அம்மா பற்றிய பேச்சு போட்டி

அம்மா பற்றிய பேச்சு போட்டி

அம்மா பற்றிய பேச்சு போட்டி

உலகத்தை படைத்தவன் கடவுளாக இருந்தாலும் தாய்மையையும், ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் சக்தியை கடவுள் அம்மாவிற்கே வழங்கி இருக்கின்றார். அம்மா என்கிறவள் பத்து மாதம் எம்மை வயிற்றில் சுமக்கிறாள் அதற்கு பிறகு பிரசவ வலியை அனுபவிக்கின்றால் அதுமட்டுமா நா‌ம் பிறந்ததிலிருந்து அவள் தன் மடியிலும், மனதிலும் சுமக்கிறாள். அவள் எங்களுக்காக அவளையே அர்ப்பணித்து விடுகிறாள்.

தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் இருக்கிறது. தனக்கு உயிரே போகுமளவு கஷ்டம் வந்தாலும் தனது குழந்தைக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று சகித்துக் கொள்கின்றது தாய்மை.

காட்டில் தன் குட்டியை காக்க தாய் செய்யும் வேலைகள் எம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது. மிருகங்கள் கூட தன் குட்டியை விட்டுக் கொடுக்காது. அதே போல் தான் எம்மம்மாவும் அவர்களுடைய பிள்ளையான எங்களையும் எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை.

அம்மா இல்லாமல் இவ்வுலகில் நாங்கள் யாரும் வாழ்வது சாத்தியமல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை பெற்றெடுத்து விட்டு மட்டும் இருக்காமல் தன் குழந்தை சிரிப்பதையும், அழுவதையும் ரசித்து அவர்களுக்கு அழகான ஆடை அணிவித்து அன்பான முறையில் சாப்பாடு ஊட்டி பிறகு படிக்கும் வயதை அடைந்தவுடன் பாடசாலையில் சேர்த்து படிக்கவைத்து சமூகத்திற்கு ஒரு சிறந்த பிரஜையாக வளர்வதற்கு அவர்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

ஆனால் அம்மாவுடைய அன்பும், அரவணைப்பும் இல்லமால் ஒரு குழந்தை வளர்வது மிகவும் கடினமான விடயம். அது அவ்வளவு எளிதல்ல. அம்மாவுடைய மனது எம்மில் யாருக்கு வரும்? நாங்கள் செய்யும் சில பல குற்றங்களால் அவர்கள் படும் வேதனையையும், அவமானத்தையும் நாங்கள் யாரும் உணர்வதில்லை.

ஆனால் நாங்கள் ஒரு நற்செயல் செய்தால் போதும் அவர்களின் வேதனை பறந்து விடும். எங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் போதும் அவர்கள் படும் கஷ்டத்திற்கு அளவே இல்லை . பகலில் மட்டும் கவனிக்காமல் இரவிலும் கண் விழித்து கவனிக்கின்றார்கள்.

யார் எம்மை இப்படி கவனிப்பார்கள்? அம்மாவை தவிர வேறு யாரும் எமக்கு இவ்வளவு அக்கறை காட்டமாட்டார்கள். அன்பின் மறுப்பெயர் அம்மா. அம்மாவின் பாசத்திற்கு வேறு ஏதும் ஈடாகாது.

கொடூரமான மனம் படைத்த பிள்ளைகளைக் கூட தாய் பாசம் பணிய வைத்து விடும். இந்தியாவில் ஓர் லட்சிய பெண் தாயே. உலகில் எந்த இடத்திலும் கெட்ட பிள்ளைகள் உண்டு ஆனால் எந்த இடத்திலும் கெட்ட அம்மாக்க‌ள் இல்லை.

இதற்கு இதிகாசத்திலும் சான்று உண்டு. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது என்று இஸ்லாமியர்களின் வேதமான புனித அல் குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட எந்த நிலையில் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. ஆனாலும் இந்த உலகத்தில் தன் அம்மாவை உதாசீனப்படுத்துபவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

அம்மா என்ற ஒரு சொல் அன்பின் உச்சக்கட்டம் என்று புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவள் இல்லாத போது தான் அவளின் அருமை புரியும். தாயிடம் நாம் எந்த ஒரு கடமையையும் எப்போதும் எதிர்பார்த்து செய்யக்கூடாது. நம்முடைய பிறப்பிற்காக இறப்பின் வாசல் வரை சென்று வரும் அன்பின் சிகரம் தான் அம்மா.

இளமை காலத்திலிருந்து நம்மை பாதுகாத்து வளர்த்து வந்த அம்மாவுக்கு நன்றி கடனாக அவர்களை இறுதி காலம் வரை வைத்து பாதுகாப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமையாகும்.

You May Also Like:

மொழியின் சிறப்பு கட்டுரை

சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை