நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன

nambikkai illa theermaanam in tamil

நம்பிக்கை இல்லா தீர்மானமானது சிறந்த ஆட்சியினை மேற்கொள்ள துணை புரிகின்றது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன

நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டு வரப்படும் ஒரு வகை தீர்மானமாகும்.

நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலமாக அமைச்சர்களை பதவியிறக்க முடியும். இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது அரசின் தலைவருக்கு எதிராக எதிர்கட்சிகளினால் கொண்டுவரப்படுகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் செயல்முறை

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள அரசின் தலைவர் மன்ற உறுப்பினர்களில் பெரும்பாண்மை ஆதரவானது தனக்கு உள்ளது என்பதனை வாக்கெடுப்பின் மூலமாக நிறுவ வேண்டும்.

இவ்வாறு நிறுவி விட்டால் அரசு தலைவரானவர் தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு இல்லாது பெரும்பாண்மை உறுப்பினர்களின் ஆதரவை தவற விடுவாரேயானால் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாண்மை உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால் அரசு கவிழ்ந்து பதவி விலகும் நிலையே காணப்படும்.

அதன் பின்னர் நாட்டின் தலைவரானவர் வேறொருவரை அரசமைக்க அழைப்பதோடு அவையை கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடாத்த ஆணையிடப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் கொண்டு வரமுடியும்

அரசானது பதவியில் இருக்க வேண்டுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை கொண்டிருத்தல் வேண்டும். அப்படி இல்லை என்று சந்தேகம் ஏற்பட்டாலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரமுடியும்.

சபாநயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் வாக்கொடுப்பு நடாத்தப்படும். நம்பிக்கையில்லா தீர்மானமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபாவினாலே நிறைவேற்றப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கியத்துவம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்களவையில் பெரும்பாண்மையை அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கை இருந்தால் மட்டுமே ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க முடியும். எனவே அரசாங்கத்தின் ஆட்சியில் முக்கியத்துவம் மிக்கதாக நம்பிக்கையில்லா தீர்மானமானது காணப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அமைச்சர் குழுவானது மக்களுக்கு பொறுப்பு கூறுவதாக காணப்படும் என்பதோடு பொறுப்பை சோதிக்கும் வகையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானமானது காணப்படுகிறது.

ஓரு தீர்மானத்தை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது துணைபுரிகின்றது.

மேலும் ஒரு முறையற்ற அமைச்சரை பதவி நீக்கவும் பெரும்பாண்மையினைப் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரமுடியும். ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு துணைபுரிவதாக நம்பிக்கையில்லா பிரேரணையானது காணப்படுகிறது.

ஒரு அரசு தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டுமானால் மக்களவையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை பெற்றிருக்க வேண்டும்.

இதனூடாக அரசின் இருப்பிற்கு நம்பிக்கையில்லா தீர்மானமானது தாக்கம் செய்யப்பட்டு அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அடுத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடாத்தி வாக்கெடுப்பானது இடம்பெறும் என்பதனூடாக, நம்பிக்கையில்லா தீர்மானமானது சபாநாயகர் ஏற்றுக்கொண்டவுடனேயேதான் இடம்பெறும் எனலாம்.

சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கே ஆட்சியமைக்க உரிமை உண்டு என்றும் எதிர்கட்சி நினைத்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்து வாக்கெடுப்பின் மூலம் ஆளும் கட்சியின் ஆதரவு எத்தனை என்பதனையும் வெளிப்படுத்த முடியும்.

பெரும்பாண்மை இல்லை என்றால் ஆட்சியானது கலைக்கப்படும். சில சமயங்களில் ஆளும் கட்சியே நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்து பெரும்பாண்மையினை நிரூபிக்க முடியும்.

You May Also Like:

யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன

சோழர்களின் தலைநகரம் எது