ஆற்றல் சேமிப்பு கட்டுரை

aatral semippu katturai in tamil

ஆற்றல் சேமிப்பானது இன்றைய சூழலில் அவசியமானதொன்றாகும். ஆற்றல் சேமிப்பானது தேசிய பாதுகாப்பு மற்றும் நிதிமூலதன அதிகரிப்பு போன்றவற்றிற்கு வித்திடக்கூடியதாகும்.

ஆற்றல் சேமிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆற்றல் சேமிப்பு என்பது
  • ஆற்றல் சேமிப்பின் அவசியம்
  • ஆற்றல் சேமிப்பின் நன்மைகள்
  • ஆற்றலை சேமிப்பதற்கான வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

ஆற்றல் சேமிப்பில் மின் அமைப்புக்களில் ஆற்றலை சேமிப்பது பிரதானமானதொன்றாக காணப்படுகின்றது. எதிர்காலத்தில் நாம் சிறப்புற வாழ்வதற்கான ஆற்றல்களை வழங்குவதில் ஆற்றல் சேமிப்பே சிறந்து விளங்குகின்றது. அந்தவகையில் காற்று ஆற்றல், சூரிய ஆற்றல் போன்றவற்றை ஆற்றலாக கூறமுடியும்.

ஆற்றல் சேமிப்பு என்பது

ஆற்றல் சேமிப்பு என்பது ஆற்றல் சேவையை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை சேமிப்பதனையே சுட்டிநிற்கின்றது.

ஓர் நிலையான சேவைக்கு குறைவான ஆற்றலை பயன்படுத்துவதே சிறந்த ஆற்றல் சேமிப்பாகும். உதாரணமாக குறைவான எரி பொருளுக்கு அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை பயன்படுத்தலை கூறமுடியும்.

எமது எதிர்கால வாழ்க்கை முறைமையானது சிறப்புற மாற வேண்டுமாயின் ஆற்றல் சேமிப்பு அவசியமானதாகும்.

ஆற்றல் சேமிப்பின் அவசியம்

ஆற்றல் சேமிப்பானது எமது வாழ்வில் பிரதானமான இடத்தினை பிடித்துக் கொண்டே வருகின்றது. ஆற்றலை சேமித்து வைப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும்.

மேலும் ஆற்றல்களை வரம்பற்ற முறையில் இலவசமாகவும், சுத்தமாகவும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. அதேபோன்று புதுபிக்கதக்க ஆற்றலோடு மின்சார உற்பத்தியினை மேற்கொள்ள்வும் ஆற்றல் அவசியமானதாக காணப்படுகின்றது.

ஆற்றல் சேமிப்பின் நன்மைகள்

ஆற்றல் சேமிப்பானது பல்வேறு நன்மைகளை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. ஆற்றல் சேமிப்பானது நிதி பாதுகாப்பு ஏற்பட வழியமைத்து தருகின்றது.

உயிர்களை காத்திடவும், எதிர்கால வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும், புவி வெப்பமடைவதை தவிர்க்கவும் என பல்வேறுபட்ட நன்மைகளை கொண்டமைந்ததாகவே ஆற்றல் சேமிப்பானது காணப்படுகின்றது.

மேலும் மூலதனம் அதிகரிப்பு மற்றும் சூழற் தரம், தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கு வித்திடக்கூடியதாகவும் ஆற்றல் சேமிப்பே அமைந்துள்ளது.

ஆற்றலை சேமிப்பதற்கான வழிமுறைகள்

நாம் சிறந்த ஆற்றலை பெற்றுகொள்ள வேண்டுமாயின் ஆற்றல் சேமிப்பினை மேற்கொள்ள வேண்டும் அந்த வகையில் ஆற்றல் சேமிப்பு வழிகளாக பின்வருவனவற்றை நோக்கலாம்.

அதாவது மின்னனு சாதனங்களை பயன்படுத்துகின்ற போது அவற்றை அணைத்தல், அத்தோடு சாதாரண மின் விளக்குகளின் விலை அதிகமாக காணப்படினும் அதனூடாக மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும்.

மேலும் நாம் பயன்படுத்துகின்ற மின் சாதனங்களை தூசுபடியாமல் பராமரித்தல், நட்சத்திர குறியீடு உள்ள மின்னனு சாதனங்களை பயன்படுத்தல், மிதிவண்டிகளை பயன்படுத்துதல், கணிணியை காத்திருப்பில் வைக்காது நிறுத்தி வைத்தல் என பல்வேறு வழிமுறைகளை கையாளுவதன் மூலம் ஆற்றலை சேமிக்க முடியும்.

முடிவுரை

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து ஆற்றல் சேமிப்பில் ஈடுபடுவது கட்டாயமானதாகும் என்ற வகையில் வளமான எதிர்காலத்திற்கு வித்திடக்கூடியதொரு முறைமையே ஆற்றல் சேமிப்பாகும்.

எமக்கு கிடைக்கப்பெறும் ஆற்றல்களில் சிறிதளவேனும் சேமித்து வைப்பதன் மூலமே வளமான வாழ்வை வாழ முடியும்.

You May Also Like:

சிறு சேமிப்பு கட்டுரை

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்