ஒரு செயலை திறம்படச் செய்வதற்கு அச் செயல் சார்ந்த வாண்மைகளை விருத்தியடையச் செய்வது மிகப் பிரதானமானதொன்றாகும். அதாவது வாண்மைத்துவமானது இன்று பல்வேறு துறைகளில் வாண்மை அடைவது என்பது குறைவாகவே காணப்படுகின்றது.
வாண்மைத்துவம் என்றால் என்ன
வாண்மைத்துவம் என்பது ஒரு துறைசார்ந்த செயற்பாடொன்றை மேற்கொள்ளும் போது அந்த செயற்பாட்டிற்கு அவசியமான திறன்களை கொண்டிருத்தல் வாண்மைத்துவம் ஆகும். ஒரு தொழில் சார்ந்த திறன்களை எம்மிடம் ஏற்படுத்தி கொள்வதனையும் வாண்மைத்துவம் எனலாம்.
வாண்மைத்துவத்தின் பண்புகள்
வாண்மைத்துவத்தின் பண்புகளை நோக்குவோமேயானால் குறிப்பிட்ட ஒரு தொழிலின் எல்லைகள் மற்றும் அதன் வரையறைகள் மிகத் தெளிவானவையாகவும் எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் வரையறுக்கப்பட்டிருக்கும்.
வாண்மைத்துவமானது சாதாரண அறிவு மற்றும் திறன்களை பார்க்கிலும் கூடுதலான அறிவினை பெற்றிருக்கும். அதாவது சாதாரண மனிதன் ஒருவன் கூடுதலான திறன்களை வாண்மைத்துவத்தினூடாக அறிந்து கொண்டிருப்பார்.
ஒரு சிறந்த வாண்மைத்துவமானது பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடியதாகவும் தனது வாழ்நாள் முழுவதும் அந்த தொழிலிற்காகவே அர்ப்பணம் செய்வதாகவும் காணப்படுகின்றது எனலாம்.
ஒரு தொழிற்துறை சார்ந்த கோட்பாட்டு அறிவை கொண்டிருப்பதோடு உயர்ந்த கௌரவமும் வாண்மைத்துவத்தினூடாக அமைந்துள்ளது. வாண்மையில் ஈடுபடுவோர் தொடர்பில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையான தன்மையும் தெளிவும் உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.
வாண்மைத்துவமானது காலம் மற்றும் கவனத்தில் கொள்ளும் பணி போன்றவற்றிற்கு ஏற்ப வேறுபடக் கூடியதாகவே உள்ளது என்பதை குறிப்பிடலாம். விசேடமான பணியொன்றை மேற்கொள்வதற்கு தேவையான நிபுணத்துவ அறிவை கொண்டிருப்பதும் இவ் வாண்மைத்துவத்தின் பண்புகளாகும்.
நீண்டகால சிறப்பு பயிற்சியினை பெற்றிருக்க கூடியவராக இருத்தல் வேண்டும். ஒரு துறைசார்ந்த பல்வேறு நிபுணத்துவ அறிவினை கொண்டிருப்பதோடு அத்துறையை மேலும் ஒரு உயர்ந்த மட்டத்தில் கொண்டு செல்லக் கூடியவராகவும் காணப்பட வேண்டும்.
ஆசிரியர் துறையில் வாண்மைத்துவம்
கல்வித்துறையில் ஆசிரியர் வாண்மைத்துவமானது மிக பிரதானமானதொன்றாகும். கல்வி ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது ஆசிரியரானவர்கள் தன் துறை சார்ந்த கல்வி திறன்களை மேம்படுத்திக் கொள்வது ஆசிரியர் வாண்மைத்துவம் ஆகும்.
ஆசிரியரானவர்கள் தன்னுடைய கற்பித்தல் பணியை எப்போது ஆரம்பிக்கின்றார்களோ அப்போதே வாண்மைத்துவமானது ஆரம்பிக்கப்படுகின்றது எனலாம்.
ஆசிரியர்கள் கற்பித்தலை மேம்படுத்துவதற்கு அவசியமான பல்வேறு முறைகளை கற்று அதனூடாக மாணவர்களுக்கு சிறப்பான கல்வியினை வழங்க முடியும் என எதிர்பார்க்க முடிகின்றது.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சார்ந்த தகைமைகளை வளர்த்துக் கொள்ள துணைபுரிய வேண்டும். அதாவது சாதாரண ஒரு மனிதனை காட்டிலும் ஆசிரியரானவர்கள் அதிக அறிவுத் திறனை கொண்டிருத்தல் வேண்டும். இந்த செயற்பாட்டின் மூலம் ஆசிரியர் வாண்மைத்துவமானது சிறந்த முறையில் இடம் பெறும்.
கற்பித்தல் தரத்தினை மேம்படுத்துவதற்காக அரசானது ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய நுட்பங்களை ஏற்படுத்துவதோடு ஆசிரியர் வாண்மைத்துவமானது சிறப்பாக இடம்பெறுகின்றது.
இவ்வாறாக காணப்பட்ட போதிலும் இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர் வாண்மைத்துவமானது மிகவும் குறுகிய தன்மையுடனே காணப்படுகிறது.
இன்றைய கல்வி முறையானது ஓர் சிக்கலான கல்வி முறையாக காணப்படுவதோடு ஆசிரியரானவர் மாணவர்களுக்கு அறிவினை ஊட்டுபவராக மாத்திரமல்லாமல் மாணவர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்க கூடியவர்களாக உருவாக்க வேண்டும்.
ஆசிரியரானவர்கள் மாணவர்களின் ஆற்றலுக்கும் திறமைகளுக்கும் முன்னுரிமையளித்து மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆசிரியர் வாண்மைத்துவமானது துணைபுரிகின்றது.
இன்றைய காலப்பகுதியில் பல்வேறு திறமையுள்ள ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களுக்கு பயிற்சி நெறிகளை வழங்குவதன் மூலம் ஆசிரியர் வாண்மைத்துவத்துவத்தினை விருத்தியடையச் செய்யலாம்.
You May Also Like: