பிளாஸ்மா என்றால் என்ன

பிளாஸ்மா

பிளாஸ்மாவானது இரத்தத்தில் காணப்படும் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. உடலிற்கு தேவையான பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்களை எடுத்துச் செல்வதே இதன் முக்கிய பணி ஆகும்.

பிளாஸ்மா என்றால் என்ன

பிளாஸ்மா என்பது எமது உடலில் உள்ள இரத்தத்தில் காணப்படும் ஒரு திரவமே பிளாஸ்மாவாகும். இது மஞ்சள் நிறத் தன்மையினை கொண்டதாக காணப்படுவதோடு இதனுள் ஆல்புமின், பைபிரினோ ஜென், குளோபுலின் என 3 புரதப் பொருள்கள் காணப்படுகின்றன.

பிளாஸ்மாவானது நீர் மற்றும் உப்புக்கள், நொதிகளை கொண்டதாகும். இது இரத்த ஓட்டத்தின் மூலம் இரத்தத்தின் அனைத்து பகுதிகளையும் கொண்டு செல்லக் கூடிய ஒரு திரவமாகும்.

ஆரோக்கியத்தில் பிளாஸ்மாவின் பங்கு

பிளாஸ்மாவானது பல கடுமையான உடல் ரீதியான பிரச்சினைகளுக்கான சிகிச்சையின் முக்கிய பகுதியாக தொழிற்படுகின்றது. பிளாஸ்மாவின் கூறுகளான ஆல்புமின், பைப்பிரினோஜன், குளோபுலின் போன்றவை பல நோய்களுக்கான சிகிச்சைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் பிளாஸ்மாவில் காணப்படுகின்ற புரதங்களானவை நாட்பட்ட நோய் நிலைமைகளுக்கான சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஹீமோபிலியா நோய் நிலை உள்ளவர்கள் கூட நீண்ட காலம் வாழ்வதற்கு துணைபுரியக் கூடியதாகவும் எமது ஆரோக்கியத்தை பேணக் கூடியதாகவும் பிளாஸ்மாவானது காணப்படுகின்றது.

பிளாஸ்மாவின் முக்கியத்துவம்

பிளாஸ்மாவானது எமது உடல் பாகங்களுக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், புரதங்களை வழங்குவதில் பிரதானமான இடத்தை வகிக்கின்றது. மேலும் ஒக்சிஜன் மற்றும் காபனீரொட்சைட்டை பரிமாற உதவுகிறது.

உடலில் உள்ள இரத்த நாளங்கள் அடைப்பதில் இருந்து எம்மை காக்க துணைபுரிகின்றது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சுழற்சியை பராமரிப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

உயிரணுக்களில் இருந்து கழிவுகளை அகற்றி கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று வெளியேற்றுகின்றதோடு இரத்தம் உறைவதற்கும் உதவுகின்றது.

பக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய் தொற்றுக்களில் இருந்து எம்மை காப்பதற்கு துணை செய்கின்றது.

உடலில் நாம் இழந்த இரத்தத்தை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வதற்கும் பிளாஸ்மாவானது முக்கியமானதாகவே திகழ்கின்றது.

பிளாஸ்மாவில் உள்ள புரதங்களும் அதன் பயன்பாடும்

அல்புமின்

இது உடலில் காணப்படும் இரத்த நாளங்களில் உள்ள திரவத்தை சிறப்பாக வைத்திருப்பதோடு அதனை திசுக்களில் கசிய விடாது உடல் முழுவதும் ஹார்மோன்கள், விட்டமின்களை கொண்டு செல்வதற்கு உதவுகின்றது.

குளேபுலின்

புரதமானது பக்டீரியா, வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து எமது உடலை பாதுகாக்கின்றது.

பைப்ரினோஜென்

பிளாஸ்மாவில் உள்ள புரதமானது இரத்தப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றது.

பிளாஸ்மாவும் பிளேட்லெட்டும்

பிளாஸ்மாவின் கலவையாகவே பிளேட்லெட்கள் காணப்படுகின்றன. பிளேட்லெட்கள் காயங்களை குணப்படுத்துவதற்கு உதவுகின்றது.

மேலும் காயம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இரத்தத்தை உறைய வைக்கும் வேலையினை பிளேட்லெட்டுகள் மேற்கொள்கின்றன.

பிளேட்லெட்கள் இரத்தம் ஏற்பட்டுள்ள இடத்தை சுற்றி வலை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக இரத்தம் கசிவதை தடுக்கின்றது.

எனவேதான் இவ்வாறாக எமது உடலை சீராக வைத்திருக்கும் பிளாஸ்மாவை சிறப்பாக வைத்திருப்பது எமது கடமையாகும்.

அந்த வகையில் நாம் நிறைய தண்ணீர் குடிப்பதோடு மட்டுமல்லாமல் நீரேற்றமாக இருத்தல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், சிறந்த சுகாதாரத்தை பேணல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின்களை எடுத்து கொள்ளல் போன்றவற்றின் மூலமாக எமது உடலில் உள்ள பிளாஸ்மாவை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

You May Also Like:

பொடுகு வர காரணம் என்ன

மன அழுத்தம் குறைய எளிய வழிகள்