நான்கு வேதங்கள் எவை

4 vedas in tamil

வேதம் என்பது அறிவுநூல், மறை, சுருதி எனப்படும். வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். வேதத்தின் மறுபெயர் ஸ்ருதி, எழுதாக்கிழவி என்பனவாகும். வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உள்ளன.

சம்ஹிதை (கடவுளால் தரப்பட்டவையாகக் கருதப்படும் பாடல்கள்) பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள், ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள், உபநிமிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்) ஆகியவையே நான்கு பாகங்களுமாகும்.

வேதத்தினுடைய முக்கிய இலட்சியம் தன்னைத் தானே அறிந்துகொள்ளல். வேதத்தை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு நடக்கும் தர்சனங்களின் பெயர் ஆத்தீகம் அல்லது, வைத்தீகம் ஆகும். இந்த வேதங்களே இந்துதர்மத்தின் ஆணிவேராகும்.

வேதங்களின் சிறப்புக்கள்

இந்த நான்கு வேதங்களும் உலகப் புகழ் பெற்றவையாகும். காரணம் வேத கால ஆரியர்களின் பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகள் பண்பாடுகள் நாகரீகம் என அக்கால மாந்தர்களினது வரலாறு வெளிப்படுத்தப்படுகின்றன.

மற்றும் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரீகத்தில் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் எழுதாக் கிழவியாய் வழங்கிய இலக்கியங்கள் இவ்வளவு வேறு எங்கும் கிடைக்கவில்லை.

நான்கு வேதங்கள் எவை

  • ரிக் வேதம்
  • சாம வேதம்
  • யசுர் வேதம்
  • அதர்வண வேதம்

ரிக் வேதம்

ரிக் என்பதற்கு துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருளாகும். ரிக் வேதமே வேதங்களில் பழமையானதாகும். இது பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது.

ரிக் வேதத்தில் 33 தெய்வங்களைப் போற்றிப் பாடல்கள் உள்ளன. ரிக் வேதத்தில் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்றைய மூன்று வேதங்களும், இந்துத்தர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாகிய இந்த ரிக் வேதமே அழிவற்ற பேரறிவுப் பெட்டகமாக உள்ளது.

சாம வேதம்

The Veda of song என சாம வேதம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றது. ரிக் வேத மந்திரங்களைப் பாடல் வடிவில் அமைத்துக் காட்டும் வேதமாகும். இது ஆன்மீக அறிவையும், பக்தியின் வலிமையையும் பற்றிக் கூறுகின்றது.

சாம வேதமானது பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், புனிதத் தன்மையில் ரிக் வேதத்திற்கு அடுத்தபடியாக அதாவது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

சாமம் என்பதன் பொருள் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோசப்படுத்துவது எனப்படுகிறது. பெரும்பாலான பாடல்கள் ஏனைய மூன்று வேதங்களான ரிக், அதர்வன, யஜுர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

யஜுர் வேதம்

யஜுர் வேதமானது சடங்குகளின் வேதம் எனக் கூறுகின்றது. இந்த வேதமானது பல்வேறு சடங்குகளைப் பற்றி அறிவுரைகளைக் நமக்களிக்கின்றது. மேலும் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்பவும், மனதைப் பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை துல்லியமாக வரையறுத்துள்ளது.

அதர்வன வேதம்

இது பிரம்மவேதம் எனப்படும். இவை வேத காலத்தின் இறுதியில் தோன்றியவையாகும். சுமார் 6000 மந்திரங்களும், 731 பாடல்களைப் பெற்றுள்ளன.

மேலும் 20 காண்டங்களாகப் பிடிக்கப்பட்டுள்ளன. மந்திர உச்சரிப்பு முறை விரோதி அழிவின் பொருட்டு செய்யப்படும் பில்லி சூனியமுறை வேதசாரக்கிரியை அனுஷ்டானங்களை பற்றிய தோத்திரங்கள் அடங்கியுள்ளன.

பிரம்மணர்களின் ஆயுதம் அதர்வன வேதம் என மனு சொல்கின்றார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை அவைகளைத் தான் தாயத்துக்களாக அணிந்து வந்தனர்.

You May Also Like:

மகாலட்சுமியின் பறவை வாகனம்

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்