மைத்துனர் என்றால் என்ன

maithunar meaning in tamil

நமது தமிழ்மொழியில் பல தலைமுறைகளுக்கான பெயர்களை வைத்துள்ளோம். அதாவது நமது தலைமுறையில் குழந்தை பேசும் போதே உறவுமுறைகளை அறிமுகப்படுத்தும் வழக்கம் உண்டு.

உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தே குழந்தைகளை வளர்த்து வருவதுண்டு. உறவு முறைகளாலும் நமது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

உறவுமுறை என்பதன் அர்த்தம்

உறவு முறை என்பது தனியொரு மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்குபடுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சமாக உள்ளது. இது ஆரம்பத்தில் உயிரியல் மரபுவழியில் தீர்மானிக்கப்படுவதாக கருதப்பட்டதனை அறியலாம்.

ஒரு குழந்தை பிறக்கும் போதே தாய், தந்தை, சகோதரர்கள், மாமா, மாமி, தாத்தா, பாட்டி என தாய் வழியைச் சார்ந்தும், தந்தை வழி சார்ந்தும் பல உறவினர்கள் இருப்பார்கள். இவை தவிர அவர்கள் வளர்ந்து திருமணம் ஆகும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் பல புதிய உறவுகள் சேர்வதனைக் காணலாம்.

நமது வாழ்நாளில் உறவினர்கள் வட்டம் என்பது விரிவடைந்து செல்கின்றது. இதில் சில உறவுகள் நெருங்கிய மற்றும், முக்கியத்துவமானவர்களாகவும் சில உறவுகள் தூரத்து உறவுகளாகவும் மேம்போக்கானவர்களாகவும் உள்ளனர்.

மைத்துனர் என்றால் என்ன

கணவரின் அல்லது மனைவியின் அண்ணன் நம்பி நாத்தனார் அல்லது மைத்துனர் என அழைக்கப்படுகின்றனர். இது ஆங்கிலத்தில் Brother in Law என அழைக்கப்படுகின்றது.

உறவுகளின் வகைகள்

ரத்த உறவினர்கள் – உயிரியல் முறையில் தொடர்புடையவர்கள் ரத்த உறவுகள் ஆகும். அதாவது ஒருவருடைய தாய் தந்தை பாட்டன் பாட்டி பூட்டன் பூட்டி ஓட்டல் ஓட்டி போன்றோர் உயிரியல் முறையில் தொடர்புடையவர்களாகவுள்ள உறவுகள்.

மண உறவுமுறை – ரத்த உறவு இல்லாதவர்களை திருமணம் செய்யும்போது அவர்களுடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படுகின்ற புதிய உறவுமுறை மண உறவு முறையாகும்.

புனைவியல் உறவு – ஒருவரை தத்தெடுக்கும் போது ஏற்படுகின்ற உறவு முறைகளை புனைவியல் உறவு முறை என்கின்றோம்.

இவை தவிர உறவுமுறைகளை நெருக்கத்தின் அடிப்படையில் கூட வகைப்படுத்தி உள்ளனர். அதாவது,

முதல் நிலை உறவுகள் – முதல் நிலை உறவினர்களின் வகைப்பாட்டில் பெற்றோர்கள், உடன் பிறந்தோர், பிள்ளைகள் அடங்குகின்றனர். இவர்கள் ஒருவருடன் நேரடியாக உறவு உள்ளவர்களாவர்.

இரண்டாம் நிலை உறவுகள் – முதல் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் ஒருவருக்கு இரண்டாம் நிலை உறவினராகின்றனர். உதாரணமாகத் ஒருவரின் தந்தையின் முதல் நிலை உறவினரான அவருடைய தந்தை குறித்த அந்த நபருக்கு இரண்டாம் நிலை உறவினராகின்றனர்.

இவ்வாறே மூன்றாம் நிலை உறவினர் நான்காம் நிலை உறவினர் என நீண்டு கொண்டே செல்லும் எனினும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் தூரத்து உறவுகள் என்றே கொள்ளப்டபடுகின்றது.

மேலும் சமுதாயங்களில் ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி அல்லது தந்தை வழியில் மட்டும் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். இரு வழி மரபுச் சமுதாயங்களில் தாய்வழி மற்றும் தந்தைவழி என இரண்டையுமே இணைத்துக் கொள்கின்றனர்.

இணை மரபுவழியைக் கையாளும் சமூகத்தினரில் ஆண்கள் தமது குடிவழித் தொடர்பினைத் தைந்தை வழியிலும் அதே போல் பெண்கள் தமது குடிவழித் தொடர்பினைத் தாய் வழியிலும் இணங்காண்பதையும் அவதானிக்க முடிகின்றது.

You May Also Like:

மனநலம் என்றால் என்ன

கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன