மானாவாரி என்றால் என்ன

manavari land

மானாவாரி என்றால் என்ன

ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றான். காலத்திற்குக் காலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு தற்போது இது மனித குலத்திற்கு இன்றியமையாத நடவடிக்கையாக மாறியுள்ளது. இத்தகைய விவசாயத்தினை மேற்கொள்வதற்கு மனிதனுக்கு நிலம் இன்றியமையாததாகும்.

இத்தகைய விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய நிலங்களில் ஒன்றாக மானாவரி நிலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சிறு மழையாச்சும் பெய்தால் மட்டுமே, விளைக்கப்படும் நிலங்களாக மானாவரி நிலங்கள் காணப்படுகின்றன.

பருவமழையை நம்பியே பயிர் சாகுபடி செய்ய வேண்டி இருப்பதால் மானாவரி சாகுபடிகள் விவசாயிகளுக்கு ஒரு சவாலாகவே உள்ளன. தமிழகத்தில் உள்ள சாகுபடிப் பரப்பில் 42 சதவீத நிலங்கள் மழையை எதிர்பார்த்தே உள்ளன.

மண்வளம் காப்பது, மண் ஈரம் காப்பது, நவீன தொழிநுட்பத்தைக் கையாளாமை போன்றன மானாவரி நிலங்களில் அதிக விளைச்சலை எடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களாகவும் உள்ளன. இவற்றை முறையாகப் பேணினால் இந்நிலங்களில் அதிக விளைச்சல்களைப் பெற முடியும்.

மழை பொழிவின் அடிப்படையில் மானாவரி நில வேளாண்மையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையான

புன்செய்யப் பண்ணையம் – ஒரு வருடத்தில் 750 மி.மீக்கு குறைவான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதியில் பயிர்கள் வளர்த்தல்.

வறண்ட நிலப் பண்னையம் – ஒரு வருடத்தில் 750 மி.மீக்கு அதிகமான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதிகளில் பயிர்கள் வளர்த்தல்.

மானாவரிப் பண்ணையம் – ஒரு வருடத்தில் 1150 மி.மீக்கு அதிகமான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதியில் பயிர்கள் வளர்த்தல்.

மானாவாரி என்றால் என்ன

“மானாவாரி” என்பது வேளாண் சொல் ஆகும். மானா = வானம் (மானம்), வாரி / வரி = மழை மானாவரி = வானம் பார்த்த பூமி எனப் பொருளாகும்.

மழை நீரை மட்டுமே நம்பி நெல் போன்ற தானிங்களை விளைவிக்கக் கூடிய நிலங்களுக்கு மானாவரி என்று பெயர்.

மானாவரி பயிர்ச்செய்கை

சாரல் மழை, மானவாரி பயிர்சாகுபடிக்கு உதவியாக இருக்கும். மானாவரியாக சோளம், கம்பு, கடலை, சோளம், கேள்வரகு, கொள்ளு, எள், சூரியகாந்தி, முந்தரி, கொண்டைக் கடலை, மொச்சை மற்றும் இதர காய்கறி பயிர்களான கத்தரி, மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. உளுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப்பயிர்களையும் விதைக்க முடியும்.

மானாவரி சாகுபடியில் பயிர் எண்ணிக்கை பராமரித்தல், களைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்றவை பெரும் சவாலாக உள்ளன. இவற்றை திறம்பட கையாள்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெருவதுடன் அதிக வருமானம் பெறலாம். பருவ காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும், மழையளவு குறைந்து வருவதால், மானாவாரியில் பயிரிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீர்த்தேக்க மேம்பாடு

நீர்த்தேக்க மேம்பாடு என்பது வேளாண்மை உற்பத்தியை மானாவரி மற்றும் பகுதி மானாவரி உள்ள நிலங்களிலும் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கமாகும். இந்திய நாட்டில் நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தில் ஆறு முக்கிய திட்டங்கள் உள்ளன. அவையாவன,

  1. மானாவரி பகுதிகளுக்கான தேசிய நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்.
  2. இடமாற்றச் சாகுபடி பகுதிகளில் நீர்த்தேக்க மேம்பாடு.
  3. வறட்சி நில மேம்பாட்டுத் திட்டம்.
  4. வறட்சி மேம்பாட்டுத் திட்டம்.
  5. ஒருங்கிணைந்த தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்.
  6. வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்

இந்த ஆறு திட்டங்களும் நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வருகின்றன.

You May Also Like:

புயல் பற்றிய கட்டுரை