நாம் ஒரு விடயத்தை சரிவர புரிந்து கொள்வதற்கு கேட்டல் திறனானது அத்தியவசியமானதொன்றாகும். இதன் மூலமாக ஒரு விடயத்தை எம்மால் சரிவர புரிந்து கொள்ள முடியும்.
கேட்டல் என்றால் என்ன
கேட்டல் என்பது மற்றவர்கள் பேசும் போது எழுத்துக்கள், சொற்கள், பொருள் உணர்த்தும் வாக்கியங்கள் ஆகியவற்றை கேட்டலாகும். அதாவது ஒருவர் பேசுவதை முழுக் கவனத்துடன் கேட்க வேண்டும்.
ஒருவர் கூறுகின்ற கருத்தினை மற்றறொருவர் செவியின் வாயிலாக உணர்ந்து கொள்வதே கேட்டல் ஆகும். இதனூடாக ஒருவர் மற்றுமொருவருக்கு தமது கருத்தை தெரிவித்து கொள்ள முடியும்.
கேட்கும் திறன் வகைகள்
இயல்பாக கேட்டல்
இயல்பாக கேட்டல் எனும் பொழுது ஒரு விடயம் பற்றி பிரிதொருவர் பேசுகையில் அதனை கேட்டலாகும். அதாவது இசையினை கேட்டல், கருத்துக்களை கேட்டல், இறைவாழ்த்து பாடும்போது கேட்டல் போன்றவற்றை சுட்டிக்காட்ட முடிகின்றது.
ஆழ்ந்து கேட்டல்
ஒரு விடயத்தினை தெளிவாகவும் பிறர் புரிந்து கொள்ளும் விதத்திலும் கவரும் விதத்திலும் கூறுவதே ஆழ்ந்து கேட்டலாகும்.
மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் ஆசிரியர் கூறுதல், மாணவர்களை கவரும் வகையில் ஒன்றை கூறும்போது கேட்டல், தெரிந்த விடயம் பற்றி கூறுதல் போன்றனவாகும்.
நுட்பமாக கேட்டல்
அறியாத விடயம் பற்றி ஒருவரிடம் கூறும்போது நுட்பமாக கேட்பார்கள் உதாரணமாக செய்யுள், திருக்குறள் போன்றவற்றின் பொருளை கேட்கும் போது நுட்பமாக கேட்பதனை அவதானிக்க முடியும்.
கேட்டலின் அவசியம்
மற்றவர்கள் கூறவிளையும் கருத்துக்களை புரிந்து கொண்டு செயற்பட கேட்டலானது அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.
வாசிக்கவோ அல்லது எழுதவோ தெரியாதவர்கள் கேட்டலின் மூலம் தமது அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும். அதாவது பிறர் கற்கும் போதும் பேசும் போதும் அதனை செவிமடுத்து ஒருவர் கேட்க முற்படும்போது அவரின் அறிவு வளர்ச்சிக்கு உந்துதலாக கேட்டலானது காணப்படுகின்றது.
ஒரு மொழியை சரியாக புரிந்து கொண்டு அந்த மொழியினை பேசுவதற்கு கேட்டல் திறனே உந்து சக்தியாக காணப்படுகிறது. ஒரு மொழியை சரியாக கேட்பதினூடாக மாத்திரமே அதனை சரியாக புரிந்து கொள்ள முடியும்.
கேட்டல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்
கூர்ந்து கவனித்தல்
ஒருவருடன் நாம் உரையாடும் போது அவர் என்ன சொல்ல முனைகின்றார் என்பதனை கவனம் சிதறாது கேட்டலாகும். அதாவது பேசுபவரது முகத்தை நேராக பார்க்க வேண்டும் மற்றவர் பேசுவதை கேட்கும் பொழுது தேவையற்ற சிந்தனையை தவிர்த்தல். மற்றறொருவருடைய உரையாடலை சரியாக கேட்டல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
சமிக்ஞை செய்வது
மற்றொருவருடன் நாம் உரையாடிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதனை அறியப்படுத்த சமிக்ஞை செய்தல் வேண்டும். உதாரணமாக தலையை அசைத்தல், புன்னகைத்தல், ஆர்வத்துடன் கேட்பதனை வெளிப்படுத்துவதற்காக உடல் மொழிகள் போன்றவற்றை வெளிப்படுத்துதல் வேண்டும்.
பின்னூட்டம்
நாம் கேட்ட விடயங்களை பேசி முடிந்தவுடன் அவர்கூறியதை சுருக்காமாக கூற வேண்டும். இதனுடாக நாம் ஒரு விடயத்தை சரியாக கேட்டுக்கொள்ள முடியும்.
பேச்சை இடைமறிக்காது கேட்டல்
ஒரு இடத்தில் நேர்காணல் இடம் பெற்றிருக்கும் பொழுது அவரை இடைமறித்து நாம் பேசுதல் கூடாது. இதன் காரணமாக ஒருவர் என்ன கூற முனைகின்றார் என்பது தொடர்பான சரியான விளக்கங்களை புரிந்து கொள்ள முடியாது.
சிறந்த கேட்டல் திறனை வளர்ப்பதினூடாக எமது அறிவினை வளர்த்து கொள்வதோடு மாத்திரமல்லாமல் ஒருவருடைய கருத்தினையும் சரிவர புரிந்து கொண்டு செயற்படவும் முடியும்
You May Also Like: