குடும்ப வன்முறை என்றால் என்ன

குடும்ப வன்முறை

உலகில் பெரும்பேறு பெற்ற உயிரினம் மனித இனம் ஆகும். நன்மை, தீமை பற்றி அறியும் பகுத்தறிவுடைய சிறப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. இத்தகைய மனிதன் தனித்து வாழ்வது கடினமானதாகும்.

குடும்பமாக கூடி வாழ்ந்தால் தான் மனித இனத்தின் அனைத்து தேவைகளும் நிறைவு பெறும். எனவே மனித இனத்தின் அத்திவாரமே குடும்பம் என்றால் அது மிகையல்ல.

குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், பெற்றோர் போன்ற உறவுகள் ஒற்றுமையாக அன்புநெறி தவழ வாழும் அமைப்பாகும். ஆனால் இத்தகைய குடும்ப அமைப்பானது இன்றைய சமூகத்தில் காண்பது அரிதாகவே உள்ளது.

இன்றைய சமூகத்தில் காணப்படும் பாரிய பிரச்சினைகள் ஒன்றாக குடும்ப வன்முறை உள்ளது. எனவே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி குடும்ப வன்முறைகளைக் களைய வேண்டிய தேவை இக்கால சூழலில் பெரிதும் உணரப்படுகின்றது.

கொரோனாவுக்கு பின்னர் தனியார் மருத்துவக் கல்லூரியினுடைய சமூகம் மருத்துவத்துறை மேற்கொண்ட ஆய்வின் படி வன்முறைக்கு ஆளாகும் குடும்பங்களின் சதவீதம் 38.7% ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 29% பேர் உடல் ரீதியான வன்முறையையும், 9% ஆனவர்கள் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர். 12% உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.

இவை அனைத்துமே 30 வயதில் எட்டாத இளம் பெண்களுக்கு நடைபெற்றது என்பதை அதிர்ச்சி தகவலாகும். 29% கருத்துப்படி திருமணத்துக்கு பின்னர் தமது குடும்ப உறுப்பினராலேயே ஒரு தடவையேனும் உடல் ரீதியான வன்முறையை சந்தித்துள்ளனர் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடும்ப வன்முறை என்றால் என்ன

குடும்ப வன்முறை என்பது, ஒருவருக்கு எதிராக அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் மேற்கொள்ளும் உடல், உள பாலியல் அல்லது, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் குடும்ப வன்முறையாகும்.

சூடு வைப்பது, முடியைப் பிடித்து இழுப்பது, அடி, உதை போன்றவற்றை மேற்கொண்டால் அது உடல் சார்ந்த குடும்ப வன்முறையாகும். ஆபாசமாகத் திட்டுதல், சந்தேகப்படுதல், தனிமைப்படுத்துவது மன ரீதியான வன்முறைகள் ஆகும்.

வல்லுறவு, தேவையில்லாமல் தொடுதல் போன்றன பாலியல் தொடர்பான வன்முறைகளாகும். சொத்துக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது, மனைவியின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களை ஒடுக்குவது பொருளாதார வன்முறையாகும்.

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்

இந்தியாவில் தேசிய, சர்வதேச பெண்கள் அமைப்புகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் முயற்சியால் 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமானது இயற்றப்பட்டு 2006 முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இழப்பீடு, வசிக்கும் உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.

இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரை பெற்று ஒரு வார காலத்தில் நடைமுறைகளை எடுக்க வேண்டும்.

ஆறு மாத காலத்துக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படுகையில் கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அத்துடன் பாதிப்பை ஏற்படுத்திய நபரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

You May Also Like:

தென்னை மரத்தின் பயன்கள்

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்