இந்தியாவினுடைய அரசியல் வாழ்விலும், தமிழ் பணியிலும் தன்னிகரற்றவராக திகழ்ந்து அனைத்து மக்களாலும் செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்படும் விடுதலை வீரராக வ.உ.சி காணப்படுகின்றார்.
செக்கிழுத்த செம்மல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- தமிழ் வளர்ச்சி
- சுதேசி சங்கம்
- ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கை
- இரட்டை ஆயுள் தண்டனை
- முடிவுரை
முன்னுரை
கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், கன்னித்தமிழ் வளர்த்த கவிஞர், செக்கிழுத்த செம்மல் என மக்களால் அன்புடன் போற்றப்படுபவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஆவார்.
இவர் இந்திய நாட்டின் மக்களின் விடுதலைக்காக ஆங்கிலேயருக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வீரராக காணப்படுகின்றார். இவரைப் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.
ஆரம்ப வாழ்க்கை
செக்கிழுத்த செம்மல் அவர்கள் 1862 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
இவர் திண்ணை பள்ளிக்கூடத்தில் வீரப்பெருமாள் அண்ணாவி என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். இவரது தந்தை இவருக்கு ஆங்கில மொழியை கற்பிக்க விரும்பி அவருடைய சொந்த செலவில் ஒட்டப்பிடாரத்தில் புதிய பாடசாலை ஒன்றை கட்டினார்.
புதிய பள்ளியில் சில காலம் கல்வி பயின்ற செக்கிழுத்த செம்மல் அவர்கள் பின்பு தூத்துக்குடி சென்று செயின்ட் பிரான்சிஸ் சேவியர், உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சட்டப் படிப்பை பயின்று வழக்கறிஞராக தொழில் புரிந்தார்.
தமிழ் வளர்ச்சி
தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் தாய் மொழியான தமிழ்மொழி மீது தனியாக தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதைகளையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.
இவரது தமிழ் பற்று பாரதியாருடன் இவர் கொண்டிருந்த நட்பின் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது. இவர்கள் சுமார் 15 வருடங்கள் இணைபிரியாத நண்பர்களாக காணப்பட்டனர்.
சுதேசி சங்கம்
தாய் நாட்டின் விடுதலைக்காக தமிழகத்தில் இருந்த பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் செக்கிழுத்த செம்மல் ஆவார்.
அரசியல் வாழ்க்கையை பாலகங்காதர திலகரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க விரும்பி அரசியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
இதன் காரணமாகவே இவர் கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அழைக்கப்படுகின்றார்.
ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கை
இந்திய நாட்டின் விடுதலைக்காக இவர் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டார். ஆங்கிலேயரே விரட்டுவதற்கு கடல் ஆதிக்கம் நமக்கு தேவை என்று எண்ணியே சுதேசி நாவாய் சங்கம் என்ற கம்பனியை நிறுவினர்.
இவருடைய முதல் எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் வணிகமே ஆகும். பல போராட்டங்களை தாண்டி எஸ்.எஸ். காலியோ மற்றும் எஸ்.எஸ் லாவோ என்ற நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த கப்பல்களை வாங்கினார்.
சுதேசி கப்பல் நிறுவனம் மக்களை அரசியல் படுத்தியதுடன் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்க செய்தது.
இரட்டை ஆயுள் தண்டனை
செக்கிழுத்த செம்மல் அவர்களின் சுதந்திர போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர்கள் அரசாங்கத்தை அவர் அவமதிப்பதாகவும் சுதந்திரத்திற்காக பொதுமக்களை தூண்டியதாகவும் எனக் கூறி இவர் மீது வழக்கு பதிவு செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர்.
இதன் விளைவாக இவர் 198 ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கு இழுக்க வைக்கப்பட்டார். இதன் காரணமாகவே இவர் “செக்கிழுத்த செம்மல்” என அழைக்கப்படுகின்றார்.
முடிவுரை
இந்திய நாட்டின் மக்களின் சுதந்திரத்திற்காக பல பணிகளை ஆற்றிய செக்கிழுத்த செம்மல் அவர்களை நினைவு கூறுவதன் மூலம் இன்றைய ஜனநாயகத்தில் மக்களிடமும் அரசியலிடமும் தூய்மையும் முன்னேற்றமும் ஏற்படும்.
You May Also Like: