அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தலைநகராக புது தில்லியையும் ஆட்சி மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் அதிக சனத் தொகையையும் கொண்டமைந்த நம் நாடான இந்தியாவின் எதிர்காலம் பற்றியே இன்று நான் பேசப்போகின்றேன்.
இலட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் கலையும், அழகும் கொண்டமைந்த இந்திய நாடானது பல இன, மத மொழிகளை பேசுகின்ற பன்முகத்தன்மை கொண்டதொரு அழகிய நாடாகும்.
இன்று இந்தியாவின் தனித்துவ தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பே காணப்படுகிறது.
உலக அளவில் பொருளாதாரம், கல்வி, மக்கள் தொகை, தொழில் நுட்பம் என பல துறைகளில் வளர்சியடைந்து கொண்டு வரும் ஒரு நாடகவே இந்தியா காணப்படுகிறது.
சிறப்புமிக்க இந்தியாவானது எதிர்காலத்தில் பாரியதொரு வளர்ச்சியினை தன்னகத்தே கொண்டமைந்துள்ள நாடாக மாற்றம் பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எதிர்கால இந்தியாவில் மாற்றத்தினை ஏற்படுத்தும் துறைகள்
எதிர்கால இந்தியாவின் மாற்றத்தினை ஏற்படுத்தம் துறைகளாக பல துறைகள் காணப்படுகின்றன.
தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்பத்துறையில் இந்தியாவானது பாரியதொரு வளர்ச்சியினை கண்டு வந்துள்ளது. அதாவது டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த சமூகமாக மாறிவருகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபோக்கள் என பல நவீன தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நவீன தொழில் நுட்பங்களின் செல்வாக்கின் காரணமாக எதிர்காலத்தில் டிஜிட்டல் இந்தியாவாக மாற்றம் பெறும் அளவிற்கு தொழிநுட்பத்தின் செல்வாக்கானது வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது.
அனைத்து துறைகளிலும் தொழிநுட்ப தாக்கமானது இடம் பெறுவதனை காணக்கூடியதாக உள்ளது. கல்வித்துறை, விவசாயம் என பல துறைகளில் தொழிநுட்பத்தினூடாக எதிர்காலத்தில் மாற்றங்கள் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
கல்வித்துறை
இந்தியாவில் கல்வித்துறையானது பல்வேறு மாற்றங்களிற்குற்பட்டு வளர்ச்சியைடைந்து கொண்டு வருகின்றது. கல்வித்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக காமராசர் அவர்களே திகழ்கின்றார்.
அனைத்து மாநிலங்களிலும் இலவசக்கல்வி வழங்கப்படுவதோடு மாத்திரமல்லாமல் ஏழைக் குழந்தைகளுக்கென்று உணவு, கல்வி போன்றவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
மேலும் இன்று பல்கலைக்கழகங்கள் போன்றவை நிறுவப்பட்டு கல்வித்திட்டத்தில் முன்னேற்றம் கண்டு வரும் ஒரு நாடாக இந்தியாவானது திகழ்கின்றது. எதிர்காலங்களில் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வளர்ச்சியடையும் ஒரு நாடாகவே இந்தியா விளங்கும்.
சுகாதாரத்துறை
இந்தியாவின் எதிர்காலத்தில் சுகாதாரத்துறையானது பல்வேறு மருத்துவ வசதிகளைக் கொண்டு வளர்ச்சியடையக் கூடியதாகும். அதாவது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ துறையின் தாயகமாக இந்தியா காணப்படுகின்றது.
இந்திய அரசாங்கமானது சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து நாட்டு மக்களுக்கு ஏற்றாற் போல் பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்து வல்லுனர்கள் என நோயாளிகளுக்கு உயர்தர பராமரிப்பு வழங்க சேவைகளை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மற்றத்தினை கொண்டுவருகின்றது.
விவசாயத்துறை
விவசாயத் துறையினால் வலிமை கொண்டதொரு நாடாக இந்தியாவே திகழ்கின்றது. விவசாயத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யும் ஒரு நாடாக இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும் வண்ணம் பல விவசாய மையங்கள் தொழிற்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் விவசாயத் துறையானது மென்மேலும் வளர்ச்சி கண்டு நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.
சினிமாத்துறை
சினிமாத்துறை பல புதிய தொழிநுட்பங்களை கொண்டு எல்லோரையும் ஈர்க்கக் கூடிய வகையில் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தினை ஈட்டக்கூடியதாகவும் சினிமாத்துறை காணப்படுகின்றது.
எனவே இந்திய நாடானது வறுமை, லஞ்சம் போன்ற சாவல்களை எதிர்கொண்ட போதிலும் அதனிலிருந்து மீண்டுவருவதற்கான பல முயற்சிகளை மேற்கொள்வதோடு எதிர்கால வளர்ச்சியைநோக்கி செல்லும் ஒரு நாடாகவே திகழ்கின்றது.
You May Also Like: