தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

tamil nadu uruvana varalaru katturai

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்துவ மிக்கதொரு சிறப்பினை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடானது கலாச்சார தொன்மையையும், பெருமையையும் கொண்டதொரு மாநிலமாக காணப்படுகிறது.

தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழ்நாடு உருவான வரலாறு
  • மொழி ரீதியில் மாநிலங்கள் பிரிக்கப்படல்
  • தமிழ்நாடு நாள்
  • பெரிய நகரங்களை கொண்டமைந்த தமிழ்நாடு
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் 28 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ் நாடு விளங்குகின்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாக வசதிகளுடன் மாகண அரசுகளும், மத்திய அரசும் அமைக்கப்பட்டன என்ற வகையில் நாட்டில் சில பகுதிகள் மொழி ரீதியில் தனித்து காணப்பட்டதன் விளைவாக தனி மாநிலங்கள் அமைக்க வேண்டியதன் தேவை எழுந்தது இதன் காரணமாக உருவானதே தமிழ் நாடாகும்.

தமிழ்நாடு உருவான வரலாறு

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலப்பகுதியில் தமிழ்நாட்டினை மெட்ராஸ் என்றே அழைத்து வந்தனர்.

1953ம் ஆண்டு காலப்பகுதியில் ஆந்திரா, கேரளா போன்றவை பிரிக்கப்பட்டதனை அடுத்து மெட்ராஸ்னை தமிழ்நாடு என மாற்றம் செய்ய போரட்டங்கள் இடம் பெற்றதோடு 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தமிழ்நாடாக தோற்றம் பெற்றது.

மொழி ரீதியில் மாநிலங்கள் பிரிக்கப்படல்

இந்திய தேசத்தில் மொழி ரீதியில் மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கொள்கையானது உருவான போது 1938ல் ஆந்திர கோரிக்கைக்கு முன்பதாகவே இடம் பெற்ற இந்திய எதிர்ப்பு மாநாட்டில் தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார் போன்றோர் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற கோரிக்கையை விடுத்தனர்.

இதற்கு பிற்பட்ட காலங்களில் அதாவது 1948 காலப்பகுதிகளில் மொழி வாரி மாநிலங்களின் தேவையை கருத்திற்கொண்டு எஸ்.கே.தார் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதன் நன்மை, தீமைகள் பற்றி ஆராய்ந்தது.

மேலும் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொழிவாரி மாநிலம் அவசியமில்லை நிர்வாக வசதியின் அடிப்படையில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இவ்வாறனதொரு சூழலிலேயேதான் மக்கள் அனைவரும் இதனை எதிர்த்து ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என போராட்டங்களில் ஈடுபடலாயினர்.

இதன் காரணமாகவே மொழி ரீதியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோடு அவற்றுள் பிரதானமானதாக தமிழ்நாடு காணப்படுகின்றது.

தமிழ்நாடு நாள்

மொழிவாரி அடிப்படையில் 1956ம் ஆண்டு கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களானவை பிரிக்கப்பட்டதோடு அந்த நாளை சிறப்பு மிக்க நாளாகவும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் 63 வருடங்களாக இந்நாளை கொண்டாடமல் இருந்து வந்ததோடு 2019 ஆண்டு தமிழகத்திலும் தமிழ்நாடு நாள் நவம்பர் முதலாம் திகதி கொண்டாடப்படும் என்று அப்போதைய முதலமைச்சராக காணப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கமையவே இன்று தமிழ்நாடு நாளானது கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெரிய நகரங்களை கொண்டமைந்த தமிழ்நாடு

தமிழ்நாடானது பெரிய நகரங்களை தன்னகத்தே கொண்டமைந்ததொரு மாநிலமாகும் என்ற வகையில் தலைநகரான சென்னையே அதிக மக்கள் தொகையினை கொண்டதோர் நகரமாகும்.

மேலும் கோயம்பத்தூர் மற்றும் மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர் என பல பெரிய நகரங்களை கொண்டமைந்ததோர் மாநிலமாக தமிழ்நாடானது திகழ்கின்றது.

முடிவுரை

இந்திய நாட்டின் பெருமைக்குரிய மாநிலங்களுல் ஒன்றாகவே தமிழ்நாடானது திகழ்கின்றது. என்பதோடு பல்வேறு போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் அடிப்படையிலேயே தமிழ்நாடானது உருவாகியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மேலும் இன்று பல்வேறு சிறப்புக்களை கொண்டமைந்து வளர்ந்து வரும் ஓர் மாநிலமாகவும் தமிழ்நாடு காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

மருது பாண்டியர் பற்றிய கட்டுரை

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை