கல்வி என்பது தெரியாததை தெரிய செய்வது அல்ல, அது ஒழுக்கத்தை ஒழுகச் செய்யும் சிறந்த சாதனமாகும். கல்வி என்பது வெறுமனே அறிவுகாக மாத்திரம் பயில்வது அல்ல ஒருவனுடைய வாழ்வை ஒழுக்கமுடையதாக அமைப்பதற்காகவுமே பயிலப்படுகின்றது.
கல்வி புரட்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்பகால கல்வி முறைகள்
- காமராஜரின் கல்வி புரட்சி
- கல்வியின் இன்றைய வளர்ச்சிகள்
- கல்வியால் உயர்ந்தவர்கள்
- முடிவுரை
முன்னுரை
“கற்கை நன்றே கற்கை நன்றி பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றார் ஔவையார். வாழ்க்கையில் எவ்வளவு வறுமை நிலை வந்தாலும் கல்வி கற்பதை மாத்திரம் எப்போதும் நிறுத்தி விடுதல் கூடாது.
தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பற்ற இலக்கியங்கள் காப்பியங்களை படைக்கும் அளவிற்கு கல்வி அறிவு உடையவர்களாக சிறந்து காணப்பட்டனர்.
ஆரம்பகால கல்வி முறைகள்
உலகின் எந்த நாடுகளிலும் காணப்படாத அளவுக்கு பல இலக்கியங்கள், காவியங்கள் இந்தியாவிலேயே ஆரம்ப காலத்தில் தோற்றம் பெற்று காணப்படுகின்றமை இந்தியாவில் ஆரம்ப காலத்திலேயே கல்வி முறை சிறந்த நிலைகள் காணப்பட்டது என்பதற்கு தக்க சான்றாக காணப்படுகிறது.
இதற்கு அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற பல நூல்கள் சிறந்த ஆதாரங்களாக அமைகின்றன.
ஆரம்ப காலத்தில் குருகுல கல்வி முறையே காணப்பட்டது. இந்த குருகுல கல்விமுறையானது குறிப்பிட வர்மத்தாருக்கு மாத்திரம் உரியதாக காணப்பட்டது. பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் வீதம் குறைவாக காணப்பட்டது.
இருப்பினும் வானியல், ஜோதிடவியல், மருத்துவவியல், விஞ்ஞான துறை என்பன வளர்ச்சி பெற்றே காணப்பட்டது. அத்துடன் நாலந்தா, தக்க சீலம் போன்ற பல்கலைக்கழகங்ளும் காணப்பட்டுள்ளது ஆரம்ப கால கல்வி முறைமையின் சிறப்பாகும்.
காமராஜரின் கல்வி புரட்சி
இந்தியாவில் காணப்பட்ட குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான குருகுல கல்வி முறைக்கு எதிராக கல்விப் புரட்சியை மேற்கொண்டவர் காமராஜர் ஆவார்.
இவர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆரம்பப் பள்ளிகளை திறந்தார். அத்துடன் ஆறுகோடி ரூபாயை புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் மற்றும் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும் ஒதுக்கினார்.
அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல தொடக்க பாடசாலைகளை ஆரம்பித்தார். அது மட்டுமல்லாது மேலும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துகின்ற நோக்கில் கல்வி உயர்நிலைக் குழுவை அமைத்தார்.
மேலும் 1962ல் இலவச கல்வி முறைமை போன்ற பல்வேறு திட்டங்களை கல்வித் துறைகளில் மேற்கொண்டு கல்வித்துறையில் பாரிய புரட்சி புரிந்தார்.
கல்வியின் இன்றைய வளர்ச்சிகள்
கல்வியின் இன்றைய கால வளர்ச்சிகளை நோக்குகின்ற போது, தகவல் தொடர்பாடல்களின் வளர்ச்சியின் காரணமாக கல்வியும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.
இல்லங்களில் இருந்து கொண்டே இணையத்தின் மூலம் வெளிநாட்டில் காணப்படும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கல்வி பயிலக்கூடிய வாய்ப்புக்கள் இன்று காணப்படுகின்றது.
தொழில்களை அடிப்படையாகக் கொண்ட பல பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளை விடவும் தனியார்ட கல்வி நிலையங்கள் இன்றைக்கு மாணவர்களை ஈர்க்கின்றன.
இன்றைய பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்காகவே அதிக பணம் செலவழிக்கின்றனர்.
கல்வியால் உயர்ந்தவர்கள்
சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும். இதற்கு உதாரணமாக டாக்டர் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையை எடுத்த கொள்ளலாம்.
இந்தியாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி பருவத்தை சராசரி மதிப்பெண்களை பெற்று, பிரகாசமான மாணவனாகவும், சிறுவயதிலேயே குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு சென்ற போதும் கல்வி கற்பதை கைவிடாது கல்விப் பயின்று இயற்பியல், விண்வெளிப் பொறியியல் போன்ற துறைகளில் புகழ்பெற்ற முனைவர் பட்டங்களை பெற்று “ஏவுகணை நாயகன்” என வர்ணிக்கப்படும் அளவுக்கு கல்வியால் உயர்ந்து காணப்படுகின்றார்.
இவரைப் போலவே விண்வெளிக்கு சென்று சாதனை படைத்த கல்பனா சௌலா, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற முதல் ஆசிய மற்றும் இந்திய பெண்ணான ஆனந்திபாய் ஜோஷி, உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு துறையில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுந்தர் பிச்சை போன்றவர்கள் கல்வியால் உயர்ந்தவர்களாவர்.
முடிவுரை
கல்வியானது ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் கருவியாக காணப்படுகிறது. இன்று பரிணாம வளர்ச்சிகளை அடைந்து இணையத்துடன் இணைந்து இயங்கும் கல்வியானது அனைவரது வாழ்வினும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
கல்வியை வெறுமனே அறிவுக்காக மாத்திரம் அல்லாமல் பிறரை மதித்து ஒழுக்கமுடைய பிரஜையாக வாழ்வதற்கும் பயில வேண்டும்.
You May Also Like: