போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி

pothai porul vilipunarvu in tamil speech

முன்னுரை

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய உலகில் மனித சமூகத்தை அழிக்கும் ஓர் உயிர் கொல்லியாகவே போதைப்பொருளானது அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த போதைப்பொருளின் பாவணையிலிருந்து அனைவரையும் காப்பது எமது கடமையாகும் என்ற அடிப்படையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றியே பேசப்போகின்றேன்.

போதை பொருள்

போதை பொருள் பாவணையானது இன்றைய இளம் சமுதாயத்தினரை உடல், மன ரீதியாக பாதிப்படையச் செய்யும் பாரியதொரு பிரச்சினையாகும். போதைப்பொருள்கள் போதைக்காகவும், பொழுது போக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக இன்று சமூதாயமானது அழிவிற்குற்பட்டு வருகின்றது. மதுபானம், அபின், கஞ்சா, பான் மசாலா, ஹெரோயின் என பல்வேறுபட்ட வகைகளில் போதைப்பொருள்கள் காணப்படுகின்றன.

சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் போதை பாவனை

சமூகத்திற்கு மத்தியில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தலைநிமிர்ந்து காணப்படாமல் தலைகுனிந்து வாழவேண்டியதொரு சூழல் உருவாகிறது.

இன்று சமூகமானது பல்வேறு தீய நடவடிக்கையில் ஈடுபடுகின்றதாயின் அதற்கானதொரு பிரதான காரணமாக போதைப்பொருள் பாவனையே காணப்படுகிறது.

போதைப்பொருளின் காரணமாக ஒரு மனிதனின் உடலுறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது மரணமும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு தீய விடயங்கள் இடம்பெறவும் இந்த போதைப்பொருள்களே காரணமாகின்றன.

ஏனெனில் இதன் காரணமாக போதியளவு பணமில்லாததன் விளைவாக பிறரை மிரட்டி அல்லது துன்புறுத்தி பல்வேறு தீய குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

கல்வி கற்க கூடிய வயதில் உள்ள சிறுபிள்ளைகள் போதைப்பொருள் பாவனையால் கற்றலை இடைநிறுத்தி போதைக்கு அடிமையாகின்றனர்.

விழிப்புணர்வூட்டும் போதைப்பொருள் ஒழிப்பு தினம்

சிறந்த சமூகமாக வாழும் மக்களிடையே சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தி சமூகத்தை அழிக்கும் ஒரு காரணியாக போதைப்பொருள் பாவனையானது காணப்படுகின்றது.

அத்தகைய போதையை ஒழிப்பதற்காகவே ஆண்டுதோறும் ஜூன் 26ம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் ஒரு தினமாகவே போதை ஒழிப்பு தினம் காணப்படுகிறது. இத்தினத்தில் போதையினால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், பாதிப்புக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தல் மற்றும் நிகழ்ச்சிகள் சம்பவங்களினூடாக இதன் பாதிப்புக்கள் பற்றி தெளிவூட்டப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுவதன் மூலம் போதைப்பொருள் பாவனையினை குறைக்க முடியும். போதை ஒழிப்பு தினத்தில் கடுமையான போதை எதிர்ப்பு மாநாடுகளை நடாத்துவதினூடாக போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அழிவினை ஏற்படுத்தும் போதைப்பொருளை ஒழிப்பதற்கான வழிமுறைகள்

நாம் வாழுகின்ற சூழலில் நாளுக்கு நாள் போதைப்பொருளின் பாவனையானது அதிகரித்து கொண்டே வருகின்றதே தவிர குறைவாக காணப்படவில்லை ஏனெனில் போதைப்பொருள் பாவனைக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதென்பது இன்று அரிதாகவே காணப்படுகிறது.

எனவேதான் போதைப் பாவனையினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எம் அனைவரினதும் கடமையாகும். அந்த வகையில் இதனை தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் இயற்றப்படல் வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமாக போதைப் பாவனையை தடுக்க முடியும். போதை பாவனையானது கிடைக்கப் பெறும் வழிவகைகளை அரசாங்கமானது தடை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.

சமூக ஊடகங்களில் போதைப்பாவனையை தூண்டும் காரணங்களை வெளியிடாது போதையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்துக்களை பரப்புதல் வேண்டும்.

ஒரு மனிதனுக்கு எப்போது போதைப்பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமானது ஏற்படுகின்றதோ அப்போது அந்த எண்ணத்தை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக இப்பாவனையினை தடுக்க முடியும்.

ஒவ்வொரு தனிமனிதனும் போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம் என்ற அடிப்படையில் செயற்படுவதன் ஊடாகவே சிறந்த வாழ்க்கையினை அனைவரும் வாழ முடியும்.

You May Also Like:

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

இளைஞர்கள் பற்றிய கட்டுரை