ரௌத்திரம் என்பது சிவனுக்கு ஏற்பட்ட கோபம் ஆகும். அதனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இருக்காது.
ரௌத்திரம் என்றால் என்ன
ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் ஆகும். தனக்கோ அல்லது பிறருக்கோ ஒருவராலோ அல்லது பலராலோ அநீதி ஏற்படும் போது பாதிக்கப்பட்டவருக்காக துணிந்து நியாயம் கேட்கும் துணிச்சல் ரௌத்திரம் எனப்படும்.
நம் தன்மானத்தை இழக்கும் நேரத்தில் கூட கோபம் கொள்ளாமல் அதாவது கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும் அதனை விடுத்து கோழையாக இருக்காதே என்று பாரதியார் “ரௌத்திரம் பழகு” எனக் குறிப்பிடுகின்றார்.
இன்றைய சுய நலமான உலகில் ஒரு சில மக்களே ரௌத்திரத்தினை சரியாகக் கற்று அதன் அர்த்தம் புரிந்து நடக்கின்றனர். ரௌத்திரம் என்னவென்று அறியாத காரணத்தினாலே இன்று எம் சமூகத்தில் வாழும் பலர் பல நாசகாரிய விடயங்களை மேற்கொள்கின்றனர்.
அதனை தாண்டி உண்மையான ரௌத்திரம் அறிந்து செயற்படும் ஒருவரை இந்த சமூகம் ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும். நாம் வேடிக்கை பார்ப்பதன் மூலம் தவறுகள் அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது.
பாரதி “ரௌத்திரம் பழகு” என்று கூறியுள்ளார் அதற்கு அர்த்தம் நியாயமான விடயங்களுக்கு நாம் கோபப்படத்தான் வேண்டும் என்பதாகும்.
தட்டிக்கேளு தவற்றினை
கட்டியாளு ஜகத்தினை
ஆட்டு மந்தை போலவே
ஆட்டாது தலையினை
நியாயமான கோவமதை
பாயாமல் காட்டிடு
ஓயாமல் புலம்பாது
எடுபடாத இடங்களில் வெளிநடப்பு செய்திடு
தியாகி என்ற பெயரெடுத்து
வியாதியில் நீ மாயாதே
சிலை ஒன்றும் தேவையில்லை
கோழையாய் நீ வாழாதே
பூவையான போதிலும்
தேவையான போதினிலே
“ரௌத்திரமும் பழகு”
அதுவே அணங்கிற்கு அழகு. என்று பாரதியார் கூறுகின்றார்.
உலகமே கோபம் எனும் சொல்லினை பயன்படுத்தும் போது பாரதி மட்டும் புதுவிதமாக “ரௌத்திரம்” எனக் கூறுகிறார். ஒவையார் கூட ஆறுவது சினம் என்றே கூறுகின்றார்.
இதற்கு அர்த்தம் தெரியாத மூட தன்மைக் கொண்ட மானிடர் இன்று அட்டுழியங்களை மேற்கொள்கின்றனர். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று அதனால் தான் கூறியுள்ளனர் போலும்.
பெண் கொடுமை, திருட்டு , அரசியல் எனும் பெயரில் மேற்கொள்ளும் லஞ்சம் ஊழல், கொலை, கொல்லை போன்ற பல்வேறு செயற்பாடுகளைக் கண்டு கண்டும் காணாணது போல் இருப்பது இன்றைய நவீன உலகில் மனிதரின் நாகரீகம் ஆகும். அப்படி தட்டிக் கேட்டால் சமூகம் அவனை எவ்வாறு வரவேற்கின்றது அதனால் தான் பாரதி,
இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா.
கதிரை வைத் திழந்தான் – அண்ணன்
கையை எரித்திடுவோம் என்கிறார்.
You May Also Like: