இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் | நாளந்தா பல்கலைக்கழகம் |
பழமையான விடயங்களிற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைப்பதோடு அவற்றை பாதுகாத்து பேணவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இன்றைய பதிவில் நாம் இந்தியாவில் பழமையான முதலாவது பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.
நாளந்தா பல்கலைக்கழகம் உருவான வரலாறு
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர் மன்னர்களுள் ஒருவராகிய 1ம் குமார குப்தர் ஆவார். சிறந்த மன்னராகிய 2ம் சந்திரகுப்தரின் மகனே 1ம் குமார குப்தர் ஆவார். புத்தர் காலத்திலும் அதன் பின்னர் வந்த ஹர்ஷர் காலத்திலும் நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்புற்று விளங்கியது.
கன்னோசி நகரை மையமாகக் கொண்டு ஹர்ஷர் ஆட்சி செய்த காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் செழிப்புற்று விளங்கியுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி 5ம் நூற்றாண்டில் புத்தர்களின் காலத்தில் தோற்றம் பெற்றுள்ளதோடு சிறந்த கற்றலின் மையமாக திகழ்ந்துள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்தம், யோகா, வேத இலக்கியங்கள் மற்றும் மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ளன. அதிலும் பிரதானமாக பௌத்த கற்க நெறி பயிற்றுவிக்கப்பட்டதோடு ஒரு மதம் சார் மடாலயம் போன்று விளங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற சீனாவின் பயணியான யுவான்சுவாங் என்பவர் இந்த பல்கலைக்கழகத்தில் வந்து நீண்ட காலம் தங்கியிருந்து கற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் திபெத், சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் வந்து தங்கி கல்வி கற்றுள்ளனர்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் 8 மகா பாடசாலைகளும் 3 மிகப்பெரிய நூலகங்களும் காணப்படுகின்றன. நாளந்தா பல்கலைக்கழகம் மகாவிஹாரா என்று சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகின்றது.
நாளந்தா எனும் சொல் “நா+அலம்+தா” என்னும் சமஸ்கிருத சொற்கள் இணைந்து உருவாகியுள்ளது. இதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.
நாளந்தா பல்கலைக்கழகம் பண்டையகால மகத பேரரசின் கீழ் பீகாரில் உள்ள ராஜகிருதம் பிரதேசத்தில் அமைந்திருந்தது. அதாவது பாட்னாவிற்கு தென்மேற்கே சுமார் 95Km தூரத்தில் பீகாரின் ஷெரிப் துல்லியமாக அமைந்துள்ளது.
தொல்லியல் ஆய்வுகளின்படி நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும் இந்தோனேஷியாவில் உள்ள சைலேந்திரா வம்சத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகம் டில்லியை ஆண்ட சுல்தானிய மம்லுக் வம்ச பக்தியார் கில்ஜி என்பவரால் அழிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட போதும் சில காலங்கள் தற்காலிகமாக இயங்கி வந்துள்ளது.
இந்திய தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போது 1915ம் ஆண்டு 11மடாலயங்களும் 6 செங்கற் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது ஆய்வின் போது சிற்பங்கள், நாணயங்கள், முத்திரைகள், செப்பேடுகள் போன்ற பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் நாளைய நாளந்தா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று இந்த நாளந்தா பல்கலைக்கழகம் சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகாரம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்தியா, தெற்கு, மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் உதவியுடன் மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.
You May Also Like: