வாரியமானது பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகின்றது.
வாரியம் என்றால் என்ன
வாரியம் என்பது மக்கள் நலப்பணிக்காக தனிச்சட்டத்தின் மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட ஓர் நிர்வாக அமைப்பாகும். உதாரணமாக மின்சார வாரியம், சமூக வாரியம், வக்பு வாரியம், குடிநீர் வாரியம் என பல்வேறு வகைகளாக காணப்படுகிறன.
வாரியத்தின் நோக்கம்
வாரியமானது அனைத்து பொறுப்பாட்சிகளை கண்காணிக்கும் அதிகாரத்தினை கொண்டமைந்ததாக காணப்படும்.
வாரியமானது தனது கண்காணிப்பின் கீழ் உள்ள கடமைகள் தக்க முறையில் பேணிவரப்படுகின்றதா என்பதனையும் உரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக செயற்படுகின்றதா என்பதனையும் சட்டத்தினூடாக அதிகாரங்களை செயற்படுத்தல் போன்றவற்றை நோக்காக கொண்டுள்ளது.
மக்களின் நலனை கருத்திற் கொண்டு எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அவற்றிற்காக செலவிடப்பட்டதை உறுதி செய்தல்.
வாரியச் சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணங்கிய வகையில் பொறுப்பாட்சியாளர்களையும், நிர்வாகிகளையும் நியமித்தல் மற்றும் அகற்றுதல். நிர்வாகத்திற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
தமிழ்நாடு சமூக வாரியம்
மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு இந்த தமிழ்நாடு சமூக நலவாரியமானது ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரியமானது மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தன்னார்வ தொண்டு நிர்வனங்களினூடாக சேவையினை மேற்கொள்கின்றது.
தமிழ்நாடு சமூக நலவாரியத்தின் நோக்கங்கள்
மாநில மற்றும் மத்திய சமூகநலவாரியங்களின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும் நல் முறையில் செயற்படுகின்றதா என்பதனையும் கண்காணித்தல்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொழிநுட்ப வசதி மற்றும் நிதியுதவியினையும் அளித்து அவற்றின் சேவை தரத்தையும் மதிப்பையும் உயர்த்துதல்.
மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான அரசு சாரா நிறுவனங்களின் தன்னார்வ முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்தல்.
பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பலப்படுத்தல் மற்றும் உதவி செய்யும் பொருட்டு கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், வாழ்வாதாரத்திக்கான வருவாயினை பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு சமூக நலவாரியமானது மேற்கொள்கின்றது.
வக்பு வாரியம்
இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத சம்பந்தமான பணிகளுக்கும் ஒரு சிறந்த நோக்கங்களுக்கும் அறப்பணிகளுக்கும் தனது சொத்துக்களை அர்ப்பணித்து செயற்படுவதே வக்பு வாரியமாகும்.
இன்று இஸ்லாமியர்களின் சமூக பொருளாதார பணிகளுக்கு வக்பு வாரிய அமைப்புக்களே உதவுகின்றன. மேலும் வக்பு வாரியமானது இழந்த வக்பு சொத்துக்களை மீட்க துணைபுரிகின்றது.
வக்பு வாரியமானது வக்பு நிதியை தீர்மானிக்ககூடியதாக காணப்படுவதோடு வக்பு சொத்துக்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளை நடத்தவும் வழியமைக்கின்றது.
வக்பு சொத்துக்களும் அதன் வருமானமும் எந் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந் நோக்கத்திற்காக செயற்படுகின்றதா என்பதனை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
வக்பு வாரியமானது வக்பு நிர்வாகத்திற்கு கட்டளை இடக்கூடிய பணியினையும் மேற்கொள்கிறது. மேலும் அரசு வழங்குகின்ற மானிய கொள்கையின் மூலமாக நலிவுற்ற வக்பு நிறுவனங்களை பழுதுபார்த்தல் மையவாடிகளில் சுற்றுச்சுவர் எழுப்புவது போன்ற பணிகளை இவ் வாரியமானது செய்து வருகின்றது.
வாரியத்தின் பயன்கள்
வாரியத்தின் ஊடாக மக்களுடைய தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யப்படுகின்றது. உதாரணமாக குடிநீர் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்படுகிறது.
ஓர் நிர்வாக முறைமையின் சேவைத் தரமானது வாரியத்தினூடாக உயர்த்தப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினரும் சமுதாயத்தில் சம உரிமையினை பெற்றுக்கொள்ள மூன்றாம் பாலினர் நல வாரிய அமைப்புக்கள் துணைபுரிகின்றன.
ஏழை மக்கள் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக திகழ இவ்வாரிய முறைமையானது துணைபுரிகின்றது. எனவேதான் வாரியமானது பல்வேறுவகையாக காணப்படுவதோடு வளர்ச்சியடைந்துகொண்டும் வருகின்றதனை காணமுடிகிறது.
மேலும் இவ்வாரியத்தின் ஊடாக பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
You May Also Like: