அன்பார்ந்த வாசகர்களே! சருமத்தின் மீது அக்கறையுள்ள அன்பானவர்களே! கன்னத்தில் மங்கு என்று சொல்லப்படுகின்ற கரும்புள்ளிகள் உருவாக காரணம் மொலஸ்மா ஆகும். இன்றைய பதிவில் நாம் முகத்தின் மீது ஏற்படும் மங்குகளை போக்குவதற்கான இயற்கையான வழிகளைப் பார்ப்போம்.
முகத்தில் உள்ள மங்கு மறைய டிப்ஸ்
வில்வங்காய் அரைத்து காய்ச்சாத வெறும் பசும்பாலுடன் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து இரவு நேரங்களில் பூசி காலையில் கழுவிவர மங்குகள் மறையும்.
நித்தியமல்லி பூக்களின் 5 இலைகளை எடுத்து சுத்தமாக்கி அதனை நன்கு பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்தெடுத்து வெண்ணெய் அல்லது பால் ஏடு கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு பூசி காலையில் கழுவி வர முகத்தில் உள்ள மங்குகள் மறையும்.
1 ஸ்பூன் கசகசாவுடன் 2 வேப்பம் வித்துக்கள், 2 துளசி இலைகள் என்பவற்றை நன்கு அரைத்து பாசிப்பருப்பு மாவை சேர்த்து பேஸ்ட் போன்ற பதமாக்கி முகத்தில் தடவி 2 மணி நேரம் கழித்து தூய நீரினால் கழுவிவர முகத்தில் உள்ள மங்குகள் அழிந்து விடும்.
புழுங்கல் அரிசி வடித்த கஞ்சி நீர் கெட்டியான பதம் ஆகும் வரை வைத்திருந்து அதனுள் மஞ்சள் தூள், வெண்ணெய் போன்றவற்றை சம அளவில் சேர்த்து பேஸ்ட் போன்று ஆக்கி மங்கு உள்ள இடங்களில் மசாஜ் செய்து காய வைத்து பின்னர் முகத்தை கழுவ வேண்டும். தினமும் 2 வேளை இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள மங்குகள் மெதுமெதுவாக மறையத் தொடங்கும்.
திப்பிலியை வறுத்து பொடியாக்கி தேனைக் கலந்து பேஸ்ட் போன்ற பதமாக்கி முகத்தில் பூசி 2மணி நேரம் காயவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர முகத்தில் உள்ள மங்குகள் மறையும்.
10g கோஷ்டம் நார்த்தம்பழச் சாற்றுக்குள் ஊற வைத்து பின்னர் அதனை அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் மங்கு உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் வரை காய வைத்து அதன் பின்னர் இளம் சூடான நீரினால் கழுவி வர மங்குகள் அழியும்.
முற்றிய பூவரச இலைகள் சில எடுத்து காய வைத்து அவற்றை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் குழைத்து மங்கு மீது பூசி வர சில நாட்களில் மங்குகள் மறையும்
காய்ந்த பூவரசங்காயை எடுத்து அரைத்து எலுமிச்சம் சாறு விட்டு குழைத்து மங்கு உள்ள இடங்களில் பூசி வர மெதுமெதுவாக மங்குகள் மறைந்து விடும்.
ஜாதிக்காய் மற்றும் நாயுருவி இலையை அரைத்து பேஸ்ட் போன்ற பதமாக்கி முகத்தில் உள்ள மங்கு மீது தடவி வர மங்குகள் மறையும்.
கற்றாளை சோற்றை மங்கு மீது தடவி வர மங்குகள் மறைந்து விடும்.
குமட்டிக்காயை எடுத்து இரு பாதியாக வெட்டி மங்குகள் மீது தடவி வர முகத்தில் உள்ள மங்குகள் மறையும்.
சரக்கொன்றை மர வேரினது பட்டையை அரைத்து பொடியாக்கி பசும்பாலுடன் கலந்து மங்கு மீது தடவி வர சில நாட்களில் மங்கு மறைந்து விடும்.
முகத்தில் சிறிய மச்சம் போல ஆரம்பித்து பெரிய படை போல் முகம் முழுதும் பரவும் மங்கு எனப்படும் கரும்படையைப் போக்க மேற்குறிப்பிட்ட இயற்கை வழிகளைப் பின்பற்றி நற்பயன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
You May Also Like: