பயில்வான் ரங்கநாதன் ஒரு பத்திரிகையாளர். இவர் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் காமெடியன் மற்றும் வில்லனாக வலம் வந்தவர். தற்போது சினிமாவில் நடிப்பதில்லை.
இவர் சினிமாவில் உள்ள ஒவ்வொருவர்கள் பற்றியும் விமர்சனம் செய்து வருகின்றார். பாடகி சுசித்திரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல நடிகர்களை பற்றி கூறியிருப்பார்.
என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார். பயில்வனுக்கு கொடூரமான மரணம் வரவேண்டும் என்று பயில்வனை பற்றியும் கூறியிருப்பார்.
தற்ப்போது இவர் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை பற்றி தவறாகவும் அவர்களின் தனிப்பட்ட விடையங்களை பற்றியும் பேசி வருகின்றார். இதனால் இவரை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இவ்வாறு தான் விஷாலிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் இவர் கேள்வி கேட்ட போது விஷால் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது என்று கூறிவிட்டார்.
இதன் பின்னர் பயிலவனுக்கும் சகிலாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டது. ஷகிலா இவரிடம் மற்றவங்களை பற்றி பேசுறீங்க உங்கவீட்டில என்ன நடக்குது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பெண் ஒரு பெண்ணை காதலிக்கின்றார். அது உங்களுக்கு தெரியுமா? என்று அவரை தாக்கி பேசியுள்ளார்.
இதற்கு பயில்வான் பேட்டி ஒன்றில் ஷகிலா சொன்னது எல்லாமே பொய். சொன்ன அவங்க வாய் அழுகிடும் என்று சொல்லி இருக்கின்றார்.
இவ்வாறு இருக்க தன்னுடைய இளைய மகளுக்கு நிச்சயார்த்தம் நடந்து விட்டது என்றும். அவரின் மகள் மற்றும் மருமகனுடன் இவர் மற்றும் இவரின் மனைவி நிற்கும் நிச்சயார்த்த புகை படத்தை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Be the first to comment