இயற்கையின் அதீத சக்திகளையும் பரிமாண முறையில் மாற்றும் அறிவியலின் ஒரு பகுதி வேதியலாக காணப்படுகின்றது. அதாவது மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட தொன்றாக வேதியல் அமைந்துள்ளது.
வேதியியல் என்றால் என்ன
வேதியல் என்பது அணுக்களால் அல்லது தனிமங்கள் மற்றும் மூலக் கூறுகளால் இணைந்து உருவாகும் சேர்மங்களை பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையே வேதியலாகும். இங்கு அணுக்களே பிரதான இடத்தினை வகிக்கின்றது.
வேதியல் துறையில் அணுக்கள் மற்றும் மூலக் கூறுகளானவை இரசாயனப் பிணைப்புகளுக்கு உள்ளாகின்றன. மேலும் சின்ஹா வேதியல் அணுக்கள், அணுக்களுக்கிடையான இடைவினைகள் பற்றியும் சிறப்பாக ஆராய்கின்றது.
வேதியலின் வகைகள்
வேதியலானது மூன்று வகைகளாக காணப்படும்.
இயல் வேதியல்
இயல் வேதியல் எனப்படுவது வேதிப் பொருட்களில் காணப்படும் பெரிய துகள்கள், நுண் துகள்கள், அணுக்கள் மூலக் கூறுகள் போன்றவற்றை இயல்பியல் அடிப்படையில் ஆய்வு செய்வதே இயல் வேதியலாகும்.
வேதியலானது விண்ணில் செலுத்தப்படும் ரொக்கெட், ஆழ் துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுகிறது.
கனிம வேதியல்
காபன் அல்லாத உலோகங்கள் மற்றும் உலோக சேர்மானங்கள் முதலானவற்றின் பண்புகளை பற்றி விபரிக்கும் ஒரு வேதியலே கனிம வேதியலாகும். இது தங்கம், வெள்ளி, வயர் போன்ற உலோகங்களை தயாரிக்க துணை செய்கின்றது.
அதாவது பல கனிமச் சேர்மங்கள் நேர்மின் அயனிகளும் எதிர்மின் அயனிகளும் அயனிப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள அயனிச் சேர்மங்களாக காணப்படுகின்றது.
கரிம வேதியல்
கரிம வேதியல் எனப்படுவது கரிம அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் உருவான வேதிப் பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயலே கரிம வேதியல் ஆகும்.
இந்த கரிம கலவைகள் அனைத்தும் புவி வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகின்றன. அவை கட்டமைப்பு ரீதியிலும் மாறுபட்டு காணப்படுகின்றன.
வேதியலானது மருத்துவத் துறையில் மருந்துகள் தயாரிப்பதற்கும் விவசாய உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
வேதியலின் முக்கியத்துவம்
எமக்கும் வேதியலுக்குமிடையேயான தொடர்பானது மிகவும் நெருக்கமான பிணைப்பாகவே காணப்படுகின்றது. அதாவது நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஒட்சிசனானது வேதியலாகும். தன்னைச் சுற்றியுள்ள வேதியலை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொண்டு மனித இனமானது வளர்ந்துகொண்டு வருகின்றது.
நாம் குடிக்கும் நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவை ஒரு வேதியல் பொருளாகும். மேலும் நாம் உண்ணுகின்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்களில் வேதிப் பொருட்களின் பயன்பாடானது காணப்படுகின்றது. கருவில் இருக்கும் போதே ஒரு மனிதனுக்கும் வேதியலுக்குமிடையேயான தொடர்பானது ஏற்படுகின்றது.
அதாவது கருவிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர கல்சியம், இரும்புச் சத்து, போலிக் அமில மாத்திரைகளை மருத்துவர் வழங்குகின்றனர். இதனூடாக கல்சியம் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறு துணையாக இந்த வேதியலானது காணப்படுகின்றது.
விஷமானதும் நச்சுத் தன்மையானவற்றிற்கான சிறப்பான விஷமுறிவு மருந்துகளானவை வேதிப் பொருள்களில் ஒன்றாகும். இதனூடாக எமது உயிரை பாதுகாக்க கூடியதொன்றாக வேதியல் காணப்படுகின்றது.
உதாரணமாக பாம்புக் கடியின் போது விஷமானது ரத்த சிவப்பணுக்களை அழித்து திசுக்களை செயலிழக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து எம்மை பாதுகாக்க கூடியதாக வேதியலானது காணப்படுகின்றது.
எனவே தான் வேதியலானது எம்முடன் இணைந்ததொன்றாகவே காணப்படுவதோடு எமது வாழ்வினை சிறப்பாக வாழ்வதற்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவும் துணைபுரிகின்றது.
ஆகவே வேதியலை நல்ல விடயங்களுக்காக பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான வாழக்கையினை வாழ முடியும்.
You May Also Like: