கற்பித்தல் என்பது ஒருவர் தனக்கு கிடைத்த அறிவை அல்லது அனுபவத்தை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறரும் பயனடையும் வகையில் அந்த அறிவை அல்லது அனுபவத்தை பிறருக்கு தெரியப்படுத்தல் அல்லது பிறருக்கு படிப்பித்தல் ஆகும்.
கற்றதால் மட்டுமே ஒருவர் சிறந்தவராக முடியாது தான் கற்றவற்றை பிறரும் பயனடையும் வகையில் பிறருக்கும் கற்றுக் கொடுத்தால் தான் அந்த கல்வி மேலும் வளர்ந்து அனைவரும் பயன் பெற முடியும்.
நாம் கற்றுக்கொண்ட கல்வி, எமக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் நமது அறிவை பிறருக்கும் பகிர்ந்து கொண்டால் தான் அவர்களும் பயன்பெறுவார்கள்.
இன்று புதிய விடயங்களை கற்றுக்கொடுக்கவும் பயிற்றுவிக்கவும் பல கல்வி கூடங்கள் தோற்றம் பெற்றுள்ளன. புதிய விடயங்களை கற்றுக்கொள்ள இந்த கல்வி கூடங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அதுமட்டுமின்றி இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியானது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டுக்கு பல இலகுவான வழிமுறைகளை ஏற்படுத்தி தந்துள்ளதோடு பெரும் துணையாகவும் உள்ளது.
கற்பித்தல் வேறு சொல்
- கற்றுக்கொடுத்தல்
- படிப்பித்தல்
- போதித்தல்
- உண்டாக்குதல்
You May Also Like: