கடவுள் இயற்கையாக மனிதனுக்கு வழங்கிய விடயங்களுள் ஒன்று தூக்கம் ஆகும். சிலர் தூங்கும் போது தங்களை மறந்து ஆழ்ந்த உறக்க நிலையில் தூங்குவார்கள். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே கனவுகள் தோன்றுகின்றன. ஒருவர் ஆழ்மனதில் பதிந்துள்ள விடயங்களே கனவில் வருவதாக கூறப்படுகின்றன.
ஆன்மீகத்தில் கனவு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இன்றுவரை நம்பப்படுகின்றன. அதிகாலை மூன்று மணிக்குப் பின்னர் காணும் கனவுகள் பத்து நாட்களுக்குள் நடக்கும் என்றும் பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்றும் நம்பப்படுகின்றது.
கனவில் காணும் ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் மற்றும் பலன்கள் உள்ளன என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரிவிக்கின்றனர். இந்த பதிவில் ஒருவரின் தூக்கத்தில் வளையல் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
வளையல் கனவில் வந்தால் என்ன பலன்
ஒரு நபரின் தூக்கத்தில் தங்க வளையலைக் கனவில் கண்டால் அந்த நபரின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்கள் உருவாகும் என்றும் அவரது வாழ்க்கையில் செல்வச் செழிப்பு உண்டாகும் என்றும் சகலவிதமான வளங்களும் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஒருவருடைய உறக்கத்தில் தங்க வளையல்கள் உடைவதைப் போன்று கனவு கண்டால் அந்த நபர் விலை உயர்ந்த மதிப்பு மிக்க பொருள் ஏதாவது தொலைக்க போகின்றார் என்று அர்த்தம் கொள்ளப்படுவதோடு வாழ்க்கையில் மிகவும் துன்பகரமான சம்பவம் ஏதாவது இடம்பெறப் போகின்றது என்றும் நம்பப்படுகின்றது.
நிறைய வளையல்கள் இருப்பதைப் போன்று கனவு கண்டால் அந்த நபருடைய வாழ்வில் பல துன்பங்கள் நிறைந்த சம்பவங்கள் ஏற்பட போகின்றன என்றும் உறவினர்களிடையேயும் நண்பர்களிடையேயும் மனக்கசப்பு ஏற்பட போகின்றது என்றும் பிறரிடையே விரோதம் உண்டாக போகின்றது என்றும் நம்பப்படுகின்றது. எனவே குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது கவனமாக வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும்.
ஒருவருடைய நித்திரையில் நிறைய கண்ணாடி வளையல்கள் இருப்பதைப் போன்று கனவில் கண்டால் அந்த நபர் எடுக்கும் முயற்சிகள் யாவும் நிறைவேறும் என்றும் வீட்டில் ஏதாவது சுப காரியங்கள் நிகழும் என்றும் அந்த நபரின் மனதில் நீண்ட நாளாக இருக்கும் விருப்பங்கள் மற்றும் வேண்டுகோள்கள் விரைவில் நிறைவேறும் என்பது இந்த கனவின் அர்த்தம் ஆகும்.
ஒரு நபருடைய தூக்கத்தில் பச்சை நிறத்தினால் ஆன கண்ணாடி வளையல்களைக் கனவில் கண்டால் அந்த நபர் மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்றும் அவர் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும் என்றும் அந்த நபர் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றமடைய கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
ஒருவருடைய உறக்கத்தில் சிவப்பு நிறத்தினாலான கண்ணாடி வளையலைக் கனவில் கண்டால் அந்த நபர் மனதளவிலும் உடலளவிலும் சோர்வு ஏற்படப் போகின்றது என்பதோடு அந்த நபர் இதுவரை அனுபவித்த துன்பங்கள் எல்லாம் விலகி அவருக்கு புதுவிதமான மகிழ்ச்சி, சுதந்திரம் என்பன கிடைக்க போகின்றன என்றும் நம்பப்படுகின்றது.
ஒரு நபரின் தூக்கத்தில் கறுப்பு நிறத்தினாலான கண்ணாடி வளையல்களைக் கனவில் கண்டால் அந்த நபரின் வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களால் துன்பங்களை சந்திக்க நேரிடலாம் என்று கருதப்படுகின்றது.
You May Also Like: