யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன

union prathesangal in tamil

இந்தியாவில் காணப்படும் ஒரு நிர்வாக பிரிவாக யூனியன் பிரதேசங்கள் காணப்படுகின்றன.

யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன

யூனியன் பிரதேசம் என்பது அரசியல் அல்லது நிர்வாக காரணங்களுக்காக எந்த ஒரு பகுதி மத்திய அரசாங்கத்தின் நேரடி ஒரு நிர்வாகத்தில் இயங்குகிறதோ அந்தப் பகுதியே யூனியன் பிரதேசங்களாகும். இது மாநிலங்களை போலல்லாமல் நேரடியாக இந்தியன் நடுவன் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது.

யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டமைக்கான காரணங்கள்

இந்தியாவில் யூனியன் பிரதேசங்களானவை பல்வேறுபட்ட காரணங்களால் உருவாக்கப்பட்டன. அதாவது டெல்லியில் யூடி மற்றும் கண்டிகரின் யூடி போன்றன அரசியல் ரீதியாக முக்கியத்துவமிக்க பகுதிகளாகும்.

அதாவது சில பகுதிகளின் காலாச்சார தனித்துவ ரீதியான விடயங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு அவசியமாகின்றது. இந்த காரணத்திற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தாத்ரா மற்றும் ஹவேலி மற்றும் டாமன் போன்றவற்றின் காரணமாக யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூடி மற்றும் லட்சத்தீவுகளின் யூடி போன்றனவற்றை எடுத்துக்காட்டுக்களாக கொள்ளலாம்.

உள்நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. அதாவது இதற்கு எடுத்துக்காட்டாக ஜம்மு காஸ்மீர் பிரதேசம் உருவாகியமையினை கூறலாம்.

கடினமான நிலப்பரப்பு, மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றை கையாளுவதில் மாநில அரசானது போதியளவு பங்களிப்பினை வழங்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு யூனியன் பிரதேசமானது உருவாகியது. எடுத்துக்காட்டாக லடாக் யூனியன் பிரதேசத்தினை கூறலாம். இது தனியொரு யூனியன் பிரதேசமாக காணப்படுகிறது.

யூனியன் பிரதேசங்களின் நிர்வாக முறைமை

பொதுவாக யூனியன் பிரதேசத்திற்கு இந்திய குடியரசு தலைவரானவர் ஒரு நிர்வாகி அல்லது லெப்டினன் கவர்னரை நியமிக்க கூடியவராக காணப்படுவார். தில்லி, புதுச்சேரி, ஜம்மு மற்றும் காஸ்மீர் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை மற்றும் அமைச்சர்களின் நிர்வாக குழு போன்றவை ஓரளவு மாநில செயற்பாடுகளை நிர்வாக ரீதியாக கொண்டமைந்து காணப்படுகிறது.

இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் காரணமாக சிறப்பு உரிமைகள் மற்றும் அந்தஸ்தை பெற்று காணப்படுகின்றன.

யூனியன் பிரதேசங்கள் நேரடியாக யூனியன் அரசாங்கத்தினால் ஆளப்படுவதால் யூனியன் பிரதேசங்களை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தனியார் மற்றும் பின்தங்கிய அடிப்படையிலான உரிமையை விட யூனியன் அரசாங்கத்திடமிருந்தே அதிக நிதிகளை பெற்றுக் கொள்கின்றன.

தற்போதைய யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவில் தற்போது பல யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அந்தவகையில் அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

#1. அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசம்

இது 1956 இல் மாநில மறுசீரமைப்பு மசோதாவின் கிழ் யூனியன் பிரதேசமாக மாறியது. இங்குள்ள நீதித்துறை கல்கத்தா உயர்நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது.

#2. டெல்லி யூனியன் பிரதேசம்

இது 1956 இல் யூனியன் பிரதேசமாக உருவாகியது. டெல்லி இந்தியாவின் நிர்வாக தலைநகரமாகும். நீதித்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது.

#3. புதுச்சேரி யூனியன் பிரதேசம்

இது ஆரம்பத்தில் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்டது. 1954ம் ஆண்டின் பிற்பகுதியில் இது இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியபோது பிரெஞ்ச் இறையாண்மையின் கீழ் இருந்தது. இருப்பினும் சட்டபூர்வமாக 1962இலே யூனியன் பிரதேசமாக மாறியது.

#4. சண்டிகர் யூனியன் பிரதேசம்

இது பஞ்சாப் மற்றும் ஹரியான இரண்டிற்கும் தலைநகராக செயல்படுகிறது.

#5. ஜம்மு காஸ்மீர் யூனியன் பிரதேசம்

இது இரண்டு தனியூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஸ்மீர் யூனியன் பிரதேசமும் ஒன்றாகும்.

#6. லடாக் யூனியன் பிரதேசம்

இது ஜம்மு காஸ்மீர் உயர்நீதிமன்றத்தால் இங்கு நீதித்துறை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

#7. தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம்

இது தனித்தனி யூனியன் பிரதேசமாக காணப்பட்டது. பின்னர் 2020 இல் எளிய சட்டத்தில் இணைக்கப்பட்டது.

You May Also Like:

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன

சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன