வாழ்த்துகள் என்பதே சரி
காரணம்
இலக்கண விதிப்படி “உ” என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றது. அச்சொற்கள் தன் இயல்பான நிலையிலிருந்து குறைந்து ஒலிக்குமாயின் அதுவே குற்றியலுகரமாகும்.
அந்த வகையில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் போன்ற எழுத்துக்களுக்கு பின் வருகின்ற உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து (மெய் எழுத்துக்கள்) வராது என்றவகையில் வாழ்த்து என்பதை வாழ்த்துகள் என்று எழுதுகின்ற போதே சரியாகும். வாழ்த்துக்கள் என்று எழுதுவது தவறானதாகும்.
சுருங்கக்கூறுவதாயின் “கள்” விகுதியுடன் முடியும் இடங்களில் ஒற்றெழுத்துக்கள் வரக்கூடாது.
சில எடுத்துக்காட்டுகள்
- வாக்குகள்
- கணக்குகள்
- எழுத்துகள்
- வாழ்த்துகள்
- அவர்கள்
- இவர்கள்
You May Also Like: