பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பருவ வகைகளில் செங்கீரைப் பருவமும் ஒன்றாகும். பிள்ளைத் தமிழ் நூல் என்பது இலக்கியத்தில் வழங்கும் ஒரு பிரபந்த நூல் ஆகும்.
செங்கீரைப் பருவம் என்றால் என்ன
செங்கீரைப் பருவம் என்பது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவமே செங்கீரை பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும்.
அதாவது கீர் என்பது “சொல்” என பொருள்படும். இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவமாக காணப்படுகின்றது.
செங்கீரை பருவத்தில் குழந்தையானது ஒரு காலை உயர்த்தியும் மறு காலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடும் பருவமாகும். செங்கீரை செடி காற்றில் ஆடுவதைப் போன்று ஐந்து, ஆறு மாதங்களில் குழந்தையின் தலை மென்மையாக அசையும் என்பதனூடாக செங்கீரை பருவம் விளக்கப்படுகின்றது.
பெரியாழ்வார் பாடல்களில் செங்கீரை பருவம்
பெரியாழ்வார் கண்ணண் பிறந்து வளர்ந்ததை மனதில் வைத்து செங்கீரை பருவத்தில் கண்ணனை நினைத்து பாடல்களை பாடியுள்ளார். இதனுள் கண்ணனின் சிறப்புக்கள் பலவும் குறிப்பிடப்படுகின்றன.
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன் மேல்
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே….
விளக்கம்: ஊழிக் காலத்தில் உயிர்களை வதைத்து காக்கும் மணி வயிற்றை உடையவனே மாறி வரும் ஊழி தோறும் உலகை விழுங்கி ஆலில் துயின்ற இறைவனே என்பர் பெரியாழ்வார். மேலும் தாமரை போன்ற விழியும் மை போன்ற கரிய மேனியையும் உடைய கண்ணா எனக்காக செங்கீரை ஆடியிருக்க என்பர். இதனூடாக உருவங்களை கூறி செங்கீரையாட அழைப்பதனை காணலாம்.
மேலும் அரி உருவமும், மலையை குடையாக்கியும் கண்ணன் குழந்தையை செங்கீரையாட அழைக்கும் போது அவனின் அரி உருவம் எடுத்ததையும் மலையை குடையாக்கி காத்ததையும் ஆழ்வார் சிறப்பாக கூறியுள்ளார்.
மருதமரமாய் வந்தவனை அழித்தவனே, கண்ணா தயிரையும், நெய்யையும் களவிலே உண்டவன் நீ அது மாத்திரமல்லாமல் இரட்டை மருத மரங்களாய் வந்த அசுரர்களை தள்ளி அழித்தவன் உன் புன் சிரிப்பு முழுவதுமாக வருமுன் உன் திருக்குழல்கள் தாழ்ந்து அலையும் படி என் அப்பனே செங்கீரை ஆடுக என்பதினூடாக பெரியாழ்வார் குறிப்பிடுகின்றார்.
கண்ணணை செங்கீரைப் பருவத்தில் செங்கீரை ஆடச் சொல்லும் போது கண்ணன் வாயில் நல்ல மணம் வரும் என கூறுகின்றனர். மேலும் பாலுடன் நெய்யும் தயிரும் அழகான சாந்தும் செண்பக மணமும் சாந்ததும், நல்ல கற்பூர மணமும் கலந்து வரும் என்பதனையும் சுட்டிக் காட்டுகின்றனர். கண்ணனின் உருவத்தையும் அவன் அணிந்துள்ள அணிகலன்களையும் பட்டியலிட்டு குறிப்பிடுவதினூடாக கண்ணனுடைய செங்கீரை பருவத்தினை காண முடிகின்றது.
செங்கீரை பருவத்தின் சிறப்பு
செங்கீரைப் பருவமானது ஏனைய பருவங்களை விட மிக முக்கியமானதொரு பருவமாக காணப்படுகின்றது. மேலும் குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. குழந்தையானது தலையெடுத்து ஆடும் இனிய ஓசையினை எழுப்பக் கூடியதொரு பருவமாக செங்கீரை பருவமானது காணப்படுகின்றது.
இவ்வாறு காணப்படுகின்ற பருவத்தில் குழந்தையிடத்தில் அழகான சொற்களை கூற வேண்டும் என்பதினூடாக குழந்தை சிறந்த சொற்களை தன்னகத்தே கற்று கொள்வதற்கு இந்த செங்கீரைப் பருவமே அடிப்படையாக அமைகின்றது.
You May Also Like: