மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளபடி அப்படியே பிரதிபலிக்கின்ற கண்ணாடி மக்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவியாகும் ஒளி வடிவிலும் எழுத்து வடிவிலும் மனித உணர்வுகளையும் சிந்தனைகளையும் செயல்களையும் வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக மொழி உள்ளது.
அந்தவகையில் தமிழில் இலக்கணமே விதிகள் மூலமாக மொழியைச் செம்மையாய் வைத்திருக்க உதவுகின்றது. தமிழ் இலக்கணமானது மிகவும் பரந்து விரிந்த பரப்பாகும். தமிழில் விளிச் சொற்களுக்குக்குப் பஞ்சமே இல்லை எனக் கூறும் அளவிற்கு ஏராளமான விளிச் சொற்கள் தமிழில் உண்டு. விளிச் சொற்களானவை ஒரு சொல்லை விளிப்பதற்குப் பயன்படுகின்றன.
விளிச்சொல் என்றால் என்ன
விளிச் சொற்கள் என்பது நம்முடைய மனதில் ஆழத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் எதிர்பாராத நேரத்தில் வெளிப்படுகிறது ஆகும். ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல் விளிச் எனலாம்.
சேய்மை விளிச் சொற்கள்
அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, அக்கா, அரசு, அவர், அய்யா, அத்தான் போன்றன சேய்மை விளிச்சொற்கள் ஆகும்.
அண்மை விளிச் சொற்கள்
நம்பி, சோழா, சேர்ப்பா, ஊரா, சேரமான், மலையமான் (இயல்பு), உண்டாய் கரியாய், அழாஅன், மகனே, மகாஅர், சிறாஅர், தோன்றால், மக்காள் போன்றன அண்மை விளிச் சொல்லிற்கான உதாரணங்களாகும்.
மேலும் விளிச்சொற்கள் ஆச்சரியம், வியப்பு, வெறுப்பு, கவலை, அழைப்பு, மகிழ்ச்சி மற்றும் சம்மதத்தை வெளிப்படுத்தும்.
மகிழ்ச்சியை தெரிவிக்கும் போது ஆஹா, வாவ், சபாஷ் முதலிய விளிச் சொற்களை பயன்படுத்துகின்றோம்.
உதாரணம் – வாவ்! மதன் எவ்வளவு நன்றாக ஆடுகின்றான்.
சபாஷ்! ரோஜா வெற்றி பெற்று விட்டாள்.
ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்போது ஓ, ஒ, அற்புதம், மிக அழகு, ஆஹா போன்ற விளிச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம்.
உதாரணம் – ஆஹா! காஷ்மீர் எவ்வளவு அழகு.
ஓ! இந்த நீர்வீழ்ச்சி எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது.
கவலையை வெளிப்படுத்தும் போது ஐயோ, இச்சே, ஊ முதலான விளிச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம்.
உதாரணம் – ஐயோ அந்தப் பூனை செத்து போச்சு.
ஊ அவன் நோயில் இருக்கின்றானா?
சம்மதத்தை வெளிப்படுத்தும்போது சரி, நன்று, ஆம்
உதாரணம் – சரி அங்கு போய் பார்.
வெறுப்பை வெளிப்படுத்தும் போது சீ, ச்சீ, இச்சே, விலகு, பேசாதே, அமைதியாய் இரு, இகழாதே போன்ற விளிச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம்.
உதாரணம் – ச்சீ! – இந்த இடங்கள் யாவும் அசிங்கமாக இருக்கிறது.
ச்சீ! முதலில் இங்கிருந்து போ
பேசாதே ! அமைதியாய் இரு!
இகழாதே! அவனைத் திட்டாதே!
அழைப்பைத் தெரிவிக்கும் போது டேய், ஏலே, ஐயா முதலான விளிச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம்.
உதாரணம் – ஏலே! ரவி முதலில் இங்கு வா!
இவை தவிர தேவர், முனிவர் போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்களை அழைக்கும் போது தேவரீரிர் எனும் விளிச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணம் – தேவரீரின் உணவு அருந்த வாருங்கள்.
எலே என்ற சொல் பெண்ணைக் குறிக்க ஒலிக்கும் சொல்லாகவும் உள்ளது.
உதாரணமாக, – “கொடிய என்னெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே” சிலப்பதிகாரத்தில் தோழியை விளிக்கும் சொல்லாக எல்லே குறிப்பிடப்பட்டுள்ளது.
You May Also Like: