகின்றது. ஏனெனில் பண்பாடு என்பது அனைவருக்கும் மிக முக்கியமானதொன்றாகும்.

பண்பாடானது தங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்களை பிறரிடத்தில் தெளிவுபடுத்த துணைபுரிகின்ற ஒன்றாகவே திகழ்கின்றது. அதாவது எமது எண்ணங்கள் சிறப்புற அமைவதற்கும் பண்பாடு அவசியமாகின்றது.

மனிதனுடைய புதிய கண்டுபிடிப்புக்களை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கும் பண்பாடு அவசியமாகின்றது. அதாவது ஒரு மனிதனைப் பற்றி சிறந்த புரிதல் ஏற்பட பண்பாடனது துணைபுரிகின்றது.

மனித சமூகமானது ஒரு கட்டுக் கோப்பிற்குள் அமைத்து அதனுடாக ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறைமைகள், எண்ணங்கள், மொழி போன்றவற்றை சுட்டிக்காட்ட பண்பாடானது அவசியமாகின்றது.

சமூகமும் பண்பாடும்

சமூகமும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளாவே காணப்படுகின்றது எனலாம். அதாவது ஒரு சமூதாய மக்களுடைய உணவு முறைமை, மொழி, வாழ்க்கை முறைமை, சிந்தனைகளை உள்ளடக்கியதாகவே பண்பாடானது காணப்படுகின்றது.

அதாவது ஒரு சமூகத்தினருடைய உணவுப் பழக்கவழக்கமானது ஏனையவர்களுடைய உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்து வேறுபட்டதாகவே காணப்படும்.

ஒரு தனிமனிதனானவன் தான் அணியும் ஆடைகளின் அடிப்படையிலும் அவன் எந்த நாட்டை சோர்ந்தவன் எச் சமயத்தை சேர்ந்தவன் என்பதனை அறிந்து கொள்ளலாம். இவையும் சமூக பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த தன்மையினையே சுட்டி காட்டுகின்றது.

ஒரு சமூகத்தினருடைய பழக்கவழக்கங்கள், விளையாட்டு திறன், ஆளுமை பண்புகள் மற்றும் வாழ்வியல் முறைமை என ஒரு தனி மனிதனின் அனைத்து செயற்பாடுகளிலும் பண்பாடானது தாக்கத்தினை செலுத்துகின்றது.

பண்பாடும் சமூகமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக காணப்படுவதோடு பண்பாடு இல்லாமல் சமூகமே இல்லை என கூறலாம்.

பண்பாட்டின் இயல்புகள்

பண்பாடானது தம்முடைய பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள், மதிப்புக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடியவைகளாக காணப்படுவது பண்பாட்டின் இயல்புகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனிப்பட்ட ரீதியிலான பண்பாடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொருவருடைய தனிதன்மையுடன் கூடியதாகவே காணப்படுகின்றது.

இப்பண்பாடானது கால சூழலுக்கு ஏற்றாற்போல் மாறக்கூடிய தன்மை கொண்டதாக காணப்படுவதோடு மனித சமூகத்தினுடைய கடந்த காலம் மற்றும் எதிர்கால அடைவுகளின் வளர்ச்சியினையும் பண்பாடானது இயல்புகளாக கொண்டு செயற்படுகின்றது.

You May Also Like:

புத்தகம் பற்றிய கட்டுரை