ஆரம்ப காலகட்டத்தில் புலவர்கள் அரசரை புகழ்ந்து பாடுவதற்காக பா வகைகளிலேயே பாடல்களை பாடியள்ளனர். அந்த வகையில் தமிழ் மரபு வகைகளில் மிகவும் பழமை வாய்ந்த செய்யுள் வடிவமே வெண்பாவாக காணப்படுகின்றது.
அரசர்களை போற்றி பாடுவதற்காக சங்க காலங்களிலும் சங்கமருவிய காலங்களிலும் இந்த பா வகைகள் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பா வகைகளானது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைகளாக காணப்படுகின்றது. இவ்வகைகளுள் பிரதானமானதொன்றாகவே வெண்பா அமைந்துள்ளது.
வெண்பா என்றால் என்ன
யாப்பிலக்கணத்தின் மூலம் வரையறுக்கும் நான்கு அடிப்படை பாவகைகளில் ஒன்றாகவே வெண்பாவானது அமைந்துள்ளது.
அதாவது இரண்டு அடிகளை கொண்டமைந்துள்ள பா வகைகளில் ஒன்றே வெண்பா எனலாம். அந்தவகையில் வெண்பாவின் மூலமாகவே பல்வேறு பாடல்கள் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெண்பாவானது மிக துள்ளியமான இலக்கணங்களை கொண்டமைந்ததோடு கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்டு அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலேயே பாடப்பட்டுள்ளது.
வெண்பாவினது பொது இலக்கணம்
வெண்பா யாப்பானது ஐந்து வகையான பொது இலக்கணங்களை கொண்டமைந்துள்ளது. இந்த பா வகையினுடைய இலக்கணமானது ஓர் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. அந்த வகையில் யாப்பினுடைய பொது இலக்கணங்களை பின்வருமாறு நோக்கலாம்.
ஓசை: அதாவது செப்பல் ஓசையினை பெற்று வரும்.
சீர்: ஈற்றடி மூன்று சீர்கள் (சொற்கள்) உடையதாக காணப்படும். அதாவது வெண்பாவில் வெண்சீர், இயற்சீர் போன்றன இடம் பெற்று வருகின்றன.
தளை: இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே கொண்டமைந்து காணப்படும்.
அடி: இது இரண்டடி முதல் பன்னிரெண்டு அடி வரை அமைந்து காணப்படும். (கலி வெண்பா பதிமூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
முடிப்பு: அதாவது இறுதி சீரானது நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்ப்பாட்டில் அமைந்து காணப்படும். இவ்வாறாக வெண்பாவானது பொது இலக்கணங்களை கொண்டமைந்துள்ளது.
வெண்பாவின் முக்கியத்துவமும் அது இடம் பெற்றுள்ள நூல்களும்
வெண்பாவில் பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த அடிப்படையில் பரிபாடல்களில் வெண்பாக்களை பயன்படுத்தியள்ளனர் எனலாம். முருகன், திருமால் பற்றிய பரிபாடல்களில் 16 தனிப்பாடல்களினை கொண்ட வெண்பாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையினை குறிப்பிடலாம்.
பத்துப்பாட்டு நூலில் வெண்பாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பத்துப்பாட்டு நூல்களான முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி போன்ற நூல்களில் தனிப்பாடலாக வெண்பாக்கள் வருகின்றமை வெண்பாவின் முக்கியத்துவத்தினை எடுத்து காட்டுகின்றது.
நள வெண்பா, நீதி வெண்பா ஆகிய நூல்களிலும் வெண்பாவின் பயன்பாட்டினை காணலாம். அதாவது நளனுடைய காதல் கதையினை கூறுகின்ற ஒரு வெண்பாவாக நளவெண்பா காணப்படுகின்றது.
மேலும் நல்வழி நூலானது பல்வேறு அறக்கருத்துக்களை கொண்ட ஓர் நூலாகும். இவ்வாறான நூலிலும் இப் பா வகையே பயன்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
திருக்குறளில் அமைந்துள்ள 1330 குறட்பாக்களும் வெண்பாக்களினாலேயே ஆனவையாகும். அதாவது வாழ்க்கைக்கான தத்துவங்கள் மட்டுமல்லாது பல அற நெறிக்கருத்துக்களை கொண்டமைந்த திருக்குறளானது வெண்பாக்களினால் இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பிற்குரியதாகும்.
அரசர்களை போற்றி பாடுதல், காதல் கதைகள், அறநெறிக் கருத்துக்கள் போன்ற பலவாறான விடயங்களை பற்றி பாடுதல் வெண்பாவினால் என்பது சிறப்பிற்குரியதாகும்.
சங்க காலம் மற்றும் சங்கமருவிய கால நூல்களில் அதிகளவு செல்வாக்கு செலுத்தியதோடு மட்டுமல்லாது அக்கால அரசர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவே புலவர்கள் பாடல்களை பாடியுள்ளமை வெண்பாவின் முக்கியத்துவத்தினை எடுத்துகாட்டுகின்றது.
You May Also Like: