சொல் என்றால் என்ன

சொல் என்றால் என்ன

நாம் கூற விரும்புகின்றவற்றை ஏனையோர் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது முக்கியமானதொன்றாகும். அந்த வகையில் நாம் கூற விளையும் கருத்துக்களை தெளிவாக எடுத்தியம்புவதற்கு சொல்லானது துனணபுரிகின்றது.

சொல் என்றால் என்ன

சொல் என்பது யாதெனில் தமிழில் சில எழுத்துக்கள் தனித்து நின்று பொருள்தர கூடியதும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுடன் தொடர்ந்து வந்தும் பொருள் தருகின்றது. இவ்வாறு பொருள் தருபவற்றையே சொல் என குறிப்பிடலாம்.

சொல்லின் பண்புகள்

சொல்லானது இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறித்து வரக்கூடியதாகும். மேலும் மூவகை இடங்களிலும் அமைந்து காணப்படும்.

உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் அமையப் பெற்று வரும். சொல்லானது வெளிப்படையாகவும் குறிப்பாகவும் அமையப் பெற்று காணப்படும். இவ்வாறாக சொல்லின் பண்புகளை குறிப்பிடலாம்.

சொல்லின் வகைகள்

சொல்லானது இலக்கணம் மற்றும் இலக்கியம் என இரண்டு வகையாக வகைப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. அந்த வகையில் சொற்களின் வகையினை பின்வருமாறு நோக்கலாம்.

இலக்கண அடிப்படையில் சொற்களின் வகை

இலக்கண அடிப்படையில் சொல்லை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைகளாக காணப்படுகின்றது.

பெயர்ச் சொல்

ஒரு சொல்லானது பெயரை சுட்டி நிற்குமாயின் அச்சொல் பெயர்ச்சொல் எனப்படும். அதாவது ஏதேனுமொரு பெயரை தாங்கி நிற்கும் எனலாம். பெயர்சொல்லானது ஆறு வகையாக காணப்படுகின்றது.

உதாரணம் – பூனை, கமலா

வினைச்சொல்

ஒரு பொருளின் செயலை குறித்து நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

உதாரணமாக, மாலா பாடினாள் இவ்வசனத்தில் பாடினாள் என்பது வினைச்சொல்லாகும். இவ்வாறு முடிவு பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.

இடைச் சொல்

இடைச் சொல் என்பது தனித்து இயங்காமல் பெயருடனும், வினையுடனும் இணைந்து வரும் சொற்களே இடைச் சொல் எனப்படும். அந்தவகையில் இடைச்சொல்லானது (ஐ ஆல் கு இன் அது கண்) என்ற ஆறு வேற்றுமை உருபுகளை ஏற்று வரக்கூடியதாகும்.

உதாரணம்- கத்தியால் குத்தினான் – ஆல் உருபு இடம்பெறுகின்றது.

உரிச்சொல்

உரிச் சொல் என்பது செய்யுளிற்கே உரிய சொல்லினை உரிச் சொல் என குறிப்பிடலாம். அதாவது உரிச் சொல்லானது தனித்து பொருள் தந்தாலும் அது தனியாக வருவதில்லை ஏனெனில் உரிச் சொல்லானது பெயரையோ, வினையையோ சார்ந்தே வரும் எனலாம்.

மேலும் ஒரு சொல் பல பொருளிலும் பல சொல் ஒரு சொல்லிலும் வரக்கூடியதாக இந்த உரிச்சொல் காணப்படும்.

உதாரணம்- ஒரு சொல் பல பொருள்:- கடி (மணம், கூர்மை, விரைவு) போன்ற பொருளினை கொண்டுள்ளது எனலாம்.

கடி மலர் – மணமுடைய மலர்
பல சொல் ஒரு பொருள் :- (சால, உறு, தவ, நனி)
சால – மிகுதி, உறு பசி- மிகுந்த பசி, தவச் சிறிய- மிகவும் சிறியது போன்றனவற்றை உதாரணமாக கொள்ளலாம்.

அந்ந வகையில் இலக்கண அடிப்படையில் சொற்களின் வகையினை நோக்கமுடிகின்றது.

இலக்கிய அடிப்படையில் சொற்களின் வகைகள்

இலக்கிய அடிப்படையில் சொற்களை நான்கு வகைகளாக வகைப்படுத்துவர். அவையாவன இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பனவாகும்.

இயற்சொல்

கற்றவர், கல்லாதவர் என அனைவரும் பொருள் விளங்கக்கூடிய வகையில் அமைந்துள்ள சொல்லே இயற் சொல்லாகும். இந்த இயற்சொல்லானது பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இரு வகைப்படும்.

உதாரணம்- நடந்தான்

திரி சொல்

திரி சொல் என்பது கற்றோர்களுக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடியதாகும் காணப்படுகின்ற சொற்கள் திரி சொற்கள் எனப்படும். திரிசொல்லானது ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரி சொல் என இரண்டு வகையாக காணப்படுகின்றது.

உதாரணம்- அழுவம் – கடல், உறுபயன்- மிகுந்த பயன்

திசைச் சொல்

பிற மொழியில் இருந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்களாகும்.

உதாரணம்- கேணி- கிணறு

வடசொல்

வடசொல் என்பது வடமெழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வட சொல் எனப்படும். வடசொல்லானது தற்சமம், தற்பவம் என இரு வகைப்படும்.

You May Also Like:

படர்க்கை என்றால் என்ன

அளபெடை என்றால் என்ன