விஞ்ஞானம் என்றால் என்ன

விஞ்ஞானம் என்றால் என்ன

மனித வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இன்று விஞ்ஞானம் ஊடுருவியுள்ளது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் சாத்தியமற்றன எனக் கருதப்பட்ட பல கற்பனைகள் சாத்தியமாகிவிட்டன.

மனிதனின் நீடித்து நிலைத்த வாழ்விற்கு விஞ்ஞானத்தின் பங்கு அபரிமிதமானது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மருத்துவம், கல்வி, தொடர்பாடல், வணிகம், போக்குவரத்து, வானியல் என அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது அபரிமிதமாக உள்ளது.

மேலும் விஞ்ஞானத் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியால் சுருங்கி விட்ட உலகம், எளிதாகிவிட்ட விண்வெளிப் பயணங்கள், மனித வாழ்வை இலகுவாக்கி விட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், முறியடிக்கப்பட்ட மனித வாழ்விற்கான சவால்கள், எல்லைகளற்ற பரந்த சிந்தனை என விஞ்ஞானத்தின் பங்களிப்பு அளப்பெரியதாகும்.

விஞ்ஞானம் என்றால் என்ன

விஞ்ஞானம் என்பது நாம் காணும் அல்லது உணரும் அனைத்தையும் நம் அறிவுக்கான எல்லைக்குள் கொண்டு வருவது ஆகும்.

மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். ‘விஞ்ஞானம்’ என்ற இந்தச் சொல்லைப் பற்றி குறிப்பிடும் அறிஞர் வெங்காலூர் குணா, இது ‘விண்ணைக்’ குறிக்கும் சொல் என்கிறார்.

விண்+ஞானம்=‘விண்ஞானம்’ என்ற இச்சொல், பின்னர் ‘விஞ்ஞானம்’ என மருவிற்று என்கிறார்.

அறிஞர் வெங்காலூர் குணா, பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்றோர் லத்தீன் மொழியில் ‘Science’ எனும் சொல்லைத்தான் குறிப்பிடுகின்றனர்.

நவீன விஞ்ஞானத்தின் போக்குகள்

மனித குலம் இன்று பல நன்மைகளை விஞ்ஞானத்தின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. புதியதொரு யுகத்தையே விஞ்ஞானம் படைத்துள்ளது.

மனித உடல் உறுப்புக்களை மாற்றுமளவிற்கு அசுர வளர்ச்சியினைக் கண்டுள்ள விஞ்ஞானம், மனிதனுடைய சாவையும் தள்ளிப் போட மனிதனுக்கு கொடுத்திருக்கும் வசதிதான் விஞ்ஞானத்தின் உச்சகட்டம் ஆகும்.

மனிதகுலம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தால், பல நன்மைகளைப் பெற்றாலும், கூடவே அதன் தீய முகமும் ஏதோ ஒரு வகையில் மனிதகுலத்தை பாதித்துள்ளதை மறுக்க முடியாது. இன்றைய விஞ்ஞானம் ஏற்படுத்துகின்ற சவால்களே நாளைய எதிர்காலச் சந்ததி எதிர்கொள்ளப்போகும் மிகப் பெரிய சவாலாகவும் மாறக்கூடும்.

நவீன விஞ்ஞானம் காட்டி நிற்கும் வளர்ச்சி மனிதனை உச்ச விருத்தியுற்ற ஒரு உயிரினக் கூட்டமாக வகைப்படுத்துகின்ற போதும் அது ஏற்படுத்தியுள்ள பிரதி கூலங்கள், சவால்கள் புறக்கணிக்கத்தக்கதல்ல.

வல்லமையும், அனுகூலமும் தரும் விஞ்ஞானத்தின் ஒரு முகமும், கொடூரமும் பேரழிவுகளும் தருகின்ற விஞ்ஞானத்தின் மறு முகமும் உலகை திடுக்கிட வைக்கின்றது.

மனித குலம் எதிர் நோக்குகின்ற சவால்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் என்பவற்றைத் தீர்ப்பதற்காகவும் மக்களின் தேவையையும், விருப்பையும் நிறைவு செய்வதற்காகவும், நாடுகளிடையேயான பலத்தை நிர்ணயிப்பதற்காகவும் விஞ்ஞானமானது யுகம் யுகமாக விருத்தி செய்யப்பட்டது.

யுத்த ஆயுதங்கள் என்பது, ஒரு ராட்ச லாப நோக்கம் கொண்ட ஒரு தொழில். இது விஞ்ஞானத்தில் மட்டுமே சாத்தியமானதாகும்.

மேலும், விரைவான விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய போதிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் வழிவகுக்கின்றது.

எனவே மனிதகுலம் வாழும் சூழலில நிகழும் ஈடு செய்ய முடியாத இழப்புக்களுக்கும் மீள முடியாத மாற்றங்களுக்கும் விஞ்ஞனம் ஒரு காரணமாகின்றது என்றால் அது மிகையல்ல.

எனவே இயற்கைக்கு எதிரானவற்றையும் அழிவை தரும் விடயங்களை நாடுவதில் அதிக அக்கறை காட்டாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்வதை விரும்ப வேண்டும்.

You May Also Like:

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை