சுகாதாரமான வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் தூய்மையாக இருக்கும் போதே ஒரு நாடானது வளம் பெறும் என்பதோடு பல்வேறு நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.
உடல் மற்றும் உளம் சார்ந்த நோய்கள் எம்மை வந்தடையமால் காத்துக்கொள்வதற்கு தூய்மையாக இருப்பதே சிறந்த வழியாகும்.
அந்தவகையில் இந்திய தேசமானது பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் ஒரு நாடாக காணப்படுகிறது.
எனவே இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் திட்டமானது தூய்மை இந்தியா என்ற திட்டத்தினூடாக வீடுகள், கழிவறைகள், பள்ளிகள் என பல இடங்களில் தூய்மை பேணுதல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எம் அனைவரினதும் கடமையாகும்.
தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்
நமது தேசம் நமது பெருமை எனவே தூய்மை இந்திய நாட்டை உருவாக்குவோம்.!
தூய்மை இந்தியாவே எமது முதன்மை தேவை.!
சுகாதாரத்தை நோக்கி செயல்படுவது தேசத்தின் நேர்மறை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.!
விழிப்புடன் செயற்படுங்கள், குப்பை கொட்டுவதை நிறுத்துங்கள்.!
இந்தியாவை தூய்மையாக்க.. இன்றே உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்.!
நோயற்ற வாழ்வை உருவாக்க எமது இந்திய தேசத்தை தூய்மையாக மாற்றுங்கள்..!
தூய்மை இந்தியாவை உருவாக்கி.. குடிமகன் என்ற பெருமை கொள்ளுங்கள்..!
நமது நாடு, நமது அடையாளம், நமது அடையாளத்தை சுத்தமாக வைத்திருங்கள்..!
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டுமாயின் தூய்மை இந்தியத்திட்டம் அவசியமாகும்.!
இந்தியாவின் எதிர்காலம் தூய்மையைப் பொறுத்தது! சிறந்த இந்தியாவிற்காக ஒன்றுபடுவோம்.!
காற்று, நீர், நிலம் ஆகியவற்றை எமக்களிக்கும் சுற்றுச்சூழலை அவதானியுங்கள்.!
கைகோர்த்து இந்தியாவை பசுமையாகவும் தூய்மையாகவும் மாற்றுவோம்.!
சுத்தமான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா அதை ஒவ்வொரு இந்தியனும் நிஜமாக்குவோம்.!
சுத்தமான சூழலே நல்வாழ்வினை மலரச் செய்யும், தூய்மையான பாரத நாட்டை உருவாக்கி நல்வாழ்வினை ஏற்படுத்துவோம்.!
மாசு நிறைந்த உலகில், இந்தியாவை ஒளிரும் நட்சத்திரமாக மாற்ற கரம் கோர்ப்போம்.!
தூய்மை என்பது எமது கனவாக இருக்கவேண்டும். அதுவே மிளிரும் இந்தியாவை உருவாக்கும்.!
சுத்தமான நாட்டை உருவாக்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அனைவரும் ஒன்றுபட்டு தூய்மை இந்திய தேசத்தை உருவாக்குவோம்.!
எமது தேசத்தின் தூய்மைக்காக அனைவரும் ஒன்று பட்டு செயற்படுவோம்.
நேரத்தை வீணாக்காதீர்கள்..! இன்றே இந்தியாவின் அழகை பாதுகாப்பதில் ஒன்று சேருங்கள்.!
வீதியென்றும் தூய்மை என்ற விதியை பேணி தூய்மை இந்தியாவிற்கு வழிவகுப்போம்.!
வீட்டுக்கொரு மரம் வளர்த்து எம் இந்திய நாட்டை தூய்மை பெறச் செய்வோம்.!
வீடுகள், கழிவறைகள், பள்ளிகள் என அனைத்திலும் தூய்மையை பேணுவோம்.!
எம்மைக் கொல்லும் பிளாஸ்டிக் பாவனையின் பயன்பாட்டைத் தவிர்ப்போம், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்..!
தூய்மையான இந்தியாவை உருவாக்க பயிற்சி தேவை இல்லை! முயற்சிதான் தேவை.!
கண்ட இடங்களில் குப்பை போடுவதை இன்றே நிறுத்துவோம். எமது பாரதத்தின் தூய்மையை நாமே காப்போம்..!
மாசற்ற சூழலை ஏற்படுத்துவோம், வளமான இந்தியாவிற்கு வழியமைப்போம்..!
இயற்கையின் தூய்மையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாளை அது எம் இந்திய தேசத்தை பாதுகாத்து கொள்ளும்.!
வாருங்கள்! இன்றே நோயற்ற இந்தியாவை உருவாக்க தூய்மையை பேணுவோம்.!
You May Also Like: