அமைப்பு சாரா தொழிலானது அரசின் தலையீடற்ற தொழிலாக காணப்படுவதோடு பல தொழில் சார் நலவாரியங்களும் இந்த அமைப்பு சாரா தொழில் முறைமைக்கு உதவி செய்கின்றது.
அமைப்பு சாரா தொழில் என்றால் என்ன
அமைப்பு சாரா தொழில் என்பது அரசின் ஒத்துழைப்பின்றி தனிநபரொருவரின் உழைப்பின் காரணமாக உருவாக்கப்படுகின்ற ஒரு தொழில் முறைமையாகும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் கருதி பல அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் இயங்குகின்றன.
அமைப்பு சாரா தொழிலானது சுய உதவிகள், சேவைகள் கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றன. இத்தொழிலுக்கான உதாரணங்களாக விவசாயம், மீன்பிடி, கட்டுமான தொழில் போன்ற தொழில்களை கூற முடியும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழில்களின் சமூக பாதுகாப்பிற்காக தமிழக அரசால் செயற்படுத்தப்படும் நலவாரியங்களாகும். இந்த நலவாரியமானது அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியமானது தொழிலாளர்களின் பணி நிலமைகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பினை வழங்கவும் இந்த நலவாரியமானது துணைபுரிகின்றது.
இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, காப்பீட்டு திட்டம், பணிக்காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை போன்ற நல உதவிகள் கிடைக்கும்.
மேலும் விவசாய தொழிலாளர் நலவாரியம், மீனவர் நலவாரியம், கட்டுமானத் தொழில் நலவாரியம் போன்றவை அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களுள் உள்ளடக்கப்பட்டு காணப்படுகின்றது.
அமைப்பு சாரா தொழிலாளர் நலத்திட்டமும் அரசும்
அமைப்பு சாரா தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேலைவாய்ப்புக்களையும், தமிழ் நாட்டின் மத்தி, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
அதாவது தமிழ் நாட்டின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் அமைப்பு சாரா தொழிலை மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்கின்றது.
1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசானது நிறுவி அதனூடாக பல நலத்திட்டங்களை மேற்கொள்கின்றது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இ-ஸ்ரம் இணையத்தளம்
இன்று அமைப்பு சாரா தொழிலினை மேற்கொள்பவர்களுக்கு தேசிய அளவிளான தரவை அளிப்பதற்கு இ-ஸ்ரம் என்ற இணையத்தளத்தினை ஆகஸ்ட் 26, 2021ம் அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியது.
இந்த இணையத்தளத்தினூடாக கட்டுமானத் தொழிலாளர்கள், வேளாண்மை தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு துணைபுரிகின்றது.
மேலும் இணையத்தளதினூடாக அமைப்பு சாரா தொழிலினை மேற்கொள்பவர்களது விபரங்களை பதிவு செய்வதோடு, மத்தி மற்றும் மாநில அரசு செயற்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு பங்களிப்பு செய்கின்றது.
இ-ஸ்ரம் இணையத்தளத்தினூடாக ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை பதிவு செய்ய முடியும். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் இந்த இணையத்தளம் உதவுகின்றது.
அமைப்பு சாரா தொழிலில் கூலித்தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், தச்சுத் தொழிலாளர்கள், தறி பட்டறை தொழிலாளர்கள் என நிரந்தர வருமானமில்லாத தொழிலினை மேற்கொள்பவர்கள் உள்ளடங்குவர்.
இன்று அமைப்பு சாரா தொழிலினை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
You May Also Like: