கிராம பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் பங்கு கட்டுரை

grama porulathara membatil kooturavin pangu katturai in tamil

ஒரு நாட்டின் அபிவிருத்தியானது அந்த நாட்டில் இருக்கக்கூடிய கிராம அலகுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றன. கிராமங்களில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் காணப்படுகின்றன.

ஒரு தனி மனிதனுக்காக சமுதாயமும், சமுதாயத்துக்காக தனி மனிதனும் உழைப்பதே கூட்டுறவுத் துறையின் கொள்கையாகும்.

கிராம பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கூட்டுறவுத் துறையின் தோற்றம்
  • கிராமங்களில் கூட்டுறவுத்துறை உருவாவதற்கான காரணங்கள்
  • கூட்டுறவு துறையின் செயற்பாடுகள்
  • கிராமங்களில் கூட்டுறவுத் துறையின் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

கூட்டுறவு என்பதனை பொதுவாக நோக்குமே ஆனால் சேவை செய்யும் மனப்பாங்கில் அமைக்கப்பட்ட அமைப்புக்கள் ஆகும்.

அதாவது ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தின் அச்சாணியாகவும் இது விளங்குகின்றது. கிராமிய பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவு துறையின் பங்கு தொடர்பாக இக்கட்டுரையில் நோக்கலாம்.

கூட்டுறவுத் துறையின் தோற்றம்

கூட்டுறவு துறையின் ஆரம்பம் ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்பட்டது. அந்த வகையில் 1904ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் எனும் கிராமத்தில் இந்த கூட்டுறவு சங்கங்கள் முதன் முதலில் தோற்றம் கண்டது.

இதன்படி பின் தங்கிய கிராமங்களில் இருந்து அதன் பொருளாதார அபிவிருத்தியை எட்டும் நோக்கில் இந்திய நாட்டின் பல்வேறு கிராமங்களிலும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி காணப்பட்டது.

கிராமங்களில் கூட்டுறவுத்துறை உருவாவதற்கான காரணங்கள்

பொதுவாக எம்முடைய நாட்டில் நகரங்களை விட கிராமங்களே பின்தங்கிய நிலமையில் காணப்படுகின்றன. அதாவது மக்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலை கிராமங்களில் காணப்படுகின்றது.

பொதுவாக கிராமம் அல்லது சேரி புறங்களில் வாழக்கூடிய ஏழை மக்களால் தங்களுடைய தேவைகள் அனைத்தையும் தனியாக நிறைவேற்றிக் கொள்வதில் பல இன்னல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான காரணங்கள் கருத்திற் கொள்ளப்பட்டே கிராமப்புறங்களில் மக்களது நலன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த கூட்டுறவுத்துறை வளர்ச்சி கண்டது.

கூட்டுறவு துறையின் செயற்பாடுகள்

கூட்டுறவு துறையின் முதன்மையான நோக்கம் சிறந்த சேவையை புரிவதாகும். அதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் வாழக்கூடிய மக்களுக்கு கைத்தொழில், வேளாண்மை போன்றவற்றுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கக் கூடியதாகவே இந்த கூட்டுறவு துறையின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

அதன்படி மக்களது வேளாண்மை மற்றும் கைத்தொழில் என்பவற்றுக்காக குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல், உரம், தானியம் மற்றும் கைத்தொழில் கருவிகளை வழங்குதல் போன்றவாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை காணலாம்.

கிராமங்களில் கூட்டுறவுத் துறையின் நன்மைகள்

கூட்டுறவு துறைகளின் மூலமாக கிராமிய மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கின்றனர்.

அதன் அடிப்படையில் தங்களுடைய ஜீவனோபாயத் தொழிலை சிறந்த முறையில் மேற்கொள்ளல், கிராமங்களை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்லல், உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், மக்களுக்கு சமூக நீதியை கற்றுக் கொடுத்தல், உற்பத்தியாளர் விலைக்கும் நுகர்வோர் விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறைத்தல் மற்றும் கிராமிய மக்களுக்கான சேவைகளை வழங்குதல் போன்றவாறான பல்வேறு நன்மைகளை கூட்டுறவுத்துறை மூலம் ஒவ்வொரு கிராமமும் பெற்றுக்கொள்கின்றன.

முடிவுரை

கிராம பொருளாதார அபிவிருத்திக்கு மட்டுமல்லாது முழு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்காற்றக்கூடிய ஒரு அமைப்பாகவே இந்த கூட்டுறவுத்துறை காணப்படுகின்றது.

இவ்வாறான உயரிய நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு துறைகளானது ஆரம்பகால செயற்பாடுகளைப் போல் அல்லாது தற்காலங்களில் சுயநலம், லஞ்சம், ஊழல் மற்றும் பிற தலையீடுகள் போன்றவற்றால் ஜனநாயகம் கெட்டுச் செயற்படுவதனைக் காணலாம்.

சேவை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டுறவு துறைகளின் நோக்கங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவது ஒவ்வொரு கூட்டுறவுத்துறை அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

You May Also Like:

கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை