யானை காட்டில் வாழக்கூடிய மிகப் பெரிய விலங்காக காணப்படும். இது பாலூட்டி வகைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காக காணப்படுகிறது. யானைகளில் ஆசிய யானை, ஆப்பிரிக்க காட்டி யானை, ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை என மூன்று சிற்றினங்கள் உண்டு.
யானை பற்றி சில வரிகள்
#1. யானைகள் தான் தரையில் வாழும் விலங்குகளில் மனிதனுக்கு அடுத்ததாக அதிக நாள் உயிர் வாழும் விலங்காக காணப்படும். சராசரி வாழ் நாளாக 70 ஆண்டுகள் வாழும்.
#2. யானையின் காதுகள் மடல் போன்று பெரியதாக காணப்படும்.
#3. யானை தனது தும்பிக்கை மூலம் தான் உணவே உட்கொள்கிறது மற்றும் நீரையும் பருகிறது.
#4. யானைகள் தினமாக செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
#5. ஆண் யானையை களிறு என்றும் பெண் யானையை பிடி என்றும் யானையின் குட்டியை கன்று, குட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
#6. பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது யானையின் இரு தந்தங்களும் சம அளவில் இருக்காது.
#7. யானை தன் தும்பிக்கையால் 350 கிலோவிற்கும் மேல் எடையை தூக்கும் திறன் உடையது.
#8. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் உடையவை.
#9. நோயுற்ற யானைகளுக்கு உணவையும் நீரையும் மற்ற யானைகள் கொண்டு வந்து ஊட்டி விடும்.
#10. பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை.
#11. சிறந்த அறிவாற்றல் உடைய மிருகமாக யானை காணப்படுகின்றது.
#12. 20 ஆண்டுகளுக்கு முதல் பழகிய மனிதர்களை கூட அடையாளம் காணும் திறன் யானைகளுக்கு உண்டு.
#13. யானைகளுக்கு சிறந்த கேட்கும் திறனும் மோப்பம் திறனும் உண்டு. இதன் மூலம் தான் அவற்றை வேட்டையாட வரும் விலங்கை கண்டுபிடிக்கும்.
#14. யானைகளுக்கு இரக்கக் குணம் அதிகம் காணப்படும்.
#15. யானையின் உடம்பில் உள்ள சூட்டை குறைப்பதற்காகவே அதன் காதுகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.
#16. யானைகளுக்கு தன்னை அடையாளம் காணும் தன் உணர்வு உண்டு.
#17. யானையின் கற்ப காலம் 22 மாதங்கள் ஆகும்.
#18. பெண் யானைகள் பொதுவாக ஒரு தடவையில் ஒரு குட்டியை மட்டும் தான் ஈன்றெடுக்கும். சில நேரங்களில் இரண்டாகவும் காணப்படும்.
#19. யானையின் மூளை 5 kg ஆகும். இதற்கு ஞாபக சக்தி மிக அதிகமாக காணப்படும்.
#20. இது பொதுவாக மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடும். யானைகள் அதன் தும்பிக்கையின் மூலமாக தான் மூச்சு விடும். அதன் துவாரங்கள் தும்பிக்கையின் நுனியில் காணப்படும்.
You May Also Like: