பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்

pengal kanavil vanthal enna palan

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஓய்வின்றி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் மானிடர்கள் வாழ்வில் போதியளவு தூக்கம் சிறந்த ஓய்வினைப் பெற வழிவகுக்கும்.

தூக்கத்தில் கனவு என்பது சாதாரணமான விடயம் ஆகும். கனவுகளில் பற்பல விதங்களில் கனவுகளில் வெவ்வேறு வகையான பெண்கள் வருவதனால் கிடைக்கும் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

சுமங்கலிப் பெண்கள் கனவில் வருவதன் பலன்கள்

சுமங்கலிப் பெண்கள் நல்ல மற்றும் சுப காரியங்களின் அம்சமாகக் கருதப்படுகின்றது. சுமங்கலிப் பெண்கள் கனவில் வருவதால் வாழ்க்கையில் பல வகையான நல்ல விடயங்கள் நடக்கும். மேலும் ஆடை, ஆபரணங்கள் சேரும். மேலும் சுப காரியங்கள் நடந்து ஈடேறும் என்று நம்பப்படுகின்றது.

கர்ப்பிணிப் பெண்கள் கனவில் வருவதன் பலன்கள்

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் இதுவரை காலமும் தடைகளை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த நபரது வாழ்வில் இனிமேல் பல முன்னேற்றப்பாதைகளுக்கு வழி வகுக்கும். முன்னேற்றப் பாதைகளுக்கான அறிகுறிகளைக் காட்டவே கர்ப்பிணிப் பெண்கள் கனவில் வருவார்கள்.

பெண் குழந்தை பிறப்பது போன்ற கனவு வருவதன் பலன்கள்

யாராயினும் ஒரு நபர் யாராவது ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறப்பது போன்ற கனவுகள் வந்தால் அவரது வாழ்க்கையில் இருந்த கஸ்டங்கள் எல்லாம் நீங்கி இனி வாழ்க்கையில் முன்னேற்றங்களை காணப்போவதன் அறிகுறியாகும்.

மேலும் அவ்வளவு காலமும் இருந்த பணக்கஷ்டங்கள் நீங்கி பணவரவு மற்றும் தொழிலில் முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் நடைபெறும் மேலும் குடும்பங்களில் காணப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்பது நம்பிக்கை.

ஆடையில்லாத பெண் கனவில் வருவதன் பலன்கள்

யாருடையாவது ஒருவரின் கனவில் ஒரு பெண் ஆடையில்லாமல் நிர்வாணமாக வருவது போன்று கனவு கண்டால் அவர்களது வாழ்வில் இனிமேல் பிரச்சினைகள் வரப்போகின்றது என அர்த்தம். மேலும் தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதோடு செயல்களில் கவனம் தேவை என்றும் எச்சரிக்கை செய்யப்படுகின்றது.

ஒரு பெண் தன்னுடைய கணவருடன் இருப்பது போன்ற கனவு வருவதன் பலன்

யாருடைய கனவிலாவது ஒரு பெண் தன்னுடைய கணவருடன் இருப்பது அல்லது வெளியிடங்கள் பயணங்கள் மேற்கொள்வது போன்ற கனவுகள் வந்தால் அந்த நபரது வாழ்வில் திருமண வாழ்க்கை கைகூடப் போகிறது அல்லது திருமணம் ஆனவர்கள் ஆயின் அவர்களது திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக மாறப் போகிறது என்பதே அதன் அர்த்தம் ஆகும்.

கன்னிப்பெண் கனவில் வருவதன் பலன்

ஒருவருடைய கனவில் ஒரு கன்னிப்பெண் வருகின்றார் எனில் அவருடைய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா நல்ல விடயங்களும் இனிமேல் நடக்கப்போகின்றது என்று அர்த்தம்.

பெண் தேவதைகள் கனவில் வருவதன் பலன்கள்

ஒருவருடைய கனவில் தேவதைகள் வருகின்றார்கள் எனில் அவர்களுடைய வாழ்க்கையில் இருந்த கஸ்டங்கள் எல்லாம் நீங்கி அதிஷ்டம் வரப்போகின்றது என்று அர்த்தம் ஆகும்.

மேலும் கனவில் வரும் பெண்கள் அழகற்றவர்களாக காணப்பட்டால் இனிமேல் தான் அழகான எல்லா வளமும் நிறைந்த பெண் வாழ்க்கைத் துணைவராகக் கிடைக்கப் போகின்றார் என்று அர்த்தம் ஆகும்.

You May Also Like:

இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை

நவராத்திரி பற்றிய பேச்சு போட்டி