மொழியின் சிறப்பு கட்டுரை

mozhiyin sirappu katturai in tamil

உலகில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் தற்காலக்கட்டத்தில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மொழிகள் காணப்படுகின்றன. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும் விடயங்களுள் மொழியும் ஒன்றாகும்.

மொழியின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உலகின் பிரபல்யமான மொழிகள்
  • மொழியின் வகைகள்
  • பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
  • மொழியின் முக்கியத்துவம்
  • முடிவுரை

முன்னுரை

எமது எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும், பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உதவுவது மொழியே ஆகும்.

நாகரீகம் வளர வளர பேச்சு வழக்கு மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றன. காலத்தால் பழமையான ஆதிகால மனிதன் தொடக்கம் இன்று வரை பல மொழிகள் தோற்றம் பெற்று வளர்ந்தும், அழிவடைந்தும் காணப்படுகின்றது.

உலகின் பிரபல்யமான மொழிகள்

உலகில் 25 மொழிகள் பேசப்படுபவர்களது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் அதன் பாரம்பரியத்தை பொருத்தும் மிகவும் செல்வாக்கு பெற்ற மொழிகளாக காணப்படுகின்றன என 2014 ஆண்டு வெளிவந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அம்மொழிகளாவன,

  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு
  • ஸ்பானிஷ்
  • அரபிக்
  • மாண்டரின்
  • ரஷ்யன்
  • போர்த்துகீஸ்
  • ஜெர்மன்
  • ஜப்பானீஸ்
  • ஹிந்து அல்லது உருது
  • மலாய்
  • பார்சி
  • சுவாஹிலி
  • தமிழ்
  • இத்தாலியன்
  • டச்சு
  • பெங்காலி
  • துர்கிஸ்
  • வியட்னாமிஸ்
  • போலிஸ்
  • ஜாவானீஸ்
  • பஞ்சாபி
  • தாய்
  • காண்டோனிஸ்
  • கொரியன்

மொழியின் வகைகள்

மொழியின் இயல்பு, பயன்பாடு, தன்மை, பயன்படுத்துபவரது தகுதி, பயன்படுத்துபவரது எண்ணிக்கை, பயன்படுத்துபவரது மதிப்பு, வாழும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பின்வருமாறு மொழி வகைப்படுத்தப்படுகிறது.

  • மூல மொழி
  • தனிமொழி
  • பொதுமொழி
  • சிறப்பு மொழி
  • குறுமொழி
  • கிளை மொழி
    • வட்டாரக் கிளைமொழி
    • வகுப்புக் கிளைமொழி
    • தொழில் கிளைமொழி
    • உட்கிளைமொழி
    • இலக்கிய கிளைமொழி
  • கொச்சை மொழி

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு

உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு மொழிக்கும் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு என இரண்டு விதம் காணப்படுகின்றது.

மக்கள் தமது நடைமுறை வாழ்வில் சரியான இலக்கணங்களை பின்பற்றி எப்போதும் உரையாடுவது இல்லை அவர்களின் வசதி ஏற்பவும் மனநிலை ஏற்பவும் உரையாடுகின்றனர்.

இவ்வாறு உரையாடப்படுகின்றவை பேச்சு வழக்கு மொழியாகும். இது அதிகமாக கிராமப் புறங்களில் வாழுகின்ற மக்களால் பேசப்படுகிறது.

எழுத்து வழக்கு என்பது நாம நமது கருத்தை பிறருக்கு உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கும் வகையில் எழுதப்படும் மொழியின் தொகுப்பாகும்.

மொழியின் முக்கியத்துவம்

விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும் முக்கிய ஒரு அம்சமாக மொழி என்பது காணப்படுகிறது. மொழி ஒரு சிறந்த தொடர்பாடல் சாதனமாகும்.

மொழியின் மூலமே ஒருவர் தனது உணர்வுகளையும் கருத்துக்களையும் சரியான முறையில் பிறருக்கு விளங்கத்தக்க வகையில் இலகுவாக எடுத்துக் கூற முடிகிறது. மொழி ஒரு சமூகத்தினருக்கு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய அம்சமாகும் காணப்படுகிறது.

முடிவுரை

ஆரம்ப காலத்தில் சைகைகள், ஒலிகள், சமிஞ்கைகள் மூலமும் தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்ட மனிதன் மொழியை உருவாக்கி தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதன் விளைவாக இன்று மனித இன பாரிய வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

புரதான காலத்தில் தோற்றம் பெற்ற பல்வேறு மொழிகள் தற்போது அழிவடைந்தும் அழிவடைகின்ற நிலையிலும் காணப்படுகின்றன. இந்நிலையில் உள்ள புராதான மொழிகளைப் பாதுகாத்து பேணி பாதுகாத்தல் வேண்டும்.

You May Also Like:

சமூக வலைத்தளங்கள் கட்டுரை

விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை