இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிகவும் கணிசமான அளவில் வெளிப்படுவதனை காணலாம். அதன் அடிப்படையில் இன்று உலகில் காணப்படக்கூடிய அனைத்து துறைகளிலுமே இந்த செயற்கை நுண்ணறிவின் பிரயோகம் மற்றும் பங்கு பற்றுதல் இருப்பதனை காண முடியும்.
செயற்கை நுண்ணறிவு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- செயற்கை நுண்ணறிவின் வகைகள்
- செயற்கை நுண்ணறிவுக்கு மனிதனை வெல்ல முடியுமா
- செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
- செயற்கை நுண்ணறிவின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
இந்த உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்ற போதிலும் அவற்றில் சிந்தித்து செயல்படும் ஆற்றல் மிக்க ஓர் உயிராகவே மனிதன் காணப்படுகின்றான். இவ்வாறு யோசனை செய்து செயல்படக்கூடிய திறமையோடு உருவாக்கப்படக்கூடிய இயந்திரங்களினையே செயற்கை நுண்ணறிவு என குறிப்பிட முடியும்.
நமது தகவல்களை வைத்துக்கொண்டு எமக்கு எதுவெல்லாம் தேவையோ அவற்றை யூகித்து வழங்குவதே செயற்கை நுண்ணறிவு என குறிப்பிடலாம். உதாரணமாக கூகுள் போன்ற நிறுவனங்களை குறிப்பிடலாம்.
செயற்கை நுண்ணறிவின் வகைகள்
செயற்கை நுண்ணறிவை பொதுவாக இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும். அவை இரண்டு பற்றியும் பின்வருமாறு அறியலாம். முதலாவது general artificial intelligence என்பதாகும். அதாவது இயந்திரங்களும் மனிதர்களைப் போலவே எல்லா வகையிலும் யோசித்து செயல்படக்கூடிய வகையாகும்.
இது தற்காலங்களை பொறுத்தவரையில் அதிக அளவில் வளர்ச்சிப் பெறவில்லை, எனினும் வரக்கூடிய காலங்களில் துரிதமாக வளர்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்து இரண்டாவது வகையாக narrow artificial intelligence என்பது காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இயந்திரங்கள் யோசித்து செயல்படுவதாக உருவாக்கப்படுவதையே இவ்வாறான வகையாகும். இவ்வகை இயந்திரங்கள் உலகில் அதிகமாக பயன்பாட்டில் இருப்பதனை நாம் காண முடியும்.
செயற்கை நுண்ணறிவுக்கு மனிதனை வெல்ல முடியுமா
தக்காலங்களில் அதிகமான மக்களிடையே எழக்கூடிய ஒன்றாகவே செயற்கை நுண்ணறிவுக்கு மனிதனை வெல்ல முடியுமா? என்ற வினா காணப்படுகிறது. அதன் அடிப்படையில் காலத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாகுவது இயல்பானது தான்.
செயற்கை நுண்ணறிவு என்பது தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிகழ்த்தும் ஒரு யூகமாகவே காணப்படுகின்றது. இது தன்னிச்சையாக இயங்குகின்றது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில் தான் இயங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரம் மனிதனின் மூளையின் அளவுக்கு செயல்படுமா என்பதும் கேள்விக்குறியே! ஆகவே பல்வேறு அறிஞர்களின் கருத்துப்படி செயற்கை நுண்ணறிவை விட மனித மூளை செயத்திரன் மிக்கது. என்ற கருத்து வெளிப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
செயற்கை நுண்ணறிவானது கணினி அறிவியல், கணிதம் மற்றும் பிற சிக்கலான அறிவியல்களின் மிகவும் சிக்கலான கலவையை பயன்படுத்துகின்றது. செயற்கை நுண்ணறிவின் மூலம் பல்வேறு நன்மைகளும் இந்த உலகிற்கு கிடைக்கத்தான் செய்கின்றன.
தவறுகளை குறைத்தல், கடினமான ஆய்வுகளில் ஈடுபட உதவுதல், மருத்துவத் துறைகளில் பயன்படுத்தப்படல், டிஜிட்டல் உதவியாளராக செயல்படுதல், தரவுகளை ஒழுங்கமைத்தலும், நிர்வாகம் செய்தலும் மற்றும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் நிதி மோசடிகளை கண்டுபிடிக்க முடிதல் போன்ற பல்வேறு நன்மைகள் இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் கிடைக்க பெறுவதனை காண முடியும்.
செயற்கை நுண்ணறிவின் தீமைகள்
செயற்கை நுண்ணறிவின் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவது போலவே பல்வேறு தீமைகளும் கிடைக்கின்றன.
அதன் அடிப்படையில் அதிகமான செலவுகளை கொண்டு காணப்படுதல், சில சமயங்களில் சரியாக மனிதர்களை பிரதிபலிக்காது விடுதல், அனுபவத்தின் மூலம் முன்னேற்றம் எதுவும் அடைய முடியாமை, படைப்பாற்றல் திறன் காணப்படாமை மற்றும் மிகவும் முக்கியமான ஒரு தீமையாக செயற்கை நுண்ணறிவின் துரிதமான வளர்ச்சிகளின் காரணமாக மனிதர்களுக்கு வேலையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் மேற்கண்டவாறான தீமைகள் கிடைக்கப்பெறுவதனையும் நாம் இங்கு குறித்து காட்டலாம்.
முடிவுரை
இன்றைய உலகில் கலைத்துறை தொடக்கம் மருத்துவத்துறை வரை அனைத்து துறைகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை கணிசமான அளவில் காணமுடிகின்றது.
தற்காலங்களில் இவை பெருமளவுக்கு மனிதனுடைய வாழ்வினை சுவாரஷ்யமானதாகவும், எளிமையானதாகவும் மாற்றியமைத்திருந்தாலும் கூட வரக்கூடிய எதிர்காலங்களில் இதன் மூலம் மனிதன் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பாறியதொரு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
You May Also Like: