விவேகம் என்றால் என்ன

vivegam endral enna

விவேகமானது பல்வேறு விடயங்களுக்கிடையிலான வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள துணை செய்கின்றது.

விவேகம் என்றால் என்ன

விவேகம் என்பது பகுத்தறிவை பயன்படுத்தி தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு திறனாகும். அதாவது புத்திசாலித்தனமாக செயற்படுவதனை சுட்டி நிற்கின்றது. இது பாரம்பரிய ரீதியான நல்லொழுக்கமாக காணப்படுகின்றது.

விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், ஞானம், அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம்.

விவேகமானது ஒரு மனிதன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கலான சூழலை தவிர்த்து நன்மையை நாடுவதனை நோக்காக கொண்டதாக காணப்படுகின்றது.

வேகமும் விவேகமும்

மனம் கூறுவதனை கேட்டு உடனே தீர்வினை பெற நினைப்பது வேகமாகும். சூழலுக்கு ஏற்ப வரும் பயனை அறிந்து தெளிவு காண்பது விவேகமாகும். திருவள்ளுவர் இது பற்றி கூறுகையில் தகுந்த காலத்தில் பொருத்தமான இடத்தில் வேகத்துடனும் விவேகத்துடனும் செயலை செய்தால் இந்த உலகையே ஆளலாம் என கூறியுள்ளார்.

அந்த வகையில் வேகமும் விவேகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக காணப்படுகின்றன.

காலத்திற்கு ஏற்ப வேகத்தையும் விவேகமாக மாற்றி செயற்படுபவரே வாழ்வில் வெற்றியடைய முடியும். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இளைஞர்களின் வெற்றிக்கு தேவை வேகமும் விவேகமும் ஆகும்.

தன்னம்பிக்கையின் தனித்த அடையாளமாக திகழும் விவேகானந்தர் குறிக்கோளை அடையும் வரை போராடி வெற்றி பெற வேண்டும் என்பதோடு வெற்றிப் பாதையில் செல்வோருக்கு தன்னம்பிக்கையே துணைபுரியும் என கூறுகின்றார்.

அந்த வகையில் விவேகத்திற்கு உதாரணத்தினை எடுத்து நோக்குவோமேயானால் வேகமாக சென்று நீ தோல்வியடைந்தாய் மெதுவாக சென்று நான் வெற்றி பெற்றேன் என்றது ஆமை ஒரு செயலை செய்யும் போது தடைகள் ஏற்படுவது இயல்பு அத்தடைகளை விவேகத்தினால் வெல்ல வேண்டும். வேகமும், விவேகமும் வெற்றி பெற தேவை என்றாலும் விவேகமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

விவேகத்தின் முக்கியத்துவம்

விவேகமானது ஒரு தனிநபரை நீதியானவராகவும், நிதானமானவராகவும், தைரியமானவராகவும் செயற்படுத்த துணைபுரிகின்றது. அதாவது தீய விடயங்களிலிருந்து மதிநுட்பமாக ஒரு சிறந்த விடயத்தை தேர்ந்தெடுப்பதற்கு விவேகமானது அவசியமாகின்றது.

ஒரு தனிநபர் தனது குறிக்கோளை சிறப்பாக அடைந்து கொள்வதற்கு விவேகமானது அவசியமாகும். அதாவது குறிக்கோளை அடைவதற்கான சிறந்த வழிகளை தேர்வு செய்து கொள்ள விவேகமானது துணை புரிகின்றது.

கிறிஸ்தவ மதத்தில் நற்பண்புகளுள் ஒன்றாக விவேகமானது காணப்படுகின்றது. அதாவது அனைத்து நற்பண்புகளிலும் பிரதானமானதாக விவேகமே காணப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் விவேகத்தின் அவசியம்

ஒரு மனிதனானவன் விவேகத்துடன் செயற்படுகின்ற போதே வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை தன்னகத்தே ஈட்டிக் கொள்கின்றான். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு விவேகமானது அவசியமானதாகும்.

அதாவது எமக்கு தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை பிரித்தறிந்து கொள்வதற்கு விவேகமானது துணைபுரிகின்றது. கடலின் ஆழத்தில் இருந்து முத்தை கண்டெடுப்பது போல பிரச்சினைகளின் ஆழத்தில் இருந்து சிறந்த முடிவினை பெற்று கொள்ள விவேகமானது அவசியமாகின்றது.

அதாவது வேகம் மட்டும் இருந்து ஒரு செயலில் வெற்றியீட்டிட முடியாது மாறாக விவேகமும் அவசியமாகும். அதாவது ஒரு மனிதன் தான் செய்கின்ற வேலை எப்போது? எப்படி? எங்கே? போன்றவற்றை சிந்தித்து செயற்பட விவேகமானது அவசியமானதொன்றாகும்.

விவேகம் பற்றி அரிஸ்டோட்டில் குறிப்பிடுகையில் விவேகம் என்பது மனித பொருட்கள் தொடர்பான செயல்களை உள்ளடக்கிய தீர்ப்பில் ஈடுபடும் மனநிலையே விவேகமாகும் என கூறுகின்றார். அந்த வகையில் விவேகமானது அனுபவத்தின் விளைவாகும் என கூறுகின்றார்.

விவேகமாக செயற்படுவதன் மூலம் மனித வாழ்வின் சிக்கலான தன்மையினை தவிர்த்து சிறந்த முறையில் செயற்படுவதற்கு விவேகமானது துணை புரிகின்றது.

You May Also Like:

நோக்கு வர்மம் என்றால் என்ன

கையூட்டு என்றால் என்ன