பொதுநலவாய அமைப்பும் இலங்கையும் கட்டுரை

உலகில் அமைந்து காணப்படுகின்ற சர்வதேச ரீதியான அமைப்புகளுள் தன்னார்வ நிறுவனம் போல செயற்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பாக பொதுநலவாய அமைப்பு காணப்படுகிறது.

பொதுநலவாய அமைப்பும் இலங்கையும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன
  3. பொதுநலவாய அமைப்பின் தோற்றம்
  4. அங்கத்துவ நாடுகள்
  5. இலங்கையில் பொதுநலவாய அமைப்பின் தோற்றம்
  6. பொதுநலவாய மாநாட்டின் விளைவு
  7. முடிவுரை

முன்னுரை

உலகில் காணப்படுகின்ற 54 நாடுகளை தன்னுள் உள்ளடக்கி உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 15 வீதத்திற்கும் அதிகமான பெறுமதி மிக்க 16 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் உற்பத்தியை மேற்கொள்ளும் மிகப் பாரிய பெறுமதிமிக்க அமைப்பான பொதுநலவாய அமைப்பினுள் இலங்கை நாடானது ஆசியா சார்ந்த ஓர் அங்கத்துவ நாடாக காணப்படுகின்றது. இந்த அமைப்புகளின் மூலம் பல்வேறு சலுகைகளை இலங்கை நாடு பெற்றுக் கொள்கின்றது.

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன

பொதுநலவாய அமைப்பு என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற அமைப்பானது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுகமான ஆட்சிக்கு உட்பட்டு இருந்து பின்னர் அவற்றின் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்த நாடுகளின் ஓர் கூட்டமைப்பு ஆகும்.

பொதுநலவாய அமைப்பின் தோற்றம்

உலகின் சூரியன் அஸ்தமிக்காத நாடு இல்லை அனைவராலும் வர்ணிக்கப்படுகின்ற பிரித்தானியாவின் ஆட்சியின் 1945 ஆம் ஆண்டு வரை பல ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்பன உட்பட்டு இருந்தன.

இரண்டாம் உலகப் போரினால் பலவீனமற்ற பிரித்தானியா தனது ஏகாதிபத்தியத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி பல நாடுகளுக்கு விடுதலை கொடுத்தது.

இவ்வாறு விடுதலை பெற்ற நாடுகள் பிரித்தானியாவுடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு எனும் ஓர் அமைப்பினை உருவாக்கியது. இது தற்காலத்தில் மிகப் பாரிய ஓர் அமைப்பாக காணப்படுகிறது.

அங்கத்துவ நாடுகள்

பொதுநலவாய அமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அவ்வமைப்பில் எட்டு நாடுகள் மாத்திரமே அங்கத்துவம் பெற்று காணப்பட்டன.

பின்னர், அதாவது தற்காலத்தில் இவ்வமைப்பில் ஆன்டிகுவா, பார்புடா, அவுஸ்ரேலியா, பஹாமா, வங்காளதேசம், இந்தியா, மாலைதீவு, இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து, உகாண்டா போன்ற ஆபிரிக்கா சார்ந்த 19 நாடுகளும், தென்பசுபிக் சார்ந்த 11 நாடுகளும், கரிபியன் சார்ந்த 10 நாடுகளும், ஆசியா சார்ந்த 10 நாடுகளும், அமெரிக்கா சார்ந்த மூன்று நாடுகளும், ஐரோப்பா சார்ந்த மூன்று நாடுகளும் என 54 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக காணப்படுகின்றன.

இலங்கையில் பொதுநலவாய அமைப்பின் தோற்றம்

1796 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை அதாவது, சுமார் 150 ஆண்டுகள் இலங்கையானது பிரிட்டானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால் பொதுநலவாய அமைப்பின் 54 அங்கத்துவ நாடுகளில் ஓர் அங்கத்துவ நாடாக இலங்கையும் உள்ளடக்கப்பட்டது.

75 வருட காலமாக நிலைபெற்று வரும் இவ் அமைப்பின் மூலம் பல நன்மைகளை பெற்று வருகின்றது. 2013 ஆம் ஆண்டு பொதுநல வாயு அமைப்பும் 23 வது மகாநாடு இலங்கையில் கொழும்பு மாநகரில் நடாத்தப்பட்டது.

மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடா அரசாங்கம் பல எதிர்ப்புகளை தெரிவித்தது. பாரிய சவால்களுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் இந்த மாநாட்டை கொழும்பு நகரில் நடாத்தி பல பயன்களை பெற்றுக் கொண்டது.

பொதுநலவாய மாநாட்டின் விளைவு

இலங்கை நாடானது இம்மாநாட்டின் மூலம் பல நன்மையான விளைவுகளையும் தீமையான விளைவுகளையும் பெற்றுக் கொண்டது.

அந்தவகையில், இம்மாநாட்டின் மூலம் இலங்கை அரசு சர்வதேச ரீதியாக பெரும் கௌரவத்தினை பெற்றுக் கொண்டது.

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி பெற வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பது அவசியமான ஒன்றாகும். இந்த மாநாட்டின் மூலம் பொதுநலவாய அமைப்பின் ஏனைய நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இலங்கை அரசு பல முதலீடுகளை பெற்றுக் கொண்டது.

இராணுவ மற்றும் இராஜதந்திர நகர்வுகளும் பிற நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டது. சுற்றுலாத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்தது என பல நன்மைகளை பெற்றுக் கொண்டது.

முடிவுரை

பொதுநலவாய அமைப்பானது தமது அங்கத்துவ நாடுகளில் காணப்படுகின்ற மனித உரிமைகள் சார் பிரச்சனைகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வுகளையும் உதவிகளையும் வழங்கும் ஒரு சிறப்பான அமைப்பாக காணப்படுகின்றது.

You May Also Like:

எமது நாடு இலங்கை கட்டுரை

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன