அனைவருக்கும் எனது இனிய மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது செயற்பட்ட மாவீரனான கொடிகாத்த குமரன் பற்றியே பேசப்போகின்றேன்.
பிறப்பு
கொடிகாத்த குமரன் ஈரேடு மாவட்டத்தில் சென்னி மலையில் உள்ள மேலப்பாளையம் எனும் இடத்தில் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் நெசவாளர் நாச்சிமுத்து மற்றும் கருப்பாயி ஆவார். இவரது இயற்பெயர் குமாரசாமி ஆகும்.
இவர் பிறந்த சென்னிமலை எனும் ஊரானது கைத்தறிக்கு பெயர் பெற்றதோர் ஊராகும். இவர் ஏழ்மையானவராக திகழ்ந்தார். தனது 14 வயதிலேயே ராமாயி என்பவரை திருமணம் முடித்தார்.
இவர் நாட்டின் மீது தீவிர பற்றுடையவராக காணப்பட்டதோடு சுதந்திர போரட்டதிற்கு பாடுபட்டட ஒரு வீரராகவும் திகழ்ந்தார்.
கல்வி
கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட ஒருவராக காணப்பட்ட இதேவேளை சென்னிமலையில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். தனது ஆரம்ப கல்வியை முடித்ததன் பின்னர் உயர்கல்வி படிப்பதற்கு போதியளவு வசதியின்மை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்.
இவ்வாறானதொரு சூழலில் இவரது பெற்றோர் இவரை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் உயர் கல்வியை படிக்க வைத்தனர். இக்காலப் பகுதியில் தான் சுதந்திர போராட்டத்தில் பங்குபற்றுவதற்கான ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டமும் கொடிகாத்த குமரனும்
இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடிகாத்த குமரனின் பங்கு அளப்பரியதாகும். அகிம்சை வழியில் போராடக்கூடிய ஒருவராகவே இவர் திகழ்ந்தார். காந்தியின் கொள்கைகளை கடைப்பிடித்த இவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவராவார்.
இவ்வாறாக காணப்பட்டதொரு சந்தர்ப்பத்திலேயே 1932ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கமானது தடைசெய்யப்பட்டதோடு காந்தி அடிகளையும் கைது செய்தார்கள். இதன் காரணமாக பாரியதொரு கலவரமாக தீப்பற்றி எரிந்தது.
அதுவரை அமைதியாக இருந்து சுதந்திரம் வேண்டிய மக்களும் போராட்டம் செய்ய துவங்கினர். இந்தியாவில் ஊர்வலம் ஒன்றை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடாத்த மக்கள் முடிவு செய்தனர். இவ்வாறு ஊர்வலமானது இடம்பெறும் போது பொலீஸ் அதிகாரிகள் இவர்களை சரமாரியாக தாக்கினர். இதன்போது இவரும் கடுமையாக தாக்கப்பட்டார்.
கடுமையாக தாக்கப்பட்ட போதும் இவரது கையில் இருந்த கொடிக்கம்பத்தை இவர் விடவே இல்லை. தான் தாக்கப்பட்டு இரத்த வெள்ளம் ஓடிய போதும் தனது கையில் இருந்த சுதந்திரத்தின் அடையாளமான கொடியை விடாது இருந்தமையின் காரணமாகவே இவர் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகின்றார்.
பல சோதனைகள் இவரை ஆட்கொண்ட போதிலும் சுதந்திர போராட்டத்தை கைவிடாது பாடுபட்டவராகவே காணப்படுகின்றார்.
சமூக சீர்திருத்தத்தில் குமரனின் பங்கு
இவர் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூகத்திற்காக அயராது உழைத்தவராவார்.
அதாவது சாதிபாகுபாட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுதல், பெண்களின் உரிமைக்காக போராடல், கல்வியறிவின்மை, மூடநம்பிக்கைகளை இல்லாது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதற்காக அவர் தனது கிராமத்தில் பள்ளிகள், நூலகம் போன்றவற்றை நிறுவ அயராது பாடுபட்டவராவார். சமூகத்திற்கு மத்தியில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டவராகவும் இவர் காணப்படுகின்றார்.
இறப்பு
1932ம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தில் பொலீஸாரினால் தாக்குதலிற்குட்பட்ட இவர் 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் திகதி மரணித்தார். தேகம் மண்ணில் சரிந்தாலும் தேசியக் கொடியை சாய்க்காமல் சுதந்திரத்திற்காக தன் சுவாசத்தை துறந்த ஒரு மாவீரனே கொடிகாத்த குமரன் ஆவார்.
நன்றி.!
You May Also Like: