அரசு பொருட்காட்சி கட்டுரை

arasu porutkatchi katturai in tamil

அரசாங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஓர் நிகழ்வாகவே இந்த அரசு பொருட்காட்சி காணப்படுகின்றது. அதாவது எமது இந்திய நாட்டின் பல்வேறு துறைகளும் சங்கமிக்கும் ஓர் ஆட்சி மைதானமாக இந்த பொருட்காட்சி காணப்படும்.

அரசு பொருட்காட்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பல்துறைகளின் சங்கமம்
  • உணவு விடுதிகள்
  • விளையாட்டு மையம்
  • கலைநிகழ்ச்சிகளும் பொழுதுபோக்குகளும்
  • முடிவுரை

முன்னுரை

அரசின் பொருட்காட்சி என்பது அரசாங்கத்தினால் ஒரு நகரத்தின் பெரும் பகுதியை தெரிவு செய்து அங்கு நிகழ்த்தப்படும் பொருட்காட்சி ஆகும். இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை அறிய முடியும்.

இந்த பொருட்காட்சி சிறுவர்களை மாத்திரம் அல்லாமல் பெரியவர்கள் என அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அலங்கார பந்தல்களும், வெளிச்ச விளக்குகளுடனுமே தொடர்ந்து சில நாட்களுக்கு நடைபெறக்கூடிய நிகழ்வாக காணப்படும்.

பல்துறைகளின் சங்கமம்

அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அரசு பொருட்காட்சிகளில் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் பல்வேறு நிறுவனங்கள் உட்பட தனியார் துறை நிறுவனங்கள் பலவும் பங்கு கொள்வதனை காணலாம்.

அதாவது விவசாயம், தொழில்நுட்பம், விளையாட்டு, உணவு, கலை போன்ற பல்வேறு துறைகளின் சங்கமமாகவுமே இந்த அரசு பொருட்காட்சி விளங்கும்.

ஆகவே புதிய பொருள் ஒன்றின் சந்தைப்படுத்தலையும், பொருட்களுக்கான நியாய விலைகளை அறியவும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளவும் இது வாய்ப்பாக அமைகின்றது.

உணவு விடுதிகள்

காலையில் தொடங்கி இரவு வரைக்கும் அரசு பொருட்காட்சிகள் சில நாட்களுக்கு நடைபெறுவதனால் அங்கு பார்வையிட வரும் மக்களின் உணவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு உணவுப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

அவற்றுள் சைவ உணவுகள், அசைவ உணவுகள், மேற்கத்திய உணவுகள், பாரம்பரிய உணவுகள் என பல வகையான உணவுகளையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விளையாட்டு மையம்

பொதுவாகவே அரசு பொருட்காட்சிகளில் விளையாட்டு வேடிக்கை அம்சங்களும் முக்கியமான ஒன்றாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதற்கான ராட்டினங்கள் அதாவது வானுயர் அளவுக்கான பல்வேறு வகைகளிலான ராட்டினங்களும், விளையாட்டு புகையிரத பயணங்கள், பல்வேறு வகையான ஊஞ்சல்கள் என அரசு பொருட்காட்சியில் செல்லும் மக்களின் ஆர்வங்களை தூண்டும் வகையிலான விளையாட்டுக்கள் காணப்படுவதனையும் பார்க்கலாம்.

கலைநிகழ்ச்சிகளும் பொழுதுபோக்குகளும்

அரசு பொருட்காட்சிகளில் ஒரு முக்கிய அம்சமாகவே கலைநிகழ்ச்சிகளும் பொழுதுபோக்குகளும் காணப்படுகின்றன.

அதாவது அரசு பொருட்காட்சி நாட்களின் இரவுப் பகுதிகளில் தமிழர்களின் பண்பாட்டு மரத்தினை நினைவூட்டும் வகையிலான காமன் கூத்து, பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம் மற்றும் கம்பராமாயணம், மகாபாரதம் போன்று நாடகங்களும் அரங்கேறுவதனை காணலாம்.

இவ்வாறான பாரம்பரிய அம்சங்களுடன் பல்வேறு இசை நடன நிகழ்வுகளும் மக்களுக்கு பொழுது போக்காக அமையும்.

முடிவுரை

அரசாங்கத்தின் திட்டங்களையும், சாதனைகளையும் இவ்வாறான அரசாங்க பொருட்காட்சிகளின் மூலம் மக்களுக்கு தெளிவு ஊட்டுவதற்கான வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அரசு பொருட்காட்சிகள் மக்களுக்கு பல்வேறு வகையிலும் பயன்படுபனவாகவும், உதவுவதாகவும் காணப்படுவதோடு தற்கால கனதியான வாழ்க்கையில் சில மணி நேரங்களை மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்குக்காகவும் கழிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like:

வாழ்வின் ஐந்து பருவங்கள்

தென்னை மரத்தின் பயன்கள்