புஞ்சை நிலம் என்றால் என்ன

புஞ்சை நிலம் என்றால் என்ன

ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் வாழும் நிலத்தைச் சார்ந்தது என நில அளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பூமி உருவான காலத்தில் எல்லா இடங்களும் புளுதிக் காடாகவே இருந்தன. மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுப்பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த மக்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டனர். இத்தகைய வேளாண்மைத் தொழிலுக்கு நிலமும், நீரும் இன்றியமையாதவையாகும்.

மனிதன் தனது உழைப்பை பயன்படுத்தி காடு மேடுகளை பயிர் செய்யும் நிலங்களாக மாற்றிய அந்நிலங்களுக்கு ஏற்றால் போல் பெயர் வைத்தனர். சங்ககாலத்தில் ஐவகை நிலங்கள் காணப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவையே அவை ஐந்துமாகும். இது தவிர நஞ்சை நிலம், புஞ்சை நிலம் என தமிழர்கள் நிலத்தை இரு வகையாக வகைப்படுத்தியுள்ளனர்.

மேலும், வேளாண்மைத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதிகள் அதன் இயல்பு கருதி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதனை சங்கப் பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. அந்த வகையில், ஐங்குறுநூற்றுப் பாடலில் “புன்புலம் வித்திய புனவர் புணர்த்த” (ஐங். 246 3) என புஞ்சை நிலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

வானம் பார்த்த பூமி என்பதால்இ தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பாக 5 ஏக்கருக்கும் குறைவாக சொந்த புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

புஞ்சை நிலம் என்றால் என்ன

அதிக நீர் பாய்ச்சினால், அது நஞ்சை நிலமாகும். குறைந்த நீர் பாய்ச்சினால், அது புஞ்சைநிலம் என புஞ்சை நிலங்களை எளிமையாக வரையறை செய்யலாம்.

மேலும் குறைவான தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யும் நிலங்கள் புஞ்சை நிலங்கள் ஆகும். அதாவது ஆற்றுப்பாசன நீரில்லாமல் வானத்தை நம்பியோ அல்லது அந்த நிலத்தின் உரிமையாளர் கிணறு அல்லது போர் போட்டோ தன்னாலே ஒரு நீராதாரத்தை உருவாக்கி பயிரிடும் நிலமே புஞ்சை நிலம் ஆகும்.

மேலும் அரசு வருவாய் ஆவணங்களில் புஞ்சை நிலம் என்பது வறண்டது என பதிவு செய்யப்பட்டிருக்கும்.

புஞ்சை நிலப் பயிர்கள்

தமிழ்நாட்டில் புஞ்சை நிலங்களாக கிட்டத்தட்ட ஒரு கோடியே 67 லட்சம் ஏக்கர்கள் உள்ளன. இந்நிலங்களில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பயிர் செய்ய முடியும் என்பர்.

புஞ்சை நிலங்களில் பருத்தி, வேர்க்கடலை, பீன்ஸ், எள்ளு, அவரை, துவரை, வரகு, கம்பு, குதிரைவாலி, சூரியகாந்தி, சாமை போன்றனவும் தக்காளி, மிளகாய் முதலான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றனவும் பயிர் செய்ய முடியும்.

புஞ்சை நிலங்களை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இந்நிலங்களை வீடு கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.

நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

அதிகளவான நீர்பாச்சி வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் நஞ்சை நிலங்களாகும். பெரும்பாலாக ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எல்லா நிலங்களுமே நஞ்சை நிலங்கள் ஆகும்.

ஆனால் குறைந்த நீர்பாய்ச்சி வேளாண்மை செய்யப்படும் நிலங்கள் யாவும் புஞ்சை நிலங்களாகும். இவை வானம் பார்த்த பூமியாகும்.

நஞ்சை நிலங்களில் ஓர் ஆண்டுக்கு மூன்று போகம் வரை வேளாண்மை செய்ய முடியும். ஆனால் புஞ்சை நிலங்களில் ஆண்டுக்கு ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்யலாம்.

You May Also Like:

கிராமம் என்றால் என்ன