உலகில் காணப்படும் பல சமயங்களில் எப்போது? யாரால்? எங்கு? தோற்றுவிக்கப்பட்டது என்று இதுவரை காலமும் யாராலும் கண்டறியப்படாத தொன்மை வாய்ந்த இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு உதவிய பல புனிதர்களால் விவேகானந்தரும் ஒருவர் ஆவார்.
சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிறப்பு
- பள்ளிப்படிப்பு
- கல்லூரி வாழ்க்கை
- இராமகிருஷ்ணரை அடைதல்
- முடிவுரை
முன்னுரை
மனிதனாகப் பிறந்து மனித வடிவில் வாழ்ந்து இருந்தால் மட்டும் போதாது. எவ்வாறான விதங்களில் மனிதன் தன்னை மேலோனதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் அனைவரும் அறிந்திருத்தல் அவசியமான ஒன்றாகும்.
எல்லா விதங்களிலும் மேன்மையுற்று விளங்கும் மனிதனை நிறை மனிதன் என்கின்றோம். அவ்வாறு வாழ்ந்து காட்டிய மாமனிதர்கள் விவேகானந்தரும் ஒருவராக காணப்படுகிறார். சுவாமி விவேகானந்தர் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.
பிறப்பு
பாரத தேசத்தின் அழைக்கப்படும் இந்தியாவின் கிழக்கு பகுதியின் வீட்டில் அமைந்துள்ள வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி மகரசங்கராந்தி அன்று சத்திரிய வம்சத்தில் விவேகானந்தர் பிறந்தார்.
இவரது தந்தையின் பெயர் விசுவநாத தத்தர், தாயின் பெயர் புவனேஸ்வரிதேவி என்பதாகும். விவேகானந்தருக்கு பெற்றோர் இட்டப்பெயர் வீரேசுவரன் என்பதாகும்.
பின்பு பிறந்தநாளையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு நரேந்திரநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளிப்படிப்பு
நரேந்திர நாதன் ஐந்து வயதிலேயே திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். இவர் மிகவும் புத்திசாலியாக விளங்கினார். பிறகு சில காரணங்களினால் வீட்டிலேயே அவருக்கு பாடம் புகட்ட ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்தனர்.
இவர் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனமாக அனைத்து விடயங்களையும் கேட்டு அப்படியே அதை மனதில் பதிந்து விடும் திறன் கொண்டவராக காணப்பட்டார்.
சில சமயங்களில் ஆசிரியர் பாடம் புகட்டும் போது கண்ணை சிறிது மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பவன் போன்று ஆசிரியர் புகட்டுவதைக் கேட்டு கிரகித்து கொள்வார்.
இதைக் கண்ட ஆசிரியர்கள் இவனை மந்த புத்திக்காரன் என்றும், தூங்குமூஞ்சி பையன் என்றும் கருதி வந்தனர். ஒரு நாள் அவன் வகுப்பில் தூங்கி விட்டான் என்று ஆசிரியை மிகவும் கோபம் கொண்டார்.
தான் தூங்கவில்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு நரேந்திர நாதன் ஒரு மணி நேரம் ஆசிரியர் சொல்லி வைத்ததை அப்படியே ஒப்பித்தான் இதை கண்டு ஆசிரியர் வியப்படைந்தனர். ஓராண்டு காலத்திலும் இதை சமஸ்கிருதம் நிகண்டு என்ற அமர கோஷத்தை மனப்பாடம் பண்ணி விட்டார்.
கல்லூரி வாழ்க்கை
நரேந்திர நாதன் தன்னுடைய 17 வயது கல்லூரிகள் சேர்ந்தார். அதுவரை காலமும் வேடிக்கை வினோதங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த நரேந்திரநாதன் பாட புத்தகங்களை தவிர மெய்யறிவு ஊட்டும் வேறு சில புத்தகங்களையும் படிக்க ஆர்வம் கொண்டார்.
தாய்மொழியாகிய வங்காளம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் தத்துவ ஞான தர்க்கம் தேச சரித்திரம் முதலியவைகளிளிலும் அவர் மேம்பாடு அடைந்திருந்தார்.
மேலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதிலும் சிறந்த வழங்கினார். அவருடைய மேம்பாடுகளை முன்னிட்டு மாணவர்கள் கூட்டம் ஒன்று எப்போதும் அவரை சூழ்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் வீண் ஆடம்பரத்தையும் சொகுசையும் நரேந்திரன் ஒரு நாளும் ஏற்றுக் கொண்டது இல்லை. சங்கீதத்தில் மிக தேர்ச்சி பெற்றிருந்தார்.
நரேந்திரன் தனது முழு மனதையும் பாட புத்தகத்திலேயே செலுத்தி தேர்வுகளில் சிறப்புடன் இளநிலை பட்டதாரி ஆனார். பின்பு அவர் சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
இராமகிருஷ்ணரை அடைதல்
சிறுவயதில் இருந்தே நரேந்திரனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். மேலும் மனம் அழியும் பாங்குடைய எதிலும் தன்னுடைய வாழ்வு வீணாகி விடக்கூடாது என்று அவர் எண்ணி வந்தார்.
“உற்று நோக்கங்கால் துறவி ஒருவனை மெய்யான வீரன் வேந்தனையும் வெறும் துரும்பெனக் கருதுபவன் மரணத்தை வென்று அப்பாலே நிற்கும் மெய்ப்பொருளை உணர்பவன் சன்னியாசி ஒருவனை” என்ற எண்ணம் இடையிலேயே அவர் உள்ளத்தில் உதிக்கும்.
இவற்றிற்கு விடை காண சுரேந்திரநாத் மித்ராவுடன் சென்று இராமகிருஷ்ணரை சந்தித்து உபதேசம் பெற்றார். இராமகிருஷ்ணன் கருத்துக்களால் கவரப்பட்ட நரேந்திரநாத் அவரின் சீடனாகினார்.
முடிவுரை
உலகின் பல இடங்களுக்கும், மாநாடுகளுக்கும் சென்று இந்து சமயம் சார் பல சொற்பொழிவுகளை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் இறைவனடி எய்தினார்.
கல்கத்தாவில் உள்ள வேலூர் மடத்தில் வாழ்ந்து வந்த இவரது இடம் இன்றும் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அவர் தியானம் செய்த பாறையில் மிக பிரம்மாண்டமான முறையில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
You May Also Like: