விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை

viduthalai poril subhash chandra bose katturai

இந்தியாவுக்கான சுதந்திரமானது 1947 ஆம் ஆண்டு கிடைத்தது. ஆனால் சுதந்திரத்தை பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு தங்களுடைய உயிரையும், பொருளையும் இழந்துள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவின் விடுதலைக்காக போராடிய ஓர் உன்னதமான மனிதராகவே சுபாஷ் சந்திர போஸ் விளங்குகின்றார்.

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இளமைக்காலம்
  3. சுபாஷ் சந்திர போஸின் கொள்கை
  4. சுதந்திரப் போராட்டம்
  5. சுபாஷ் சந்திர போஸின் சாதனைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியாவை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே சிறந்த வழிமுறையாகும். என்பதனை வலியுறுத்திய ஒருவராகவே சுபாஷ் சந்திர போஸ் அவர் காணப்பட்டார்.

எனவே இந்தியா சுதந்திரம் அடைவதில் பக்கபலமாக இருந்த பல்வேறு தலைவர்களுள், இவரும் முக்கியமான ஒருவராகவே கருதப்படுகின்றார்.

இளமைக்காலம்

1897 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் நகரில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி ஆகிய தம்பதியினருக்கு ஒன்பதாவது பிள்ளையாக சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.

இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் உள்ள பார்டஸ் மிஷன் ஆரம்பக் கல்லூரியில் பயின்றதோடு, தனது உயர்கல்வியை றேவான்ஸா கல்லூரியில் கற்று முடித்தார். பின்னர் தன்னுடைய இளங்கலை பட்டத்தை கோட் சேர்ச் கல்லூரியில் முடித்தார்.

சிறுவயது முதலே விவேகானந்தர் போன்றவர்களின் ஆன்மீக கருத்துக்களால் கவரப்பட்ட சந்திர போஸ் 1919 ஆம் ஆண்டு தன்னுடைய பெற்றோர் விருப்பின்படி ஐ.சி.எஸ் தேர்வுக்காக லண்டன் சென்று கற்று முடித்தார்.

1919 ஆண்டு இடம்பெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவம் இவரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுபாஷ் சந்திர போஸின் கொள்கை

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அகிம்சை வழி மாத்திரம் போதாது என்பதனை உணர்ந்த சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாத கொள்கை கொண்டவராகவே காணப்பட்டார்.

இந்தியா மக்கள் உங்கள் இரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகின்றேன் என தீவிரமாக செயற்பட ஒரு இரும்பு மனிதர் இவராவார்.

சுதந்திரப் போராட்டம்

தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேய அரசின் கீழ் வேலை செய்யக் கூடாது எனக் கருதி தன்னுடைய வேலையை இராஜினாமா செய்த போஸ் அவர்கள், இந்திய விடுதலைக்காக ஜேர்மன், அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட இவர் சி.ஆர். தாஸ் என்பவரை அரசியல் குருவாகக் கொண்டு விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். அதற்காக 1944 இல் பர்மாவில் இருந்து இந்தியா தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டார்.

சுபாஷ் சந்திர போஸின் சாதனைகள்

உலகின் வல்லரசு நாடுகள் இராணுவ புரட்சியின் மூலமே சுதந்திரத்தை அடைந்து வளர்ச்சி கண்டன. அது போலவே இந்தியாவிலும் சந்திர போஸ் இராணுவப் புரட்சி ஒன்றை உருவாக்கினார். அதாவது இந்தியாவில் முதன்முதலில் ராணுவத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

இதனால் இன, மத பேதம் எதுவும் இன்றி மக்கள் அனைவரும் இவரை மதித்து வருகின்றனர். மேலும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அவருடைய காலத்திலேயே இட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

இந்திய சுதந்திரத்திற்காக அயராது உழைத்த சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1945 ஆம் ஆண்டு பயணித்த விமானம் விபத்துக்குள்ளானமையால் உலகை விட்டு பிரிந்தார்.

இவ்வாறு இவர் மரணித்த பின்னர் 1992 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதுக்கும் சொந்தமானார். எனவே 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதில் இவருடைய பங்களிப்பும் மகத்தானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

You May Also Like:

காந்தியின் அகிம்சை கட்டுரை