அனுப்புநர் என்பதே சரியானதாகும்.
காரணம்
வந்தனர், சென்றனர் போன்ற பன்மை விகுதிக்கு மட்டுமே “னர்” பயன்படும்.
அனுப்பு என்பது ஓர் செயலாகும் என்றவகையில் ஒரு செயலை செய்பவரை குறிக்கும் போது “நர்” விகுதி சேர்ப்பதே இலக்கண விதிப்படி சரியானதாகும். உதாரணமாக நேற்று வெளியாகிய திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் சேர்ந்து இயக்கினர்.
அனுப்பு என்ற சொல்லுடன் “நர்” விகுதி சேருகின்ற போது அனுப்புநர் என்றே எழுதவேண்டுமெ தவிர அனுப்புனர் என்று எழுதுவதானது தவறானதாகும். ஏனெனில் வினைச் சொல்லை பெயர்ச் சொல்லாக மாற்றும் போது “ந” போட்டு எழுதுவதே மரபாகும்.
எடுத்துக்காட்டுகள்
- பெறுநர்
- இயக்குநர்
- விடுநர்
You May Also Like: