அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
என்ற திருக்குறள் அடியினூடாக ஒரு தலைமுறையில் கற்றுக்கொள்ளும் கல்வி அறிவானது அவனுடைய ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற அடிப்படையில் இன்று நான் கல்வி பற்றியே பேசப்போகின்றேன்.
கல்வி
இன்றைய சமூகத்திற்கு மத்தியில் பிரதானமானதொரு இடத்தினை கல்வி பெற்றுக் கொண்டுள்ளது. கல்வி என்பது அறிவு மற்றும் கற்றல் திறன்களை பெறுவதற்கான ஒரு செயன்முறையாகும்.
கல்வியானது ஒரு புதிய தலைமுறையின் வளர்ச்சிக்கு பாரியதொரு பங்களிப்பினை செய்து கொண்டு வருகின்றது. கல்வி என்ற பதத்தினை ஆங்கிலத்தில் Education என அழைக்கின்றனர். அதாவது கற்பித்தல் என்ற பொருளினையே இந்த Education என்ற பதமானது சுட்டி நிற்கின்றது.
ஒரு மனிதனானவன் பூரணமானவனாக காணப்பட வேண்டுமாயின் அவனிற்கு கல்வி அறிவானது அவசியமானதாகும். செல்வங்களிலே சிறந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும்.
நாம் கற்கும் கல்வியானது நம்மை மட்டுமல்லாது நம்மை சுற்றியுள்ளவர்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகும். கல்வி அறிவினை பெற்றுக்கொள்வதினூடாகவே ஒரு சமூகமானது சிறந்த சமூகமாகத் திகழும்.
அதாவது கல்வியினூடாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவானது கடத்தப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள், கண்டுபிடிப்புக்கள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் எனப் பல்வேறு சாதனைகளை படைக்கின்றனர். இவை அனைத்திற்கும் பிரதானமானதொரு காரணியாக கல்வியே அமைந்துள்ளது.
மனித வாழ்வில் முக்கியத்துவமிக்க கல்வி
மனித வாழ்வில் கல்வியின்றி செயற்பட முடியாது என்ற அளவிற்கு இன்று கல்வியானது ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்விலும் தாக்கத்தினை செலுத்துகின்றது. அந்த வகையில் சிறந்த சமூக அந்தஸ்தினை பெற்றுக் கொள்வதற்கு கல்வியானது அவசியமான தொன்றாகும்.
ஏனெனில் இன்று கல்வி கற்கும் மனிதனையே சமூகமானது உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்க்கின்றதோடு மாத்திரமல்லாது கற்றோர் என்றால் அவர்களுக்கான தனியானதொரு இடத்தினையும் வழங்குகின்றது.
கற்றவர்கள் தான் நினைத்த விடயத்தை பிறர் புரிந்து கொள்ளும் விதமாக கூறுவதோடு பிறருடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வினை வழங்கக் கூடியவர்களாகவும் கல்வி கற்றோர் காணப்படுவர்.
மனிதனானவன் தனது வாழ்வில் இலட்சியத்தை அடைந்து கொள்ள கல்வியே துணை செய்கின்றது. எந்தவொரு மனிதனும் தன்னகத்தே இலட்சியத்தை கொண்டிருப்பான்.
அவ்வாறு இலட்சியம் இல்லாதவனால் வாழ்வில் எதனையும் சிறப்புற அடைந்து கொள்ள முடியாது என்ற வகையில் இலட்சியத்தை அடைவதற்கான பாதையை எமக்களிப்பது கல்வியே ஆகும்.
சவால்கள் நிறைந்த மனித வாழ்க்கையில் கல்வியே எமது சவால்களை சமாளிப்பதற்கான உந்து சக்தியாகக் காணப்படுகின்றது.
ஒரு மனிதனின் வெற்றி வாழ்க்கை, வீரச் செயல்கள், சாதனைகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளிற்கு பிரதானமான காரணமாக கல்வியே அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்து நாமும் கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டும்.
You May Also Like: