ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஓசோன் படலம்
- ஓசோன் படலம் சேதமடையக் காரணங்கள்
- ஓசோன் சிதைவடைவதால் ஏற்படும் விளைவுகள்
- ஓசோன் படலம் அழிவடையாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழ்கின்ற பூமியினுடைய பாதுகாப்புக் கவசமாக தொழிற்படுவது வளிமண்டலமாகும். இதுவே நாம் வாழ்வதற்கு அவசியமான வாயுக்களை உள்ளடக்கிய கண்களுக்கு தெரியாத படையாக தொழில்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வளிமண்டலத்தில் முக்கியமான படையாக ஓசோன் படையானது விளங்குகின்றது. இந்தப் படையானது அண்மைக்காலமாக அழிவடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனை பாதுகாக்க ஓசோன் பற்றிய விழிப்புணர்வு என்பது அவசியமாகும்.
ஓசோன் படலம்
ஓசோன் படலம் என்பது வளிமண்டலத்தைச் சுற்றியுள்ள ஒரு படலமாகும். மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொள்கின்றது.
இந்த ஓசோன் படையானது மூன்று ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இணைவதால் உருவாக்கப்படுகின்றது. இந்த வலுவான பிணைப்புத்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான கதிர்வீச்சுகளை தடுத்து பூமியில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொள்கின்றது.
இது இல்லையெனில் ஆபத்தான கதிர்வீச்சுகள் தாக்கி பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்து விடும். எனவே இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து ஓசோன் படலத்தை பாதுகாப்பது அவசியம் ஆகும்.
ஓசோன் படலம் சேதமடையக் காரணங்கள்
குளோரோ புளோரோ கார்பன் ஓசோனின் துளை ஏற்படுவதற்கும் ஓசோன் சேதமடைவதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தக் கார்பனை அன்றாடம் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, குளிர்சாதன இயந்திரம் (AC), தொழிற்சாலை ஆகியவற்றில் குளிரூட்டப் பயன்படுத்துகின்றனர்.
இவற்றில் இருந்து வெளிப்படும் குளோரோ புளோரோ காபனானது வளிமண்டலத்தில் வெளிப்படும் போது நுண்ணுயிர்களால் சிதைவடைகின்றது.
இவை ஓசோனுடன் வினைபுரிந்து ஓசோனின் அடர்த்தியை குறைத்து குளோரின்களாகவும், பிராண வாயுக்களாகவும் மாற்றி விடுகின்றன. இவை தவிர நைத்திக் ஆக்சைட், பசுங்குடில் வாய்க்களும் ஓசோன் சிதைவடையக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஓசோன் சிதைவடைவதால் ஏற்படும் விளைவுகள்
ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு அழிந்து விடும்.
அதிக வெப்பம் காரணமாக வறட்சியை அதிகரிக்கச் செய்யும், மனிதர்களையும், விலங்குகளையும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், பிற தோல் நோய்கள் போன்றனவும் ஏற்படும்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல நோய்கள் உண்டாகும். தாவரங்களின் உற்பத்தி திறனும் குறைவடையும், கடல் வாழ் உயிரினங்களும் அழிவடையும்.
ஓசோன் படலம் அழிவடையாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
குளோரோ புளோரோ காபன் பயன்படுத்துவதனை நாம் தடுத்தாலே சேதம் அடைதல் கணிசமான அளவு குறையும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும், புகையை வெளிப்படுத்தும் எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும், கார்பனை பயன்படுத்துவதனையும் நாம் குறைத்தல் வேண்டும்.
முடிவுரை
தற்போது பருவநிலை சிக்கலாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் ஓசோன் படலம் அழிவதும், புவி வெப்பமடைதலுமே ஆகும்.
மரங்களை அதிக அளவில் வளர்த்து காடுகளை பாதுகாத்தால் புவிவெப்பமடைதல் தடுக்கப்படுவதோடு, வளிமண்டலத்தையும் பாதுகாக்கலாம்.
ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் மூலமே ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை நாம் வாழ முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவோமாக!
You May Also Like: