பண்டைய கால தமிழ் சமூகமானது பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டு மரபுகளையும் வரலாறுகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- திணைக்கோட்பாடு
- பொருளாதாரம்
- இலக்கியம்
- இறைவழிபாடு
- உணவு
- முடிவுரை
முன்னுரை
பண்டையகால தமிழ் சமூகம் என்பது இந்தியாவினுடைய வரலாற்றின் ஒரு இன்றியமையாத பகுதியாக காணப்படுகிறது.
இது கி.மு 600 தொடக்கம் கி.பி 300 வரையான அதாவது தொல்காப்பியம் கடக்க சங்ககாலம் வரையான காலப் பகுதியை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
இக்கால பகுதிகள் இந்திய மக்களான தமிழர்கள் வளமான பண்பாட்டையும், பொருளாதாரத்தையும் உடையவர்களாக காணப்பட்டனர்.
திணைக்கோட்பாடு
பண்டைய தமிழ் சமூகமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இடம் ஐந்து வகையான திணை கோட்பாட்டை கொண்ட அமைந்து காணப்பட்டன என்பதனை அக்காலங்களில் தோற்றம் பெற்ற இலக்கியங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஐந்து திணைகளில் காணப்படுபவர்கள் வெவ்வேறு பொருளாதார நிலைகளில் காணப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
பண்டைய கால தமிழர்கள் வேளாண்மையை தமது பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக மேற்கொண்டனர்.
இவர்கள் நெல், கரும்பு, சோளம், தினை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை பயிரிட்டதுடன், ஆடு, மாடு, எருது போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டனர் மற்றும் கடல்சார் வணிகங்களிலும் ஈடுபட்டனர் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றது.
இலக்கியம்
பண்டைய கால தமிழர்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாக காணப்பட்டனர்.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்த்த பெருமை தமிழர்களுக்கு மாத்திரமே உண்டு. சங்ககாலத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனும் மூன்று சங்கங்கள் அமைத்து தமிழ் மொழியானது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்க்கப்பட்டு எண்ணிலடங்காத நூல்கள் தோற்றம் பெற்று சிறப்பு பெற்று காணப்படுகின்றது.
அந்த வகையில் சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறள் எனும் நூலானது தற்போது உலக நாடுகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட கற்பிக்கப்படுகின்றமை சிறப்புக்குரிய விடயமாகும்.
தொல்காப்பியம் எனும் நூலானது உலகிலே முதன் முதலில் ஒரு மொழிக்கான இலக்கணங்கள் எழுதப்பட்ட நூலாக தமிழ் மொழியில் காணப்படுகிறது.
இறை வழிபாடு
பண்டையகால தமிழ் சமூகமானது ஆரம்ப காலப்பகுதியில், இயற்கை சக்திகளான மலை, காற்று, நெருப்பு, ஆகாயம் என்பவற்றை கடவுள்களாக எண்ணி அவற்றிற்கு வழிபாடுகளை இயற்றினர். அதன்பின்னர் அந்த இயற்கை சக்திகளுக்கு உரிய தேவர்களை வழிபட்டனர்.
பண்டைய கால சமூகத்தினர் வீரமிக்க போர் வீரர்களாக காணப்பட்டனர். ஊருக்கு சென்று இறந்த வீரனுக்கு நடுகற்கள் அமைத்து, போர் வீரர்களை கடவுளாக பாவித்து நடுகல் வழிபாடும் பண்டைய காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
உணவு
பண்டைய கால தமிழர்கள் அரிசி, கேழ்வரகு, திணை, குரக்கன் போன்ற தானியங்களையும் ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற விலங்குகளின் மாமிசங்களையும் உணவாக உட்கொண்டுள்ளனர்.
முடிவுரை
அரசர்கள், பிரபுக்கள், சாமானியர்கள் போன்ற பல்வேறு சமூகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்பட்ட பண்டைய தமிழ் சமூகமானது பல்வேறு பண்பாடுகளையும் கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை தற்காலத்தில் யாவரும் அறிந்து கொள்ளும் வகையில் இலக்கியங்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றது.
You May Also Like: